எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- III 57-1006 553. நமக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையைச் சுற்றிலுமான இந்த அற்புதமான ஐக்கியத்திலும், ஆராதனையிலும் எதிர்பார்ப்போடு மீண்டுமாய் இங்கே இன்றிரவு கூடாரத்தில் இருக்கும்படியாய் உள்ளதோ…நாம் இந்த ஆசீர்வாதங்களுக்கு பங்காளிகளாயிருக்க வேண்டுமென்றே…விரும்புகிறோம். 554 தேவன் இந்தக் காலை காலை செய்தியினால் ஆசீர்வதித்ததுபோல, இன்றிரவு அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று மாத்திரமே நான் நம்புகிறேன். நான் என்னுடைய அண்டை வீட்டார், திருமதி உட் அவர்களோடு சற்றுமுன் பேசிக்கொண்டிருந்தேன், திரு.உட் மற்றும் அவர்களுமாக, நாங்கள் அதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். சகோதரன் நெவில் பிரசங்கித்திருந்த எல்லா அருமையான பிரசங்கங்களிலும் மிக அருமையாக பிரசங்கித்த பிரசங்கமாய் அவருடைய பிரசங்கம் அன்று இருந்தது என்று நான் நம்புகிறேன், அவர் இதுவரை பிரசங்கித்திருந்ததிலேயே மேலானதாய் எனக்கு அந்த ஒன்று இருந்தது. எனவே நான் நிச்சயமாகவே அந்த அற்புதமான பிரசங்கத்தை போற்றிப் பாராட்டினேன். அது எனக்கு தைரியத்தை அளித்துள்ளது, அது என்னை ஒழுங்குபடுத்தியது. ஆகையால் நான்—நான் அந்த சத்தியத்தை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் தைரியமாயிருக்க வேண்டிய, தைரியமான பகுதிகளைக் குறித்து நீங்கள் அறிவீர்கள், எப்படி…தாவீது அங்கே இருந்தான், அவன் எப்படி…அந்தப் பெரிய சோதனையில், “கர்த்தாவே, நான் போய் இதைச் செய்வேன், நீர் எனக்கு உதவி செய்யும்” என்று கூறுவதற்குப் பதிலாக, அவன் காத்திருந்து, என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடத்தில் போய்க் கேட்டான். அவன் ஏபோத்தைக் கொண்டுவந்து, “இப்பொழுது நாம் நின்று, ‘இந்த நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று தேவனிடத்தில் கேட்போம்” என்று கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, அது உண்மையாகவே ஐஸ்வரியமானதாயிருந்தது. அது தேசத்தில் உள்ள எல்லா மருந்து கடைகளிலும் வைத்துள்ள ஊட்டசத்துக்களைக் காட்டிலும் அதிகமானதாயிருந்தது. ஆம் ஐயா, அது உண்மையாகவே உங்களுக்கு நன்மை செய்கிறது. 555 இப்பொழுது, இன்றிரவு, நாம் கூடுமான வரை இந்தக் கேள்விகளின் பேரில் நாம்—நாம் நள்ளிரவைத் தாண்டி தரித்திருக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை. ஆகையால் நாம்—நாம் உடனடியாக அவைகளுக்குள்ளாக நேரடியாக செல்லப் போகிறோம். இது இந்த கேள்விகளை முடித்துவிடவதாய் உள்ளது, ஒவ்வொரு முறையும் நான் அவைகளை முடித்துவிட, துவங்கும்போது…இப்பொழுது, சகோதரி ஹாட்டி, நான் அதைப் பொருட்படுத்திக் கூறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான்—நான் அதை வெறுமென கூறிக்கொண்டிருந்தேன், பாருங்கள்; சரி. ஆனால் ஒரு ஊழியக்காரரிடத்திலிருந்து இங்கே உண்மையாகவே கடினமான சில கேள்விகளைப் பெற்றுக்கொண்டேன், அவைகள் உண்மையாகவே பதிலளிப்பதற்கு கடினமாய் உள்ளன. உங்களுக்குத் தெரியும், அந்தப் பிரசங்கிமார்கள், அவர்கள் உங்களைக் கேட்பதற்கு முன்னர் தங்களுடைய சொந்தப் பதிலைக் கண்டறிய முயற்சித்து வேதாகமத்தினூடாக அதை சுற்றிப் புரட்டுகிறார்கள், நீங்கள் பாருங்கள். ஆகையால்…இது ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இங்கே மிக, மிக உயரிய மிக விசேஷித்த எட்டு வேதாகம கேள்விகளை கேட்டுள்ள என்னுடைய ஒரு ஊழியக்கார நண்பரிடத்திற்கு ஜார்ஜியாவிற்குச் செல்கிறது. 556 இப்பொழுது இந்த வருகிற வாரத்தில் எங்களுக்காக ஜெபிக்க மறந்துவிடாதீர்கள். 557 என்னுடைய மனைவி மேம்பட்ட நிலையில் இருக்கிறாள். அவள் இப்பொழுது பெலனடைந்து வருகிறாள், இன்றைக்கு அவள் சமைக்க உதவி செய்தாள். கனடாவிலிருந்து எங்களுடைய அருமையான நண்பர்களான, சகோதரன் மற்றும் சகோதரி சாத்மனும், இங்கே எங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாகவே அவர்களுடைய வருகையைப் பாராட்டுகிறோம். என்னுடைய மனைவி, அவர்கள் வந்து கொண்டிருந்ததை அறிந்து, ஏன்? அவள் இந்த அருமையான கிறிஸ்தவ ஜனங்களை உபசரித்து ஐக்கியமாயிருக்க ஏற்பாடுகளை செய்யப்போவதாயிருந்தாள். சகோதரன் பிரட்டி இன்றிரவு நம்மோடு இருப்பதற்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம், சகோதரி பிரட்டும்…அவள் இந்தக் காலை இங்கு இருந்தாள், ஆனால் அவள்…இல்லை, அது உண்மை, அவள் மேடாவோடு இருக்கிறாள், நாங்கள் வரும்போது, மேடாவோடிருக்கும்படி அவள் தங்கிவிட்டாள், ஏனென்றால் இன்றிரவு இராபோஜனமும், பாதங் கழுவுதலும் உள்ளபடியால் சற்று காலதாமதமாகும் என்பதை நான் அறிவேன். ஆகையால் அவர்கள் இருப்பதற்கு, புதியதான வருகையாளர்கள் எங்களோடிருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். 558 இப்பொழுது, நாம் இந்தக் கேள்விகளை எடுத்து பதிலளிக்க முயற்சிக்கத் துவங்கும் முன்னர்…நான்—நான் தவறாக பதிலளிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பாருங்கள், நான்—நான் செய்கிற ஒவ்வொரு காரியமும் சரியென்று உரிமை கோரவில்லை. நான்—நான் சரியாயிருக்க முயற்சிக்கிறேன், ஆனால் நான்—நான் தவறாயிருக்கலாம். நான் தவறாயிருந்தால், அப்பொழுது நீங்கள் என்னை மன்னியுங்கள்; தேவனும் கூட மன்னிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் நான் தவறாயிருக்க வேண்டுமென்று பொருட்படுத்திக் கூறவில்லை. நான் அவைகளுக்கு பதிலளிக்க வெறுமென…இல்லை வெறுமென அந்தவிதமாக நான்…தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறதில்லை, நான் என்னுடைய அறிவிற்கு எட்டினவரை மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்கிறேன், பாருங்கள். நான் ஒரு வேதாகம கேள்வியின் பேரிலான என்னுடைய கருத்துகளை மாற்றியமைக்க வேண்டுமானால், செய்யும்படியான அந்தக் காரியத்தை நான் யோசித்துப் பார்க்கிறேன். தேவனுடைய வார்த்தைக் கூறும்போது, எந்த நேரத்திலும் நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்; ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 559 இப்பொழுது நாம் வழக்கமாக இன்றிரவும் வியாதியஸ்தருக்காக மீண்டும் ஜெபிக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் அப்படியே வியப்புறுகிறீர்கள்; ஓ இங்கே இந்த சிறு கூடாரத்தில் உள்ள ஜனங்களை விட சிறிய ஒரு குழுவினருக்கு நீங்கள் ஜெபிக்கும்போது, சில நேரங்கள் நீங்கள் காண விரும்புகிற பலன்களை நீங்கள் காண்கிறதில்லை. ஆனால் நீங்கள் செய்துகொண்டிருக்கிற காரியமென்னவென்றால், நீங்கள் ஏறக்குறை இருநூறு பேர்களிடத்திலிருந்து பலனின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பெரிய கூட்டங்கள் ஒன்றிலோ நீங்கள் எங்காயினும் மூவாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர்களிடத்திலிருந்து பலனின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம், நீங்கள் பாருங்கள், இன்னும் அதிகமாகவும் எதிர்பார்க்கலாம். ஆகையால் அந்தவிதமாகவே, நீங்கள் அதிகப்படியாக பெரிய அளவில் பதிலை பெறப் பார்க்கிறீர்கள். ஆனால் இன்றிரவு, நான் பதிலளித்துக் கொண்டிருக்கையில்…உண்மையாகவே பகல் முழுக்க ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவும், இரவிலும் அவ்வாறே தொலைபேசி மணியானது ஒலிக்கிறது. 560 நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிற திருமதி.ரெஸ்ஸர்ட் அவர்களா இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இது? சகோதரியே உங்களுடைய வேதாகமத்தை, சகோதரி உட் அவர்கள் அதை பின்னால் வைத்திருக்கிறார்கள். நான் அதை இந்தக் காலை உங்களுக்காகக் கொண்டுவந்தேன், நான்—நான் அதை உங்களுக்கு கொடுக்கவில்லை. நான்—நான் உங்களை இந்தக் காலைப் பார்க்கவில்லை, திருமதி.உட் அவர்கள் அதை வைத்திருக்கிறார். 561 ஆகையால் தொலைபேசியில் பதிலளிக்கையில், மகத்தான காரியங்கள் செய்யப்பட்டிருக்கிறதைக் கண்டறிகிறோம். ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்து, அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஒரு குறிப்பிட்ட—குறிப்பிட்ட கூட்டத்தில் இருந்தேன், நான் நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட—குறிப்பிட்ட தொல்லையினால் அவதியுற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரியும், நீர் அங்கு பேசி, அப்படியேக் கூறினீர்…” என்றாள். மேலும் அவள், “அது ஜீவனுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது, நான் கிட்டத்தட்ட மயங்கியேப் போய்விட்டேன்” என்றாள். தொடர்ந்து, “நான் அது முதல் ஒருபோதும் வேதயுறவேயில்லை” என்று கூறினாள். 562 ஒரு பெண்மணி உள்ளே வந்து கூறினாள்…அவள் இன்றிரவு இங்கே இருக்கிறாள் அல்லது அவள் பெட்போர்ட் என்ற இடத்திலிருந்து காரேட்டி வரப்போவதாயிருந்தாள் என்று நான் நினைக்கிறேன், இல்லை அவள் அங்கு எங்கோ இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய மகன் இங்கே இருந்தான் என்று நான் நினைக்கிறேன், அதாவது அவன் ஒரு மோசமான நிலையிலான இருதயக் கோளாறோடு இருந்தான். அவன் இங்கே கூட்டத்தில் உடகார்ந்து கொண்டிருந்தான், கர்த்தர் சுற்றி அசைவாடி அவனைத் தொட்டார்…அந்தப் பையனுடைய தொல்லையைக் குறித்து அவனிடத்தில் கூறினார், அவனால் தன்னுடைய கரத்தையே உயர்த்தமுடியாமலிருந்தது, ஒரு இருதய மாரடைப்பு உண்டாயிருந்தது, எனவே அவனுடைய கரம் முழுவதிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது, இந்தவிதமான மாரடைப்பு அவனுடைய இருதயத்தில் ஏற்பட்டிருந்தது. கர்த்தர் அவனைத் தொட்டவுடனே அவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுவிட்டான், அது முதற்கொண்டு அவனுக்கு எதுவுமே தொல்லைப்படுத்தவேயில்லை. அந்தப் பெண்மணி பெட்போர்டிலிருந்தா இங்கு வந்திருக்கிறாள்? பெண்மணியே, நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அதோ அங்கே பின்னால் இருக்கிறாள். ஆம், சற்று முன்புதான் அவள் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள். 563 அதன்பின்னர் ஈவான்ஸ்வில்லிருந்து ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தாள். அவளால் இங்கு வரமுடியவில்லை, ஏனென்றால் அவள் நீண்ட தூரத்தில் இருக்கிறாள், மேலும் இன்றிரவு நாம் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப்போகிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஈவான்ஸ்வில் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன், அப்பொழுது நீர் கூட்டத்தில் பின்னால் இருந்த…நான் யார் என்றும், நான் என்ன செய்திருந்தேன் என்றும், நான் எதினால் அவதியுற்றிருந்தேன் போன்றவற்றைக் கூறினீர்” என்றாள். அவள், “எனக்கிருந்த காச நோயின் நிலைமையின் காரணமாக சரியாக சுவாசிக்க நான் சிறுபெண்ணாயிருந்தது முதற் கொண்டே ஏதோ ஒன்றை எரிக்க வேண்டியதாயிருந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து அந்தவிதமாக எந்த ஒரு சிறு சுவாசக் கோளாறும் எனக்கு இருக்கவில்லை” என்றாள். புரிகிறதா? 564 இந்த சாட்சியை கேட்டு மகிழ இந்தக் காலை இங்கில்லாமல், இன்றிரவு இங்குள்ளவர்களுக்காகவே கூறுகிறேன். நான் நேற்றைய தினம் ஒரு பொம்மையை வாங்க ஒரு சிறிய கடைக்குச் சென்றிருந்தேன். இப்பொழுது, அது எனக்காகவல்ல, பாருங்கள். அது அங்கு இருக்கும் என்னுடைய சிறு பெண் ரெபேக்காவுக்காகவும். சாராள் மற்ற ஏதோ ஒன்றை செய்யப்போவதாயிருந்தாள். அவளுடைய பள்ளித் தோழிகள் சிலரோடு ஒன்று சேர்ந்து ஏதோ ஒன்றை ஒரு பிறந்த நாளைக்கோ அல்லது வேறெதெற்கோ செய்து கொண்டிருந்தாள், எனவே அவள் ஒரு அன்பளிப்பை தன் தோழிக்கு எடுத்துச் சென்று விட்டாள்; நான் கிட்டத்தட்ட இவ்வளவு நீளமுள்ள ஒரு குழந்தை பொம்மையை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண்மணி நடந்து வந்து, “உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்டாள். 565 அதற்கு நான், “எனக்கு ஞாபகமில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்றேன். 566 அது இங்குள்ள சகோதரன் நெவிலினுடைய உறவினர் என்று தெரிய வந்தது, அது கிட்டத்தட்ட…நான் ஸ்வீடனுக்குச் செல்லும் என்னுடைய பாதையில் இருந்தபோது, அவர்கள்…அவள் அங்குள்ள சிறு எடித் என்ற பையனைப் போன்ற ஒரு சிறு பையனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து இங்கே அழைத்து வந்தாள், அந்த சிறுவனுக்கு புற்றுநோய், மூளையில் வேகமாக கேடுவிளைவிக்கக் கூடிய ஒரு வளர்ச்சி உண்டாயிருந்தது. அவனுடைய சிறுதலையோ கீழ்நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது, அவன்…மூன்று வாரம் மட்டுமே உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறி கைவிட்டுவிட்டனர். அவர்கள் அவனைக் கொண்டு சென்று நோய் ஆய்வுறுதி செய்து, அது என்னவாயிருந்து என்று பார்த்தனர், மேலும் மூன்று வாரம் மட்டுமே அவன் உயிர் வாழவதாயிருந்தது. அவர்கள் அவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு சென்று, அதன்பின்னர் ஒரு தூக்குப்படுக்கையில் வைத்து அந்த அறைக்குள்ளாக கொண்டு சென்று அவனை பரிசோதித்துவிட்டு, பின்னர் அவனைக் கீழே கொண்டு வந்தனர். அந்த சிறு பையனுக்காக சென்று ஜெபித்து, அவனைக் குணப்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டிக்கொண்டோம். அதற்கு அடுத்த நாள், அவர்கள் அவனை அங்கே கொண்டு சென்றபோது, அவனோ, “எனக்கு அந்த சக்கர நாற்காலி வேண்டாம்” என்று கூறிவிட்டான். 567 காரில் ஏற்றி, அங்கு கொண்டு சென்றபோது, மருத்துவரோ தூக்குப் படுக்கையை விரிக்க, இச்சிறுவனோ, “எனக்கு அந்த தூக்குப் படுக்கையும் வேண்டாம்” என்று கூறினான். 568 அங்கு ஓடி அம்ர்ந்த அவனை மருத்துவர் பரிசோதித்தது விட்டு, “மூன்று வாரங்களுக்குப் பதிலாக, நீ நூற்றியெட்டு ஆண்டுகள் வாழப்போகிறாய் என்பதை நான் உனக்குக் கூறப்போகிறேன்” என்றார். 569 அந்தத் தாய் நேற்று என்னை சந்தித்தாள். எனக்குத் தெரிந்தமட்டில் அவள் ஒரு வேளை இன்றிரவு இங்கிருக்கலாம். அந்த சிறுபையன், ஒரு வாலிபனாக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். மிகக் கொடிய கேடுவிளைவிக்கக் கூடிய சதை வளர்ச்சியான மூளைப் புற்றுநோய், அது…அப்படியே காண்பிக்கப் போகிறது… 570 ஓ இலட்சக்கணக்கான காரியங்கள், பாருங்கள். தேவனால் தவறிப்போக முடியாது. அவரால்—அவரால் தவறிப்போக முடியாது. 571 சகோதரன் ஜான், சகோதரனே உங்களுடைய கண் நன்றாக உள்ளதா? அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருந்தது, ஒரு ஆணியை அடித்துக்கொண்டிருந்தபோது, அது அவருடைய கண்ணில் பட்டுவிட்டது. சகோதரன் ஜான் ஓ போனான் அவர்களுக்காக நாங்கள் எல்லோரும் ஜெபித்துக்கொண்டிருந்தோம், லூயிவில்லிருந்து வரும் நம்முடைய சகோதரனுக்கு விபத்தோடு கண்ணில் ஆணி குத்திவிட்டிருந்தது. 572 இப்பொழுது, இவைகள் யாரோ ஒருவருடைய இருதயத்தினுடைய ஆழமான கேள்விகளாய் இருக்கின்றன; அதாவது அவர்கள் வேதவாக்கியத்தினூடாக வாசித்து இந்தக் காரியங்களைக் கண்டறிகிறார்கள், அவைகள்…ஒருகால் அவைகளை திருப்திபடுத்த முடியாமலிருக்கலாம், ஆகையால் நாம் பதிலளிக்க முயற்சிக்கும்படி இங்கே அவைகளை அவர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அது நமக்கு என்ன ஒரு இக்கட்டான நிலையை உண்டாக்குகிறது என்று நீங்கள் பாருங்கள்; ஏனென்றால் நீங்கள் என்னக் கூறுவீர்களோ, அவர்கள் அதைப் பற்றிக்கொள்வார்கள். எனவே நீங்கள் சரியாகக் கூறுகிறீர்களா என்ற நிச்சயத்தை நீங்கள் உடையவர்களாயிருக்க வேண்டும், நான்…நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால் அதன்பின்னர் நாம் சரியாகக் கூறுகிறோம் என்ற நிச்சயமுடைய காரியமாயிருக்க வேண்டும் நாம் நம்முடைய தலையை வணங்கியிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் நமக்காக இதை வியாக்கியானித்துத் தரும்படி இப்பொழுது கேட்போமாக. 573 இப்பொழுது, பரலோகப் பிதாவே, ஓ, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்த மகத்தான சிருஷ்டிகரை “பிதாவே” என்று கூறுவது என்ன ஒரு சிலாக்கியமாய் உள்ளது. நீர் இப்பொழுது உம்முடைய சொந்த கவனத்திற்குள்ளாக இந்தக் கேள்விகளை நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவைகள் ஆழ்ந்த உத்தமத்தோடு இங்கே அளிக்கப்பட்டிருந்தன. தேவனே, நாங்கள் அவைகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அறிந்துள்ளபடி மிகச் சிறந்த முறையில், ஆழ்ந்த உத்தமத்தோடு அது எங்களுடைய இருதயத்திலிருந்து வருவதாக, இதை அருளும். 574 உம்முடைய இரக்கங்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கியிருப்பதாக. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உதவியாயிருக்கும்படியான ஏதோ ஒரு காரியம் இன்றிரவு இங்கு கூறப்படுவதாக. நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்தபிறகு, இராபோஜனம் எடுத்துவிட்டு இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று கூறினது போல நாங்களும் கூறுவோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 575 இப்பொழுது, நான் அநேக முறை கூறியுள்ளதுபோல, அதாவது இவைகள்—இங்கே இருக்கிற இவைகள், அவைகள் என்னுடைய மிகச் சிறந்த கருத்தாகும், அதன்பின்னர் சில சமயங்களில் அதில் ஒரு சிறு வாதம் எழுகிறது. இங்குள்ள முதல் ஒன்று, இதற்கு முன்பே நான் கூறியிருக்கிற ஒன்றே திரும்பி கொடுக்கப்பட்டுள்ளதை நான் காண்கிறேன். நீங்கள் விரும்பினால், நான் அதை இப்பொழுது வாசிக்க விரும்புகிறேன். 65. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது, அந்த நேரத்தில் மற்ற ஜனங்கள் பூமியின் மேலிருந்தனரா? ஆதியாகம் 5-ம் அதிகாரத்தில் உள்ள 16-வசனத்தில் காயீன் நோத் என்னும் தேசத்தில் குடியிருந்து, தன் மனைவியை அறிந்தான் என்று கூறப்பட்டுள்ளது. 576 இப்பொழுது, அது ஒரு—ஒரு அற்புதமான கேள்வியாயுள்ளது. இப்பொழுது, நாம் வேததில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்…அநேக சமயங்களில் இந்த…சில சமயங்களில் நாம் கவனக் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம்…நான் வழக்கமாக ஒரு சிறு துண்டு காகிதத்தில், “எந்த வேதாகம கேள்விக்கும் பதில் அளிக்கப்படும்” என்று எழுதிக் கொடுப்பேன். 577 யாரோ ஒருவர், “காயீனுடைய மனைவி யாராயிருந்தாள்?” என்று கேட்டார். 578 ஓ, அதனோடு நான் ஒரு சிறு கேலியான காரியத்தைக் கூறுவேன், நான், “ஓ, அது அவனுடைய மாமியாருடைய மகளாயிருந்தது” என்றோ அல்லது அந்தவிதமான ஏதோ ஒன்றை, உங்களுக்குத் தெரியும், அல்லது—அல்லது “அவள் திருமதி.காயீனாயிருந்தாள்” என்றும் கூறுவேன். ஆனால் அது கேள்விக்கு பதிலளிப்பதல்ல. அங்கே… 579 காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்தான், ஏனென்றால் அவன் மனைவியை உடையவனாயிருந்தான் என்று வேதம் கூறியுள்ளது. காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்திருந்தால், அப்பொழுது அவன் அவளை எங்கிருந்தாவது கொண்டிருக்க வேண்டும். இது இங்கே இதற்குள்ளாக சரியாக வந்துவிடும்: ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேன் தோட்டத்தில் உடையவர்களாயிருந்தபோது, மற்ற ஜனங்கள் அங்கே பூமியின் மேல் இருந்தார்களா? 580 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பைக் குறித்து வேதத்தில் எப்போதுமே மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்பிள்ளையையே எப்பொழுதும் வேதத்தில் பதிவு செய்திருந்தனர், ஸ்திரீகளை அல்ல. வேதாகமத்தில் ஒரு பெண் குழந்தையின் பிறப்பைக் குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது எப்போதுமே அபூர்வமானதாயுள்ளது. ஓ, வெளிப்படையாக கூறினால், இப்பொழுது என்னால் முடிந்தளவு ஒன்றை, ஒரு குழந்தையின் பிறப்பு எப்போதாவது எங்கேயாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் “அவர்கள் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. 581 இப்பொழுது, ஆதாம் ஏவாளுக்கு மூன்று பிள்ளைகள் மாத்திரமே பிறந்திருந்தனர் என்பதைக் குறித்த பதிவை மாத்திரமே வேதம் அளிக்கிறது, அது காயீனாய், ஆபேல் மற்றும் சேத்தாயிருந்தது. இப்பொழுது அவைகள் மூன்றும் ஆண்பிள்ளைகளாயிருந்ததால், அப்பொழுது எந்த பெண்பிள்ளைகளுமே பிறக்காமலிருந்திருந்தால், அப்பொழுது (ஏவாள்) என்ற பெண் மாத்திரமேயிருந்து மரித்திருந்தால், மானிட வர்க்கமே அப்பொழுது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அவர்கள் உண்டாக வேறெந்த…வேறெந்த வழியுமே இல்லாதிருந்திருக்கும், மானிட வர்க்கம் பெருக வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவ்வாறு பெருக வேண்டியதில்லையென்றால் எந்த பெண்களுமே இருந்திருக்கமாட்டார்கள். ஏவாள் ஒருவள் மாத்திரமே இருந்திருப்பாள். ஆனால் நீங்கள் பாருங்கள், ஆனால் பெண் குழந்தைகளின் பிறப்புகளை அவர்கள் வேதத்தில் பதிவு செய்கிறதில்லை, ஆகையால் அவர்கள் பையன்களின் பிறப்பைப் போன்று பெண்களின் பிறப்பையும் பதிவு செய்திருந்திருக்க வேண்டும். 582 இப்பொழுது, பண்டைய எழுத்தாளர், நாம் பெற்றுள்ள மிகப் பழமையான எழுத்தாளர்களில் ஒருவரான ஜோஸிபஸ் அவர்கள் ஆதாம் ஏவாளுக்கு எழுபது பிள்ளைகள் இருந்ததாக உரிமை கோருகிறார்; பழமையான எழுத்தாளர்களில் ஒருவர், “எழுபது பிள்ளைகள், அவர்கள் குமாரரும் குமாரத்திகளுமாய் இருந்தனர்” என்று கூறுகிறார். 583 இப்பொழுது…அப்பொழுது காயீன் நோத் என்னும் தேசத்திற்குச் சென்றிருந்தால்…இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்த எழுத்தாளர் இங்கே மிக மிக புத்திசாலித்தனமாக இங்கு எழுதியுள்ளார். அவர் அதை எப்படி மேற்கோள் காட்டினார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஏதேனில், அவர்கள் ஏதேனில் தங்கள் பிள்ளைகளை உடையவர்களாயிருந்தபோது…இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் அல்ல, எழுத்தாளர் அதை அறிந்திருந்தார். இங்கே குறிப்பு எழுதியிருந்தவர்; ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது… என்று எழுதியுள்ளார். 584 ஏதேன் தோட்டத்தில் அல்ல, ஏனென்றால் அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் ஏதேனில் தான் இருந்தனர், அதாவது ஏதேன் தோட்டம் ஏதேனில் கிழக்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏதேன் ஒரு தேசமாக இல்லை. இல்லை என்ன…அல்லது ஒரு மாநிலமாக, அதன்பின்னர் நோத் என்பது மற்றொரு தேசமாயிருந்தது இல்லை அதற்கு அடுத்த தேசமாய் இருந்தது. 585 இப்பொழுது, காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மாத்திரமே திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவர் திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிருந்தது. காரணம் ஒரே ஒரு ஆண் பெண்ணிடத்திலிருந்தே அவர்கள் வரவேண்டியதாயிருந்தது, பாருங்கள், எனவே அவன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணப்புரிய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அது அந்த நாட்களில் சட்டப் பூர்வமானதாயிருந்தது. 586 ஈசாக்கு தேவனால் நியமிக்கப்பட்டிருந்த ரெபேக்காளை, தன்னுடைய முதல் இரத்த உறவு முறையாளை விவாகம் செய்தான். சாராள் ஆபிரகாமினுடைய சகோதரியாய், அவனுடைய இரத்த சம்பந்தமான சகோதரியாய் இருந்தாள்; அவனுடைய தாயின் மூலமாயல்ல, தன்னுடைய தகப்பன் மூலமாய். பாருங்கள், ஒரு இரத்த சம்மந்தமான சகோதரியையே ஆபிரகாம் விவாகம் செய்தான்; வேறு தாய், ஆனால் ஒரே தகப்பன். 587 ஆகையால், நீங்கள் பாருங்கள், அப்பொழுது உறவில் விவாகம் செய்வது, மானிட வர்க்கத்தில் இரத்த ஓட்டம் பலவீனமடைவதற்கு முன்பு, அது முறைமை உடைமையாயிருந்தது, சரியானதாயிருந்தது. இப்பொழுது அது அவ்வாறில்லை. நீங்கள் இன்றைக்கு உங்களுடைய சகோதரியை மணந்து, பிள்ளைகளைப் பெற்றால், அவைகள் அநேகமாக…அவைகள் உருகுலைந்து போய்விடும். முதலாவது மற்றும் இரண்டாம் உறவு முறைவரையில் ஒருபோதும் விவாகம் செய்யவே கூடாது, பாருங்கள், ஏனென்றால் ரத்தம் ஓட்டம் தாழ்ந்ததாகி, தாழ்ந்த நிலையிலேயே ஓடும். 588 ஆனால் அப்பொழுது காயீன் செய்திருக்க முடிந்த ஒரேக் காரியம், தன்னுடைய சொந்த சகோதரியை மணந்திருக்க வேண்டும். அங்கிருந்தே பிள்ளைகள்…வந்தனர்…அவன் தன் மனைவியை தெரிந்துகொண்டு, நோத் என்னும் தேசத்திற்குச் சென்று அவளை அறிந்துதான், அங்கிருந்தே பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்,… 589 நீங்கள் கவனிப்பீர்களேயானால், காயீனின் வம்சத்திலிருந்து புத்திசாலியான மனிதர் தோன்றினர். சேத்தின் வம்சத்திலிருந்து பக்தியுள்ள மனிதர் தோன்றினர், நீதியின் திராட்சைக் கொடியையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். சரியாக அங்கே, இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த இரண்டு வம்சங்களும் பிறப்பிக்கப்பட்டன. 590 இப்பொழுது இன்றைக்கு நீங்கள் கவனிப்பீர்களேயானால், (அப்படியே இந்தக் கேள்வியை முடிக்கையில்); அந்த காயீனின் வம்சம் இன்னமும் வாழ்கிறது, சேத்தின் வம்சமும் இன்னமும் வாழ்கிறது. அவர்கள் இருவருமே அதேவிதமாக வந்துள்ளனர். இன்றிரவு காயீனின் பிள்ளைகள் இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள், சேத்தினுடைய பிள்ளைகளும் இன்றிரவு இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள். இரத்தம் ஓட்டம் பெலவீனமடைந்து போனாலும் அந்த வம்சம் இன்னமும் தொடர்ந்து இருக்கிறது. 591 இப்பொழுது, கவனியுங்கள். காயீனின் பிள்ளைகள் எப்பொழுதுமே…ஜலப்பிரளய அழிவிற்கு முன்னர், அவர்கள் புத்தி சாதுர்யமான ஜனங்களாய் இருந்தனர்; விஞ்ஞானிகளாய், கல்வியாளர்களாய்; மிகவும் பக்தியானவர்களாய் இருந்தனர், ஆனால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட கூட்டமாயிருந்தனர். புரிகிறதா? இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் அப்படியே தங்களுடைய தகப்பன் காயீனைப் போலவே இருந்தனர். காயீன், அவன் ஒரு பக்தியான மனிதனாயிருந்தான், அவன் ஒரு அழகான பீடத்தைக் கட்டினான், ஒரு அழகான சபையை உண்டுபண்ணினான், சேத்து அங்கே செய்திருந்த அந்த சிறு பணியைவிட மிக அழகாக அதை உண்டுபண்ண முயன்றான். நீங்கள் அதை அறிவீர்களா? அவன் நிச்சயமாக…அவன் அந்தப் பீடத்தை மலர்களால் அலங்கரித்தான், அதை அழகாக ஆயத்தப்படுத்தி, அதை அழுகுபடுத்திவிட்டான், ஒரு மகத்தான, பெரிய சபையாக்கிவிட்டான், ஏனென்றால் அவன் அவ்வாறு செய்வதன் மூலம் தேவனிடத்தில் தயையைக் கண்டடைய முடியும் என்று எண்ணிக் கொண்டான். 592 ஆபேல் சென்று ஒரு சிறு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு, அதைப் பீடத்தண்டை இழுத்துக்கொண்டு வரத்துவங்கி, அதை ஒரு கற்பாறையின் மேல் கிடத்தி, அதைக் கொன்றான். 593 இப்பொழுது, தேவன் நீதியுள்ளவராயிருந்து, அவருக்குத் தேவையானதெல்லாம் ஆராதிப்பதாயிருந்தால், காயீன் ஆபேல் செய்தது போலவே அதிக உத்தமத்தோடு தேவனை ஆராதித்தான். அவர்கள் இருவரும் உத்தமமாயிருந்தனர். அவர்கள் இருவருமே தேவனிடத்தில் கிருபையை கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரில் எந்த ஒருவரும் நாத்திகராயிருக்கவில்லை. அவர்கள் இருவருமே, முற்றிலுமாக, யேகோவாவில் விசுவாசிகளாயிருந்தனர். இப்பொழுது, அங்கே, அது நமக்கு சிந்திக்கும்படியான ஏதோ ஒன்றை அளிக்கிறது. 594 நான் ஒருபோதும் கண்டிராத ஜனங்கள் சிலர் இன்றிரவு இங்கிருக்கிறார்கள்; நான் இதற்கு முன்பு உங்களைக் கண்டதேயில்லை. ஆனால் நீங்கள் இதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும், இதை உங்களுடைய சிந்தையில் வைத்துக்கொள்ளுங்கள். புரிகிறதா? நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. நீங்கள் சபையிலே ஜீவிக்கலாம், நீங்கள் எப்போதுமே மிகவும் உத்தமமாயிருக்கலாம், அப்படியிருந்தும் நீங்கள் இன்னும் இழக்கப்பட்டவராயிருப்பீர்கள். புரிகிறதா? 595 நீங்களோ, “நல்லது” என்று கூறலாம், நீங்கள், “எங்களுடைய மேய்ப்பர்கள் புத்திசாலியானவர்களாயுள்ளனர், அவர்கள் மிகச் சிறந்த கல்வியறிவினைப் பெற்ற வேதபாட கருத்தரங்குகளின் மூலமாக வந்துள்ளனர். அவர்கள் வேத பண்டிதர்கள், அவர்கள் எல்லா—எல்லா வேத சாஸ்திரம் போன்றவற்றையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் புத்திசாதுர்யமுள்ளவர்கள், பயிற்றுவிக்கப்பட்டவர்கள், நாங்கள் அறிந்தவரை மிகச் சிறப்பாக…தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று கூறலாம். அவர்கள் அப்படியிருந்து இழக்கப்படக் கூடும்! புரிகிறதா? 596 இப்பொழுது காயீன், அவனுடைய வம்சம்; அவர்கள், ஒவ்வொருவரும் மிகவும் பக்தியுள்ளவர்களாயிருந்தனர்; மிகவும் புகழ்வாய்ந்த ஜனங்களாயிருந்தனர்; அவர்கள் விஞ்ஞானிகளாய், மருத்துவர்களாய், கட்டிட அமைப்பாளர்களாய், சிறந்த தொழிலாளர்களாய், புத்திசாலியான மனிதராயிருந்தனர். ஆனால் அந்த வம்சம் முழுவதுமே காயீனிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது. 597 ஆபேலின் பக்கத்திலோ, அவர்கள் கட்டிட அமைப்பாளர்களாய், கல்வியாளர்களாய் அல்லது புத்திசாலியான மனிதராயிருக்கவில்லை; அவர்கள் ஏறக்குறைய தாழ்மையானவர்களாய், ஆடு வளர்த்து மேய்ப்பவர்களாய், விவசாயிகளாயிருந்து ஆவியின்படியே நடந்தவர்களாயிருந்தனர். 598 இப்பொழுது, வேதம், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” என்று உரைத்துள்ளது. ஆவிக்குரிய மனிதன் கொண்டுள்ள ஒரு ஆவிக்குரிய ஆத்துமா ஒருபோதும் மரிக்க முடியாது. மாம்சபிரகாரமான மனிதனோ அவனைச் சுற்றி ஒரு பக்தியான சூழ்நிலையைக் கொண்டிருந்தாலும் (ஆராதிக்க விரும்புகிறது போன்றவை) அவன் மாம்சபிரகாரமானவனாயிருக்கிறான்; ஒரு அவிசுவாசியாயல்ல, ஆனால் ஒரு மாம்சபிரகாரமான விசுவாசியாயிருக்கிறான், அந்த விதமானதுதான் புறக்கணிக்கப்பட்டது. 599 இப்பொழுது, அங்கிருந்து காயீன் புறப்பட்டுச் சென்று நோத் தேசத்தில் தன்னுடைய மனைவியை விவாகம் செய்தான். இப்பொழுது, அதில் சேத் யாரை விவாகம் செய்தான் அல்லது மற்றவர்கள் யாரை விவாகம் செய்தனர் என்று கூறவில்லை. அதைக் குறித்து மிக அழகான காரியம் காயீன் விவாகம் செய்தான் என்பதை அறிவதேயாகும், நமக்கு அதற்கு பதில் கிடைத்துவிட்டது. காரணம் அவன் தன்னுடைய சகோதரியை மணக்க வேண்டியதாயிருந்தது அல்லது அவன்…அல்லது அங்கு இருந்த ஒரு… 600 அப்பொழுது அங்கே பூமியின் மேல் எந்த ஸ்திரீயும் இல்லாதிருந்தனர், ஆனால் அப்படியே ஏவாளிடத்திலிருந்து வரவேண்டியதாயிருந்தது. அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாயிருந்தாள். அதாவது ஜீவித்துக்கொண்டிருந்த எல்லா ஜனங்களுக்குமே, அவள் அதற்கு தாயாயிருந்தாள். அந்தக் காரணத்தினால் அவள்…ஏவாள் என்ற வார்த்தையோ, “ஜீவனுள்ளோருக்கு தாய்” என்றே பொருள்படுகிறது. ஆகையால் அவள் வந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். என்னால் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்த ஒரே வழியோ காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான் என்பதாகுமே. ஆகையால் அந்த நாளில் உண்மையாகவே ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். புரிகிறதா? நல்லது… ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது…இப்பொழுது கவனியுங்கள், அதுவே கேள்வியாயுள்ளது: அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது, அந்த நேரத்தில் பூமியின் மேல் மற்ற ஜனங்கள் இருந்தார்களா? இல்லையே! அப்படியானால் ஆதியாகமம் 5:16-ல் காயீன் நோத் என்னும் தேசத்தில் குடியிருந்து தன்னுடைய மனைவியை அறிந்தான் என்று உள்ளதை நீங்கள் பாருங்கள். நிச்சயமாகவே. பார்த்தீர்களா? 601 அதாவது ஆதியாகமம் 1-ல் அவர் அங்கு மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார், அது ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. ஆதியாகமம் 2-ல் அவர் மனுஷனைப் பூமியின் மண்ணிலே உருவாக்கினார், அதுவே இப்பொழுது நாம் இருக்கிற மானிட மனிதனாயிருந்தது. அதன்பின்னர் 3-ம் அதிகாரத்தில் விழுந்துபோய், ஏதேன் தோட்டத்திலிருந்து உதைத்துத் தள்ளப்பட்டான்: அதன்பின்னர் பிள்ளைகள் பிள்ளைகளைப் பிறப்பித்தனர். காயீன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டுபோய், வெளியே, நோத் என்னும் தேசத்தில் அவளோடு வாழ்ந்தான், ஏனென்றால் தேவன் தன்னுடைய சொந்த சகோதரனின் ஐக்கியத்திலிருந்து அவனை பிரித்திருந்தார் (ஆபேலின் மரணத்தின் காரணமாக) அவன் தனக்கிருந்த தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான்; அவன் எப்படி விவாகம் செய்தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்த, எனக்குத் தெரிந்த ஒரே வழி அதுவேயாகும். 602 இப்பொழுது, அது கூறப்பட்டது…இங்குள்ள என்னுடைய கருப்பு நிற சகோதரர்கள் இந்த குறிப்புரைக்காக மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது முற்றிலும் சரியானதல்ல. நான் மனமாற்றமடைந்த பிறகு, நான் வாழ்க்கையில் நான் முதன்முறையாக எந்த ஒருவரை சந்தித்தேனென்றால்,…நான்…அங்குள்ள சகோதரன் ஜார்ஜ் டீ. ஆர்க் அவர்களையும், அங்கிருந்த மற்றவர்களையுமே சந்தித்திருந்தேன். நான் நடந்து சென்றபோது, கர்த்தர் என்னை ஒரு சிறு இடத்திற்கு வழி நடத்திச் சென்றார். அங்கு அவர்கள் கறுப்பு நிற மனிதனர்கள் எப்படித் தோன்றினர் என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள்…அந்தக் காயீன் மனிதக் குரங்கு போன்ற ஒரு மிருகத்தை விவாகம் செய்தான் என்றும், அதனூடாகவே கறுப்பர் இனம் தோன்றினது என்றும் கூறினர். இப்பொழுது அது தவறாகும்! அது முற்றிலும் தவறாயுள்ளது. அதற்காக ஒருபோதும் துணைநிற்க வேண்டாம். காரணம் கறுப்பு நிறமோ அல்லது வெள்ளையோ அல்லது மற்ற வேறெந்த வித்தியாசமோ அப்போதிருக்கவில்லை. அது ஜலப்பிராளயம் வரை ஒரே இன மக்கள்தான் இருந்தனர். ஜலப்பிரளயத்திற்கு பின்னரே பாபேல் கோபுரத்தின் போது அவர்கள் சிதறத் துவங்கி, அப்பொழுது அவர்கள் தங்களுடைய நிறங்கள் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் ஒரே மரத்திலிருந்து தோன்றினவர்களாயிருந்தனர். அது முற்றிலும் சரியே. பூமிக்குரிய, பூமியின் மீது வாழ்ந்து வந்த ஒவ்வொரு மானிட சிருஷ்டிக்கும், ஆதாம், ஏவாளே தகப்பனும் தாயுமாயிருந்தனர். அது உண்மை. கறுப்பு, வெள்ளை, மங்கின நிறம், பழுப்பு நிறம், மஞ்சள் நிறம், நீங்கள் என்ன நிறமாயிருந்தாலும், அது முற்றிலும் நீங்கள் வாழ்கிற இடத்தைப் பொருத்ததாயுள்ளது, அந்தவிதமாக—அந்த… 603 நான் இதன் பேரில் இருக்கையிலேயே நான் இதை வெளிப்படுத்திக் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது ஜனங்கள் இங்கு இந்த பாகுபாடுகளில் இருந்து கொண்டு சட்டங்களையும் மற்றக் காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது கேலிக்குரியது என்றே நான் நினைக்கிறேன். நான் உண்மையாகவே அவ்வாறு நினைக்கிறேன், கவனியுங்கள், அந்த ஜனங்களை அப்படியே விட்டுவிடுங்கள், அவர்களுக்கு என்னத் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். தேவன் ஒரு மனிதனை ஒரு கறுப்புநிற மனிதனாக உண்டாக்கினால், அவன் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவான், முற்றிலுமாக. தேவன் என்னை ஒரு கறுப்பு நிற மனிதனாக உண்டாக்கினால், நான் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்; அவர் என்னை ஒரு பழுப்பு நிறமான மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு வெள்ளைக்கார மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு மஞ்சள் நிற மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன். தேவனே நம்முடைய நிறங்களை உண்டுபண்ணினார். நாம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பும் விதத்தில் அவர் நம்மை உண்டாக்கினார், நாம் எல்லோரும் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறோம். முற்றிலுமாக! எனவே அவர்கள் சண்டையிட்டு, அந்தவிதமாக தொடர்ந்து செல்லக் கூடாது. அதைச் செய்வது தவறாயுள்ளது. அவர்கள் அதைச் செய்யக்கூடாது. தேவன் நம்மை உண்டாக்கின…விதமாகவே நாம் அதை விரும்பவேண்டும். 604 கறுப்பு நிற மனிதன், அவன் அங்கிருந்து புறப்பட்டுப்போய், தன்னுடைய—தன்னுடைய சந்ததியை பிரித்துவிட அல்லது தன்னுடைய நிறத்தை வெள்ளையரோடு மற்றும் அதைபோன்ற எந்த ஒன்றோடும் கலக்க விரும்புகிறதில்லை. நான் அவன் மீது பழி சுமத்தவில்லை. நான் அவ்வாறு செய்கிறதில்லை. வெள்ளையனால் சுதந்தரிக்கக் கூடாத காரியங்களை கறுப்பு நிற மனிதன் உடையவனாயிருக்கிறான். முற்றிலுமாக! அது முற்றிலும் சரியே. அவர்கள் அந்தவிதமாக இருக்க வேண்டும் என்று தேவன் ஒருபோதும் நோக்கங்கொண்டிருக்கவில்லை. 605 பாருங்கள். கறுப்பு நிற மனிதன்…அவன்—அவன் ஒரு…அவன் பெற்றுள்ள ஒரு—அவன் வெள்ளையன் ஒருபோதும் பெற்றிராத ஒரு மனநிலையை தன்னைக் குறித்துப் பெற்றிருக்கிறான். அவன் ஒரு மகிழ்ச்சியாக செல்லுகிற ஒரு அதிர்ஷடத்தைப் பெற்று, “தேவனை நம்பி, மற்ற யாவும் அப்படியே செல்லட்டும்” என்ற மனநிலையைப் பெற்றுள்ளான். அவன் எதையாவது பெற்றுக்கொண்டாலும் அல்லது அவன் பெற்றிருக்கவில்லையென்றாலும், அவன் எப்படியும் மகிழ்ச்சியாயிருக்கிறான். இன்றிரவு நான் அதனுடைய முழுப்பங்கையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். நல்லது, அவன் அதைப் பெற்றிருக்கிறான், அது அவனுடைய உடைமையாயிருக்கிறது; அவர்கள் அதனோடு மற்ற எந்த இனத்தையும் கலக்கவோ அல்லது பிரிக்கவோ விரும்புகிறதில்லை. அது முற்றிலும் உண்மை. 606 அங்கே ஷீவர்போர்ட்டில் இருந்த அந்த பெண்மணியோ நான் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் கேட்டிருந்ததிலேயே மிகச் சிறந்த—மிகச் சிறந்த கருத்துரைகளைக் கூறினாள் என்று நான் கருதுகிறேன். அவள் ஒரு கருத்துரையைக் கூறினாள், அவர்கள் அதை செய்தித்தாளில் பிரசுரித்தனர். அவள் மேலே நடந்து வந்து, அவள், “இந்தவிதமாக இந்தக் காரியங்கள் இந்த பாகுபாட்டில் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. நான் என்னுடைய பிள்ளைகள் அந்த வெள்ளையரின் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை” என்றும், “அவர்கள் ஒரு கறுப்புநிற ஆசிரியர் கவனம் செலுத்துவது போல கவனம் செலுத்தமாட்டார்கள்” என்றும் கூறினாள். அந்த ஸ்திரீ ஒரு சாமர்த்தியமான ஸ்திரீ. அவள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள், அவர்கள் ஒரு சிறந்த கல்வியைப் பெறுகின்றனர். அது முற்றிலும் உண்மை. ஆகையால் அதைச் செய்வதன் மூலமே ஜனங்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 607 ஆகையால் அவர்கள், “காயீன் மற்றும் ஆபேல்…” என்று அதைப் போன்று கூறுகிறார்கள். இல்லை ஐயா! நிறத்திற்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அங்கே உள்ளிருக்கிற ஆவிக்கே அதனோடு சம்மந்தமுண்டு. அது முற்றிலும் சரியே. 608 ஆகையால் காயீன் தன்னுடைய மனைவியை அறிந்தான், அது அவனுடைய சகோதரியாயிருந்தது. அவர்கள்…அவன் நோத் என்னும் தேசத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கிருந்தே பூமியின் பெரிய கோத்திரங்கள் உண்டாயின; பக்திமார்க்கத்தாரும், ஆராதிப்போரும் தோன்றினர். 609 நண்பனே, அப்படியே சற்று சிந்தித்துப் பார், அப்படியே ஒரு நொடி சற்று நின்று சிந்தித்துப் பார். முற்றிலுமாக சபைக்குச் செல்லுகிற கோடான கோடி ஜனங்கள், அவர்களால் முடிந்தளவு உத்தமமாயிருந்து, அந்த சபைக்கென்றே தங்களை அர்பணித்திருந்தாலும், காயீனைப் போன்று அந்தவிதமாகவே இழக்கப்படுவர். புரிகிறதா? அது தேவன் தெரிந்து கொள்ளுகிறதாயுள்ளதே! அது தேவன் தேர்ந்தெடுத்தலாயுள்ளதே! புரிகிறதா? தேவன் இரக்கமளிக்கிறாரே! களிமண் குயவனிடத்தில் கூற முடியாது. அது குயவன் களிமண்ணை எடுத்து பயன்படுத்துகிறதாயுள்ளது. அது உண்மை. 610 இப்பொழுது இங்கே அழகான ஒன்று உள்ளது, இங்கே அடுத்த ஒன்று: பேதுரு இரண்டாம் நிரூபம் 2:4 — 2:4… 611 நான் இந்த வேதவாக்கியங்களை வாசித்துக்கொண்டிருக்கையில், நீங்கள் விரும்பினால், ஒரு வேதாகமத்தை வைத்துள்ள யாராவது இந்த வேதவாக்கியங்களை உடனே துரிதமாக திருப்பிப் பார்க்க விரும்பினால் பாருங்கள். 612 இப்பொழுது, இந்த காயீன் என்பதன் பேரில் போன்றவை, அது இப்பொழுது திருப்தியளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை எங்களிடத்தில் கூற விடுங்கள்; அப்பொழுது நாம் மகிழ்ச்சியடைவோம்… 613 இப்பொழுது II பேதுரு 2:4. சரி, ஐயா, நாம் இங்கு இருக்கிறோம்: 66. II பேதுரு 2:4, “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல்,…நரகத்திலே தள்ளி,” I பேதுரு 3:19-ல் ஏன் கிறிஸ்து காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்? 614 இப்பொழுது, நாம் முதலில் பேதுரு 2:4 எடுத்துக் கொள்வோம். சரி: பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 615 இப்பொழுது, நாம் இப்பொழுது I பேதுரு (அதாவது II பேதுருவில் கண்டறிவோமாக, I பேதுரு 3:19, இதைக் கவனியுங்கள். இதோ நாம் இங்கே இருக்கிறோம். இவைகள் சற்று முன்னர் வந்தபடியால், நான் அவைகளைக் குறித்து எழுதியிருக்கவில்லை. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 616 ஓ, ஆம், இங்குதான் நாம் இருக்கிறோம். நாம் அதற்கு முன்னிருந்தே சற்று துவங்குவோம், 18-வது வசனம்: ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள்…கீழ்ப்படியாமற்போனவைகள்;… 617 என்னுடைய அருமையான நண்பனே, நீங்கள் அடுத்த வசனத்தை வாசீப்பீர்களேயானால், அங்கே அது அதனை விளக்கிக் கூறியுள்ளது. புரிகிறதா? அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். (புரிகிறதா?) 618 இப்பொழுது நீங்கள் இங்கு கவனிப்பீர்களேயானால், இந்தப் பிரசங்கியார் மற்றொன்றை…அதே வரியில் பெற்றுள்ள ஒரு காரியத்தின் பேரிலும் சற்றுக் கழித்து பதிலளிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். 619 I பேதுரு. 4…இல்லை 2:4, நீங்கள் கவனிப்பீர்களேயானால், “…தூதர்களை தேவன் தப்பவிடாமல்” என்று உள்ளதையும், அந்த தூதர்கள் என்பது ஆங்கிலத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளது? ஆங்கிலத்தில் தூதன் என்பதன் முதல் எழுத்தோ “சிறிய எழுத்தில்” உள்ளது. பார்த்தீர்களா? இப்பொழுது, இங்கே, “நோவாவின் நாட்களின் நீடிய பொறுமையில் மனந்திரும்பாமற்போய் காவலில் இருந்த ஆவிகள்,” அதே தூதர்கள். அது மனிதனாயிருந்தது: செய்தியாளர்கள், பிரசங்கிமார்கள்; “தூதர்களை தப்பவிடாமல்.” தூதன் என்ற வார்த்தை “ஒரு செய்தியாளன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது…அது ஒரு…என்பதை நீங்கள் அறிவீர்களா? தூதன் என்றால் “செய்தியாளன்” என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? முற்றிலுமாக, தூதன் ஒரு செய்தியாளனாயிருக்கிறான், “அவர் தூதர்களையும் தப்பவிடாமல்” புரிகிறதா? 620 எபிரெயரில் இங்கு உள்ளது, நாம் ஒரு சில வாரங்களுக்கு முன்னர், “தூதர்கள்” என்பதினூடாக நாம் பார்த்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? 621 அவர்…வெளிப்படுத்தின விசேஷயத்தில், “சர்தை சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது, எபேசு சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது. சபையின் தூதனுக்கு…” அது ஞாபகமிருக்கிறதா? நாம் அகராதியில் தூதன் என்ற வார்த்தைக்குப் பொருளைப் பார்த்தால், அது, “ஒரு செய்தியாளன்” என்று பொருள்படுகிறதை கண்டறியலாம். அது “பூமியின் மேலுள்ள ஒரு செய்தியாளனாய், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட செய்தியாளனாய்” இருக்கக் கூடும், தூதன் என்ற வார்த்தை. 622 ஆகையால் இந்த நிலையில், நாம் கிரேக்க வேதாகம அகராதியை எடுத்து, ஆராய்ந்துப் பார்த்தால், அது, “செய்தியாளர்கள், முதல் செய்தியாளர்கள்” என்று துவங்குகிறதை நீங்கள் கண்டறிவீர்கள். பாருங்கள், “…அவர் தப்பவிடாமல்…ஏனென்றால் பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல்,” (புரிகிறதா?) “இயற்கைக்கு மேம்பட்டவர்கள்” (புரிகிறதா?) “பிறகு காத்திருந்து…” இப்பொழுது கவனியுங்கள், அவர் கூறினார்: பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 623 ஆகையால் இங்கே I பேதுரு 3:19-ல் உள்ளதை மீண்டும் பாருங்கள், இப்பொழுது இதை வாசிக்கையில் என்று கவனியுங்கள்: அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது,…(பாருங்கள், அது அந்த நாளின் செய்தியாளர்களாயிருந்தது, செய்தியாளர்கள்)…கீழ்படியாமற்போனவைகள்: அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 624 இப்பொழுது பரலோகத்தில் உள்ள அந்த சிருஷ்டிகளைக் கவனிப்பீர்களேயானால் நலமாயிருக்கும். இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் 11…இல்லை 7-ம் அதிகாரம், என்று நான் நினைக்கிறேன்…அல்லது, இல்லை, இல்லை, அது 12-ம் அதிகாரத்தில் உள்ளது. அவர் ஸ்திரீ நின்று கொண்டிருந்த ஒரு காட்சியைக் கூறுகிறார்; அவளுடைய தலையிலே சந்திரன், சூரியன்…இல்லை, தலையிலே சூரியனை அணிந்திருந்தாள், அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அந்தப் பிள்ளை பிறந்தவுடனே, அந்தப் பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் நின்றது. அது தன்னுடைய வாலை எடுத்து, வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, பூமியிலே விழத்தள்ளிற்று. நீங்கள் அதைக் கவனித்தீர்களா? இப்பொழுது, சாத்தான் ஒரு—ஒரு நீண்ட வாலை உடையவனாயிருந்து, அவன் ஜனங்களை சுற்றி வளைத்துக்கொண்டான் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை, ஆனால் “அவன் கூறின அந்த கட்டுக்கதையினால்” அந்த நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்தான். அந்த நட்சத்திரங்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்தன. 625 ஆபிரகாம், “ஓ…” என்றான். 626 தேவன் ஆபிரகாமினிடத்தில், “வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னால் எண்ணக் கூடுமா?” என்றார். 627 அதற்கு அவனோ, “என்னால் அதை எண்ணமுடியாது” என்றான். 628 அப்பொழுது அவர், “உன்னால் உன் சந்ததியையும் ஒருபோதும் எண்ணமுடியாமலிருக்கும்” என்றார். நட்சத்திரங்கள். 629 பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் யார்? நசரேயனாகிய இயேசு, மாம்ச சரீரத்தில் எப்போதும் வாழ்ந்து வந்தவர்களிலேயே பிரகாசமாயிருந்தவர். அவர் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார். அவர் ஈசாக்கினூடாக தோன்றின ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியராயும், வாக்குத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறோம். 630 ஆகையால் வானத்து நட்சத்திரங்கள் இங்குள்ள மனித ஆவிகளை பிரதிநிதித்துவப்படுத்தின வலுசர்ப்பம் (ரோமாபுரி, அதனுடைய துன்புறுத்தலின் கீழே) மூன்றில் இரண்டை…இல்லை நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைக் கீழே தள்ளிற்று, அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் சிலுவையேற்றமாயிருந்தது, அவர்கள் அவரை புறக்கணித்தபோது, அவர்…அவரைத் தள்ளினபோது, அவரோடு ஒன்றும் செய்ய முடியாமலிருந்தது; அது நட்சத்திதிர தூதர்களில் மூன்றிலொரு பாகம், தூதர்கள். 631 பாருங்கள், உங்களுடைய சரீரத்தில், உங்களுடைய உட்புறத்தில்…(நாம் அதன்பேரில் மற்றொரு கேள்வியைப் பெற்றுள்ளோம், நேரடியாக அதற்கு நன்றாக பதில் கூறலாம்). ஆகையால்…உங்களுடைய உட்புறத்தில் ஒரு ஆவி உள்ளது, அது மற்றொரு மனிதன். உங்களுடைய வெளிப்புறத்தில் ஒரு மனிதன் இருக்கிறான், உங்களுடைய உட்புறத்தில் மற்றொரு மனிதன் இருக்கிறான். ஆகையால் உங்களுடைய உட்புறத்தில் இருப்பது இயற்கைக்கு மேம்பட்டதாயுள்ளது, உங்களுடைய வெளிப்புறத்தில் உள்ளது சரீரம் சார்ந்ததாயுள்ளது. புரிகிறதா? இந்த சரீரத்தில், நீங்கள் தேவனால் ஆவியில் வழி நடத்தப்பட்டால், நீங்கள் ஒரு தேவனுடைய செய்தியாளராய் அல்லது ஒரு தூதனாகிறீர்கள். தேவனுடைய செய்தியாளர், தேவனுடைய தூதன் என்பதும் ஒரே வார்த்தையாயுள்ளது; அதைப் பிரிக்க முடியாது; தேவனுடைய செய்தியாளன் அல்லது தேவனுடைய தூதன். 632 யார் மிக உயரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது? வானத்திலிருந்து வரும் ஒரு தூதனா அல்லது பிரசங்க பீடத்திலுள்ள ஒரு தூதனா? யார் அதைப் பெற்றிருக்கிறது? பிரசங்கபீடத்தில் உள்ள தூதனே! பவுல், “நான் உங்களுக்கு பிரசங்கித்திருக்கிற சுவிசேஷத்தையல்லாமல் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனே வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றார். ஆகையால் தூதன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, வார்த்தையோடு தேவனுக்கு அடுத்தபடியாக நிற்கிறான். அது உண்மை. வானத்தில், அவருடைய அதிகாரம்… 633 “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. போங்கள், நான் உங்களோடு செல்வேன். நீங்கள் பூமியில் கட்டுகிறதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன். நீங்கள் பூமியில் கட்டவிழ்ப்பதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்.” 634 ஓ, மகத்தான பரிசுத்த சபையானது இந்தக் காரியங்களைச் செய்யும்படியான அதனுடைய அதிகாரத்தை மாத்திரம் தெளிவாக உணர்ந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் அங்கே அதிகப்படியான சந்தேகமும், பயமும், நடுக்கமும், அது இருந்தால், “அது சம்பவிக்கக் கூடுமா?” என்ற எதிர்பார்ப்புமே உள்ளது. அது இருக்கும்வரையில் சபையானது ஒருபோதும் நிமிர்ந்து நிற்கவே முடியாது. பயத்தின் ஒவ்வொரு பேச்சும் மறைந்துவிட்டு, பரிசுத்த ஆவியானவர் சபையின் ஆளுகையில் முழுமையாயிருக்கும்போதே, எல்லா பயங்களும் போய்விட சபையானது அதிகாரத்தை உடையதாயிருக்கும். புரிகிறதா? ஏன்? பரலோகம் சொந்தமாக கொண்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் தங்களுக்குப் பின்னே கொண்டுள்ளனர். அவர்கள் சிங்காசனத்தின் தூதர்களாயிருக்கிறார்கள். முற்றிலுமாக! கிறிஸ்துவின் தூதர் அதிகாரத்தை உடையவராயிருக்கிறார்கள், கிறிஸ்துவுக்கு சொந்தமான ஒவ்வொரு காரியமும் அந்த தூதருக்கு சொந்தமானதாயிருக்கிறது. அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், பரிசுத்த ஆவி உங்கள் மீது வந்த பிறகு, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார். சாட்சி என்றால் என்ன? ஒரு தூதனாக வந்து ஒரு காரியத்தை சாட்சி பகருவதாகும். பரலோகத்தின் அதிகாரங்கள் முழுவதும் உங்களுடைய கரங்களில் உள்ளனவே! ஓ, நாம் ஏன் அமர்ந்திருக்கிறோம்? சபையானது மலடாய் உள்ளது, நாம் செயலற்றவர்களாய் அமர்ந்துள்ளோம். காரணமென்னவெனில் நாம் இந்த காரியங்களை அடையாளங்கண்டு கொள்ளுகிறதில்லை. 635 இப்பொழுது, காவலிலிருந்த ஆத்துமாக்கள் (அந்த மனந்திரும்பானதவைகள்) தூதர்களின் ரூபத்தில் கீழே கொண்டுவரப்பட்டிருந்த தூதர்களாயிருக்கவில்லை, ஆனால் அது உலகத் தோற்றத்திற்கு முன்பே விழுந்த அந்த தூதர்களின் ஆவிகளாயிருந்தனர். முன்னே அங்கே வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. சாத்தான்—வலுசர்ப்பம் யுத்தம் பண்ணிற்று, அதன்பின்னர்…இல்லை மிகாவேலும் வலுசர்ப்பமும் யுத்தம் பண்ணினர் (அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி தன்னுடைய எல்லா பிள்ளைகளோடும் (அவன் வஞ்சித்திருந்த எல்லா தூதர்களோடும்) தள்ளப்பட்டான், அந்த தூதர்கள் பூமிக்கு வந்து மானிடர்களைக் அடிமைப்படுத்தினர். அவர்கள் அவ்வாறு செய்தபோது, அப்பொழுது “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” 636 அவர்கள் தேவ புத்திரராயிருக்கிறார்கள். இந்த பூமியில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தேவ குமாரனாயிருக்கிறான். அவன் பாவியாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் ஒரு தேவ குமாரனாய் இருக்கிறான். தேவனுடைய புகழுக்காக தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் அந்தவிதமாக சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் தேவன் யார் அவரை ஏற்றுக்கொள்வார்கள், யார் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை ஆதியில் அறிந்திருந்தார். ஆகையால் அவரால் முன்குறிக்க முடிந்தது…அல்லது முன்குறிக்க அல்ல, ஆனால் முன்னறிவினால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவரால் கூற முடியும், ஏனென்றால் அந்த நபர் எந்த ஆவியை ஏற்றுக்கொள்வார் என்பதை அவர் அறிந்திருந்தார். 637 அந்த ஆவிகள் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வந்தன, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கின்றன,…உலகம் உண்டாவதற்கு கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னரே, தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தன, ஆராதிப்பதைக் குறித்ததான ஒரு காரியத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லையென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவைகள் கீழே வந்து, மனிதனுக்குள்ளாகச் சென்றன, அவைகளே தேவனை ஆராதிக்கின்றன! முற்றிலுமாக, அவைகள் தேவனை ஆராதிக்கின்றன; அவைகளுக்கு தேவனைக் குறித்த அறிவு உண்டு, அவைகள் எப்பொழுதும் புத்தி சாதுர்யமாயும், அறிவாற்றல் கொண்டதாகவும், கல்வி பயின்றதாகவும் உள்ளன. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்தே அவைகளை புறக்கணித்துவிட்டார்! 638 ஆகையால் நண்பனே, ஒரு சபையின் அங்கதினராயிருப்பது, அல்லது—அல்லது ஏதோ ஒரு வேத சாஸ்திர அறிவைப் பெற்றிருப்பது அல்லது ஏதோ ஒன்று, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. அது உங்களை அவரிடத்தில் ஒரே நபராக இணைக்கிற இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயும், ஒரு புதிய பிறப்பாயுமிருக்க வேண்டும். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 639 தேவன் அதை அறிந்திருந்தபோது, ஆதியில் அவர்…மனுஷனையும், ஸ்திரீயையும் ஒன்றாக உண்டாக்கினார், இருவராய் அல்ல, அவர்கள் ஒன்றாய் உண்டாக்கப்பட்டனர். அவர்கள் வேறுபிரிக்கப்பட்டு, ஒரு மாம்சத்தில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வைக்கப்பட்டனர். அவர் அதை அறிந்திருந்தார். ஆகையால் முறைப்படி அதை உங்களுக்கு நிரூபிக்க, தேவன் ஸ்திரீயை உண்டாக்கினபோது, அவர் மனிதனை உண்டாக்கினதுபோல கொஞ்சம் மண்ணை எடுத்து அவளை ஒருபோதும் உண்டாக்கவில்லை; அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்தார், அவள் ஒரு மனிதனின் உப உற்பத்தியானாள் (ஏனென்றால் அவள் அவனுடைய பாகமாயிருக்கிறாள்) இப்பொழுது இது உங்களுக்குப் புரிகிறதா? புரிகிறதா? அங்குதான் காரியமே உள்ளது. 640 தூதர்கள் இருந்தனர். தேவனும், தேவனோடு இணைந்துள்ள ஆவியும் ஒரே ஆவியாயுள்ளது. அது உண்மை. இப்பொழுது, சபையில் வாசம்செய்கிற தேவனுடைய ஆவி பரலோகத்திலிருந்து வந்த ஆவியாயுள்ளது, அதாவது உலகத்தோற்றத்திற்கு முன்பே அது பிசாசினுடைய பொய்யை புறக்கணித்துவிட்டதை தேவன் அறிந்திருந்தார். அந்த ஆவி தன்னுடைய சோதனைகளை ஏற்றுக்கொள்ள…ஒரு மாம்ச சரீரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர் இந்த மற்றவர்கள் செய்ததுபோலவே மாம்சத்தில் வர வேண்டியதாயிருந்தது, அவர்கள் எல்லோர் மேலும் சமமான நுகம் வைக்கப்பட்டது. தேவன் துவக்கத்திலேயே ஏற்க மனதுள்ள ஆவிகளையும், எது ஏற்றுக்கொள்ளாதென்பதையும் அறிந்திருந்தார். அங்குதான் காரியமே உள்ளது. கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் பிசாசு வஞ்சிக்குமளவிற்கு அவன் மிகவும் புத்தியுள்ளவனாயிருக்கிறான். 641 ஆகையால் இந்த ஆவிகள், பிரசங்கித்த இந்த தூதர்கள் காவலில் இருந்தனர்; தூதர்கள், நீங்கள் அதை இங்கே கவனிப்பீர்களேயானால், அது ஆங்கில எழுத்தில் சிறியதாய் தூதன் என்ற முதல் எழுத்து உள்ளது, அது “மனிதன்” என்பதையே பொருட்படுத்துகிறது. தூதர்கள், இங்கே பூமியின் மேல் உள்ள செய்தியாளர்கள். அவர்கள் பாவம் செய்தனர், அவர்கள் பாவஞ்செய்யக் கூடிய ஒரே வழி அவிசுவாசிப்பதேயாம்! அந்தவிதமாக…அவர்கள் தங்களுடைய சொந்த மார்க்கங்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் நோவாவின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஏனோக்கின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய செய்தியை புறக்கணித்து, “ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர்” என்று வேதம் கூறியுள்ளது, அவர்கள் அவ்வாறே இருந்தனர். 642 ஏனோக்கு அவர்களிடத்தில் தீர்க்கதரிசனமுரைத்திருந்தான், அதாவது, “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” என்று கூறியிருந்தான். 643 அவர்கள் தீர்க்கதரிசனமுரைத்தனர். நோவா ஒரு பேழையைக் கட்டினான், அவர்கள், “அவன் ஒரு பரிசுத்த உருளை! அவன் ஒரு மதவெறியன்! மழை வரப்போகிறது என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது” என்று கூறினர். நூற்றியிருபது ஆண்டுகள் கடந்து சென்றன, அவன் ஒரு மார்க்கத்தை உடையவனாயிருந்து, அதில் இரட்சிப்பை உடையவனாயிருந்தான், தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டாக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்களோ தங்களுடைய நிலையில் திருப்தியடைந்திருந்தனர். 644 அந்தவிதமாகவே அது இன்றைக்கும் உள்ளது, அதாவது மனிதர் தங்களுடைய நிலையில் திருப்திடைந்திருக்கின்றனர். ஆனால் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டு, அந்த வழி இயேசு கிறிஸ்து மூலமாக உள்ளது. ஆமென். அங்குதான் காரியமே உள்ளது: அதே மரபினர், அதே ஆவிகள். 645 அவர்கள் முற்றிலும் பக்தியுள்ள, மிகுந்த பக்தியுள்ள மனிதராயிருந்தனர், ஆனால் அவர்கள் இப்பொழுது உடன்படிக்கை வாக்குறுதியை தவறவிட்டுவிட்டனர். 646 அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது. மனிதன் சபைக்குச் செல்கிறான், பெரிய சபையில் சேர்ந்து, பட்டிணத்திலேயே மிகவும் புகழ்வாய்ந்த நபராயிருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். அவர்கள் ஒரு சபையை சேர்ந்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் நகரத்தில் உள்ள மிகப்பெரிய, மிகச் சிறந்த, பட்டிணத்தில் நன்றாக கருதப்படுகிற சபையில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாகவே அந்த அழைப்பை தவறவிடுகிறார்களே! அவர்கள் முற்றிலுமாகவே அதை தவறவிடுகிறார்களே! 647 நீங்கள் இயேசுகிறிஸ்துவை எப்போதுமே அறிந்துகொள்ளும்படியான ஒரே வழி ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலமேயாகும், வேதசாஸ்திரத்தின் மூலமாயல்ல, நீங்கள் வேதத்தை எந்த அளவு கற்கிறீர்கள் என்பதன் மூலமாயுமல்ல. நீங்கள் கிறிஸ்தவ விஞ்ஞானத்தையுடையவராகவோ, மெத்தோடிஸ்டாகவோ, யேகோவா சாட்சிக்காரராகவோ அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி; நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அவரை வார்த்தையைக் கொண்டு ஒருபோதும் அறிந்து கொள்வதில்லை, அது தேவனுடைய ஆவி உங்களுக்கு அவரை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாயுள்ளதே! 648 ஆதாமும் (ஏதேன் தோட்டத்தில்) ஏவாளும்…அந்த பிள்ளைகள் துரத்தப்பட்டபோது, காயீன் இங்கு நல்ல வேத சாஸ்திரத்தோடு வந்தான். அவன், “நாம் இதை நம்முடைய இருதயத்திலிருந்து மிகச் சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தேவன் அறிந்திருக்க வேண்டும். நான் ஒரு அழகான பலிபீடத்தை கட்டுவேன், நான் அதன்மேல் மலர்களை வைப்பேன், நான் அதன் மேல் பழங்களை வைப்பேன், நான் அதை அழகாக்குவேன். நிச்சயமாகவே என்னால் இதனைக் கொண்டு தேவனை சாந்தப்படுத்த முடியும், நான் என்னுடைய இருதயத்தில் உத்தமமாயிருக்கிறேன் என்பதை அவரை அறிந்து கொள்ளச் செய்வேன்” என்றான். அவன் வார்த்தைக்கு சென்றதைப் பொருத்தமட்டில் சரியாக இருந்தான்; தேவன் ஆராதிக்க விரும்பினார், அவன் ஆராதிக்கச் சென்றான். அவன் ஆராதிக்க ஒரு அழகான இடத்தை, பெரிய, அருமையான தேவாலயத்தை (அவர்கள் இன்றைக்கு அதை அழைக்கிறதுபோல) உண்டுபண்ணினான். அவன் அதை சரியாகச் செய்தான், அவன் அதை சரியாகக் கட்டினான், அதில் பலிபீடத்தையும் வைத்தான்; அவன் ஒரு நாத்திகனாயிருக்கவில்லை. 649 ஆனால் ஆபேல், தேவனுடைய வார்த்தையின் பேரில்…அப்பொழுது வேதமானது எழுதப்படாததாயிருந்தது, ஆனால் நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேக் கொண்டு வந்தது கனியல்ல என்றும், அது ஆதாம் ஏவாள் புசித்த ஆப்பிள்கள் அல்லவென்றும், அவர்களை வேறுமடுத்தி, அவர்களை பிரித்திருந்தது முற்றிலும் பாலியல் காரியங்களாயிருந்தது என்பதை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் அழிவுள்ளவர்களானார்கள் என்றும், ஆதாமினுடைய இரத்தத்தினூடாகவும், சர்ப்பத்தினுடைய இரத்தினூடாகவுமே இது துவங்கியிருந்தது என்று அறிந்து, ஆபேல் தெய்வீக வெளிப்பாட்டினால் போய் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து அதை பலியிட்டான். அப்பொழுது தேவன், “அதுதான் சரியானது” என்றார். நிச்சயமாக. 650 அவர்கள் மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தபோது, இயேசு, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். 651 அப்பொழுது, “சிலர் உம்மை ‘மோசே’ என்றும், சிலர் உம்மை ‘எலியா’ என்றும், சிலர் உம்மை ‘எரேமியா’ என்றும், சிலர் உம்மை ‘அந்த தீர்க்கதரிசி’ என்று கூறுகிறார்கள்” என்றனர். 652 அதற்கு அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். 653 அப்பொழுது பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 654 அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” என்றார். (கவனியுங்கள்!) “கடிதத்தின் மூலமாயல்ல, வேதபள்ளியின் மூலமாயல்ல; நீ இதை ஒரு வேதபாட கருத்தரங்கில் ஒருபோதும் கற்கவில்லை, வேறு யாரோ உனக்கு சொல்லவுமில்லை. மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார், அங்குதான் காரியமே உள்ளது. அங்குதான் ஜீவனுள்ள தேவனுடைய சபை உள்ளது. அதுவே இதுவாகும். அந்த சபையின் மேல்…அந்த வெளிப்பாட்டின் மேல், இந்த சபை கட்டப்பட்டுள்ளது. அது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்று தேவன் வெளிப்படுத்தியிருக்கிற ஒரு தெய்வீக வெளிப்பாடாய் உள்ளது, நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். 655 இந்த சரீரத்தின் அங்கத்தினர்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானது அசைவாடி கிரியை செய்துகொண்டிருக்கிறது. அதுவே சபையாயுள்ளது! ஏழ்மையாயிருந்தாலும், ஊழியத்தில், நீ எங்கோ ஒரு தேவதாரு மரத்தின் கீழிருந்தாலும், அல்லது அது என்னவாயிருந்தாலும், அது யாரோ ஒருவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு தனிப்பட்ட கூட்டமானாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது எங்கே இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அழகும் மற்ற காரியங்களும் தேவனை வசியப்படுத்துகிறதில்லை. அது இயேசு கிறிஸ்து தேவ குமாரனாக, நம்முடைய சொந்த இரட்சகராக தந்தருளப்பட்டிருக்கிறார் என்ற ஒரு வெளிப்பட்டினால் உண்டான இருதயத்தின் உத்தமமாயுள்ளது. ஆமென்! 656 என்னே, நாம்…அந்தவிதமாக பார்ப்பதன் மூலம் நீங்கள் இவைகளை ஒருபோதும் புரிந்துகொள்ளுகிறதில்லை, நாம் புரிந்து கொள்வோமா? 657 அவர் பிரசங்கிக்கச் சென்றபோது…அங்கிருந்தவர்கள் அவர்கள்தான்: தூதர்கள், செய்தியாளர்கள், அவர்கள் பிரசங்கிமார்கள், அவர்கள் அறிவாற்றலுள்ளவர்கள், நோவா அவர்களிடத்திற்குச் சென்று, “இந்தப் பேழைக்குள் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறினபோது அதை விசுவாசிக்காத அந்த செய்தியாளர்கள். 658 அவர்கள், “இந்த பரிசுத்த உருளையை கவனியுங்கள், அந்த மதவெறியனை கவனியுங்கள். ஏன்? மழை என்பதே இல்லை. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்போதோவாது கேள்விப்பட்டது யார்? ஏன்? என்னே, நாம் சபைகளை உடையவரகளாயிருக்கிறோமல்லவா? நாம் பக்தியுள்ளவர்களாயிருக்கிறோமல்லவா?” என்றனர். ஏன்? அவர்கள் பக்தியுள்ளவர்களாயிருந்தனர்! 659 அப்பொழுது ஒழிந்துபோன சந்ததியைப் போன்றே இந்த சந்ததி இருக்கும் என்று இயேசு கூறினார், அதாவது அவருடைய வருகைக்கு முன்பாக உள்ள அந்த சந்ததி மீண்டும் அதைச் செய்யும், அதாவது, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில் அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்துமிருந்தனர்” என்றார். அப்பொழுது அவர்கள் எங்கோ இப்பொழுது உள்ளது போன்று நெவாடா மாநிலத்தில் உள்ள ரேனோவுக்குப் போய் அங்கு ஒரு பெண்ணை மணப்பதும், அவளை பதினைந்து நிமிடத்திற்குள் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் வேறொரு பெண்ணை மணப்பது போன்றதும் இருந்து வந்தது. இவர்கள் இன்றைக்கு பெற்றுள்ள எல்லா விதமான அர்த்தமற்ற காரியங்களையும் அவர்கள் உடையவர்களாயிருந்தனர்; அணிதிரளுதல், கும்மாளம் போடுதல், பரியாசம் செய்தல், பரியாசக்காரர்கள் போன்றவராயிருந்தனர்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, உண்மையான சத்தியத்தை உடன்படிக்கையை, கிருபையின் செய்தியை மறுத்தலித்தல்: தேவன் தம்முடைய வழியை உண்டுபண்ணி, ஜனங்கள் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்ற தம்முடைய—தம்முடைய உடன்படிக்கையைத் தருகிறார்; அது அதில் இரட்சிப்பை உடையதாயிருந்தது, இரட்சிப்பே தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு ஸ்தலமாயிருந்தது. 660 “நாம் இரட்சிப்போடு என்ன செய்ய வேண்டும்?” இன்றைக்கு ஜனங்களோ, “நாம் ஒரு நல்ல ஜனநாயக அமைப்பிலான அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறோமல்லவா?” என்று கூறுகிறார்கள். நமக்கு என்ன தேவை? 661 நாம் எவ்வளவுதான் ஜனநாயக உருவிலான அரசாங்கத்தில் வாழ்ந்தாலும் எனக்குத் கவலையில்லை, நமக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தமே தேவை. சரியே! நமக்கு கிறிஸ்து தேவை. நான் ஒரு ஜனநாயக முறையிலான அரசாங்கத்தைப் பாராட்டுகிறேன்; அதற்கு ஆத்தும இரட்சிப்போடு எந்த சம்மந்தமும் கிடையாது. முற்றிலுமாக! அந்த அரசாங்கங்கள் ஒழிந்து போம், ஒவ்வொரு தேசமும் ஒழிந்துபோம். பார்வோன்கள் நின்ற இடங்களுக்கு அருகில்…நான் நின்றிருக்கிறேன், அவர்கள் அமைத்திருந்த அவர்களுடைய சிங்காசனங்களைக் கண்டறிய நீங்கள் இருபது அடி கீழே நிலத்தில் தோண்ட வேண்டும். எல்லா பார்வோன்களும், இந்த பூமிக்குரிய எல்லா அவர்களுடைய ராஜ்யங்களும், அதனுடைய எல்லா புகழ்ச்சியான காரியங்களும் ஒழிந்து மறைந்து போகும், ஆனால் யேகோவா என்றென்றுமாய் ஆளுகை செய்வார், ஏனென்றால் அவர் அழிவில்லாத தேவனாயிருக்கிறார். நாம் கிறிஸ்து இயேசு என்னும் உறுதியான கன்மலையின்மேல் நிற்கிறோம், ஏனென்றால் மற்ற எல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கிற மணல்களாய் உள்ளன. 662 அதை கவனித்தாலும்…ராஜ்யங்கள் எழும்பும், ஒழிந்து போம், ஆனால் ஓ, ஒன்றுமேயில்லை…அது…எந்தக் காரியமானாலும்…நான் கவலைப்படுகிறதில்லை; நிகழ்காரியமானாலும், வருங்காரியமானாலும், (பட்டினியோ அல்லது நாசமோசங்களோ அல்லது எந்தக் காரியமாயினும்) கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, அவன் இனி ஒருபோதும் ஒரு காலத்தின் சிருஷ்டியாயிராமல், அவன் ஒரு நித்திய சிருஷ்டியாயிருக்கிறான். ஆமென். அவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். அவன்…நீங்கி…அவன் காலம் என்ற மூலகத்துவக்கத்திலிருந்து நீங்கி நித்தியத்திற்குட்பட்டிருக்கிறான். அவன் ஒரு போதும் அழிந்து போக முடியாதே! தேவன் அவனை கடைசி நாளில் எழுப்புவதாக ஆணையிட்டுவிட்டாரே! 663 ஆகையால் அவர்கள் உங்களுக்கு எல்லா பெரிய சபைகளையும் விரும்புகிற எல்லாவற்றையும், அளித்து, உங்களுக்கு அசுத்தமான நகைச் சுவைகளையும், உங்களுக்கு சூதாட்டங்களையும், இரவு விருந்துகளையும், நீங்கள் விரும்புகிற ஒவ்வொன்றையும் அளித்து, அங்கு ஒரு கல்விபயின்ற பிரசங்கியாரை நிற்கச் செய்யக்கூடும். தங்களுடைய மொழியின் முதலெழுத்துகளைக் கூட அறிந்திருந்திராத இந்த சில பையங்களைவிட மேலான் ஒரு ஊழியத்தை அந்தப் பிரசங்கியார் செய்யாலாம். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், உங்களுடைய எல்லா கல்வியறிவின் கருத்துகளோடும் இருக்ககூடிய எல்லா பெரிய வேதப்பண்டிதர்களும் எனக்கு பிரசங்கிப்பதைக் காட்டிலும் தன்னுடைய மொழியின் முதல் எழுத்துகளை அறிந்திராத ஒரு பையன் (அறிந்துள்ள கிறிஸ்துவை) எனக்கு பிரசங்கிப்பதையே நான் தெரிந்துகொள்ள விரும்புவேன். முற்றிலுமாக! 664 அண்மையில் இங்கு கென்டக்கியில் தன்னுடைய சொந்த பெயரைக் கூடப் படிக்க முடியாத ஒரு பையனை கர்த்தர் அழைத்து அவனைப் பிரசங்கிக்கும்படிக் கூறினாராம், எனவே அவனுக்கு ஒரு பள்ளிக்கூடம் தேவைப்பட்டதாம், ஆனால் அதிகாரிகளோ அவன் பள்ளியில் கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லையாம். அதன்பின்னர் ஒரு மகத்தான பெரிய பிரசங்கியார் அங்கு அந்தவிதமான தன்னுடைய பெயரோடு கூட, தன்னுடைய பெரிய தெய்வீக பாண்டித்துவப் பட்டத்தைக் கூற அவர்களோ அவருக்கு பள்ளியை கூட்டத்தை நடத்த கொடுத்தார்களாம். நிச்சயமாகவே. அவர் இரண்டு வார எழுப்புதல் கூட்டம் நடத்தினதில் ஒரு ஆத்துமா கூட இரட்சிக்கப்படவில்லையாம். அதன்பிறகு இந்த பையனுடைய தகப்பனார் திரும்பவும் போய், “நீங்கள் இப்பொழுது அவனுக்கு கூட்டம் நடத்த இடமளியுங்கள். நான் வரிசெலுத்தும் ஒருவனாயிருக்கிறேனே, எனவே என்னுடைய பையனுக்காக அந்த இடத்தைப் பெற்றுத்தர எனக்கு உரிமை உண்டு. என்னுடைய பையனும் கூட அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்” என்றார். 665 ஆகையால் அதைக் கண்டறியும்படியாய் அவன் திரும்பிப் போய் அவர்களிடத்தில் கேட்டான், அப்பொழுது அவர்கள், “பரவாயில்லை, அவன் குறைந்தபட்சம் இரண்டு இரவுகளாவது அந்த இடத்தில் கூட்டம் நடத்த நாங்கள் அனுமதிப்போம்” என்றார்கள். ஆகவே அவர்கள் தொடர்ந்து இரண்டு இரவுகள் அவனை அந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித்தனர். 666 அந்த இரவு அந்தப் பையன் அங்கு எழும்பி நின்றபோது, அவனால் வேதத்தைக் கூட வாசிக்க முடியவில்லை, வேறுயாரோ ஒருவரே அவனுடைய பாடப்பொருளுக்கான வேதப்பகுதியை வாசிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவன் மேடையண்டை நடந்து சென்றபோது, அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். அவன் பிரசங்கித்தபோது, ஏறக்குறைய இருபது பேர் பீடத்தண்டை வந்தனர்; தனக்குத்தானே ஒரு பாணியில் பிரசங்கிக்கும் அந்தப் பிரசங்கியார் கல்வாரியின் பாடுகளை நினைத்து அழுது பீடத்தண்டை வந்தாராம். 667 நிச்சயமாகவே, சகோதரனே, அது—நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள் என்பது அல்ல, அது நீங்கள் யாரை அறிந்துள்ளீர்கள் என்பதாயுள்ளது. அதுவே திட்டமாயுள்ளது, அதுதான் இதற்கு தேவையாயுள்ளது, அதுவே கிறிஸ்துவை அறிந்துகொள்ளச் செய்கிறது. அவரை அறிந்து கொள்வதே ஜீவனாயுள்ளது; அவரைப் புறக்கணிப்பதோ மரணமாயுள்ளது. 668 துரிதமாக நம்முடைய மற்றக் கேள்விக்குச் செல்வோம், இப்பொழுது இந்த கேள்விகளுக்கான பதிலகள் பதிவிசெய்யப்பட்டு ஜார்ஜியாவிற்கு செல்கின்றன. 67. வெளிப்படுத்தின விசேஷம் 21:19 மற்றும் 20-ல் உள்ள கற்கள் எதைப்…பிரதிநிதித்துவப்படுத்துகின்றன? 669 நீங்கள் உங்களுடைய வேதாகமங்களை திறந்து பார்க்கும்படியான நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பினால் நலமாயிருக்கும், நமக்கோ இப்பொழுது அதிகப்படியான நேரம் இல்லை, ஆனால் நான் அவைகளுக்கு துரிதமாக பதிலளிக்க முயற்சிப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் இருபத்தி…அது 21:19 மற்றும் 20-ல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆம். 670 சரி, அங்கே கட்டிடத்தில் இருந்த அந்த கற்களைக் குறித்து அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் கண்டறியலாம். அந்தக் கற்கள் அஸ்திபாரங்களாயிருந்தன. நீங்கள் கவனிப்பீர்களேயானால்…சகோதரன் நெவில், நீங்கள் அதை அங்கு எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. ஒரு கல்லே ஒரு அஸ்திபாரமாயல்ல, மற்றவைகள்…ஆனால் ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. அங்கு பன்னிரண்டு கற்கள் இருந்தன. அந்த பன்னிரண்டு கற்களையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு…அளிக்கிறது…முதலாவது வச்சிரக்கல்லில் துவங்கி, பதுமராகம். அது போன்று ஒவ்வொரு கல்லும் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. 671 வேதத்தில் அங்கே அழைக்கப்பட்ட குறிப்பிட்ட கற்களை நீங்கள் கண்டடைவீர்கள். அவைகளில் சில சற்று வித்தியாசமானது, நீங்கள் அதைக் குறித்து ஒருபோதும் கேட்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் அகராதியில் தேடிப் பார்த்தால், அது அதே கல்லாயிருப்பதையும், அப்படியே சற்று ஒரு வித்தியாசமான பெயராய் மாற்றப்பட்டிருப்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள். 672 ஆனால் அது வச்சிரக்கல்லோடு துவங்குகிறது. வஞ்சிரக்கல் பென்யமீனுடைய கல்லாயிருந்தது…இல்லை அந்தக் கல்…ஓ, முதல் குமாரன் ரூபனுடையதாயிருந்தது. முதல் கல் ரூபனுடையதாயிருந்தது, அது வச்சிரக் கல்லாயிருந்தது. கடைசி கல் பென்யமீனுடையதாயிருந்தது, மேலே உள்ள கடைசி கல். 673 இப்பொழுது இந்தப் பன்னிரண்டு கற்களில் அஸ்திபாரங்கள் போடப்பட்டிருந்தன, அவைகள்—அவைகள் ஆரோனுடைய மார்பதகத்தின் மேல் தொங்கின கற்களாயிருந்தன. அவைகள்—அவைகள் அவன் இந்த—இந்த கோத்திரங்களுக்கு பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தின. இந்த—இந்த மார்ப்பதகத்தில் இங்கு உள்ள ஒவ்வொன்றும் அவர்களுடைய பிறப்புக் கற்களாயிருந்தன. ஜனங்கள் இந்த மார்ப்பதகத்தைக் கண்டபோது, இந்த மார்ப்பதக்கத்தில் அவர்கள் பிறப்புக்கல்லைக் கண்டபோது, அந்த முழு கோத்திரத்திற்கும் ஆரோன் பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை அடையாளங் கண்டு கொண்டனர். 674 இப்பொழுது, நாம் இந்தக் காலை சகோதரன் நெவிலினுடைய செய்தியில் கேட்டோம். அவர்கள் அநேக சமயங்களில் ஊரீம் தும்மிம்மைக் கொண்டு வந்தனர். அவர்கள் தங்களுடைய செய்தி உண்மையாயிருந்ததா அல்லது இல்லையா என்பதை அந்தவிதமாகவே அறிந்துகொண்டார்கள் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தக் கற்கள், அந்த மனிதன் என்னக் கூறினான் என்பதை அவர்கள் கூறப்போகும்போது, தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்தக் கற்கள் யாவும் ஒன்று சேர்ந்து பிரதிபலித்தன. அது இந்திர நீலம், வச்சிரக்கல், மாணிக்கம் என்ற அந்த கற்களின் ஒன்று சேர்ந்த ஒளியை உண்டாக்குகினது, அந்த மற்ற எல்லா கற்களும் தங்களுடைய ஒளியைப் பிரதிபலிக்க, அது பெரிய மகத்தான முழுக்காரியமும் ஒன்று சேர்ந்து கலந்த ஒரு அழகான வானவில் நிறத்தை உண்டாக்கிற்று. 675 இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு அந்த ஊரீம் தும்மீம் அந்த ஆசாரியத்துவத்தோடு எடுக்கப்பட்டுவிட்டபோது, இப்பொழுது இந்த வேதமே இன்றைக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. ஒரு பிரசங்கியார் பிரசங்கிக்கும்போது, அது மற்ற இடங்களில் முரண்பட்டதாயிருக்க, அவன் அந்த சிறு இடத்தில் மாத்திரம் நம்பிக்கைகளை வைக்கக் கூடாது. அந்த மனிதன் பிரசங்கித்துக் கொண்டிருக்க செய்தியானது முழு வேதாகமத்தையும் பிரதிபலிக்க வேண்டும். அது தான் காரியமாகும். வெறுமென ஒரு இடத்தில் கூட, “பரவாயில்லை, வேதம் இதைக் கூறுகிறது” என்று கூறக்கூடாது. ஓ, நிச்சயமாக, அது ஏராளமாக காரியங்களைக் கூறுகிறது. ஆனால் நீங்கள் அவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இணைக்க வேண்டும். தேவனுடைய ஆவியானது வந்து வார்த்தைக்குள்ளாக செல்லும்போது, அது அவை எல்லாவற்றை ஒன்று சேர்த்து பொருத்த, அப்பொழுது அது ஒரு மகத்தான பெரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது, அந்த வெளிச்சம் இயேசு கிறிஸ்துவாயுள்ளது. ஆமென். 676 இப்பொழுது, இந்த பன்னிரண்டு கற்கள் ரூபனிலிருந்து துவங்கி, காத் தொடர்ந்து பென்யமீன் வரையிலான பன்னிரண்டு அஸ்திபாரங்களாயிருந்தன; பன்னிரண்டு கோத்திரங்கள், பன்னிரண்டு கற்கள். அந்தக் கற்கள் புதிய பரலோக எருசலேமில் உள்ள ஆலயத்தில் உள்ளன, ஒவ்வொரு அஸ்திபாரமும் ஒவ்வொரு கோத்திரப் பிதாவின் பேரில் வைக்கப்படும். 677 இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் அந்தக் கற்களை கவனிப்பீர்களானால், இப்பொழுது அந்த கோத்திரப் பிதாக்கள் வேறு ஒரு காரியத்திற்குள், அப்படியே மற்றொரு கேள்வியில் சரியாக பிரதிபலிக்கப்பட்டதை நீங்கள் கவனிக்கப் போகிறீர்கள். 68. வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு…நான்கு ஜீவன்களை விளக்கவும்—விளக்கிக் கூறவும். 678 சகோதரன் நெவில், நீர் அதை சரியாக எடுத்து வைத்திருந்தால் அல்லது உங்களில் சிலர் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை எடுத்திருந்தால், நாம் இதை ஒரு நிமிடம் அப்படியே வாசிப்போம். அது—அது இங்கு ஒரு அழகான காட்சியாயுள்ளது…இதோ நானே அதை எடுத்துவிட்டேன், வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம்: அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தக… 679 இப்பொழுது அந்த இடம் அல்ல. நான் இன்னும் சற்று முன்னோக்கி செல்லவேண்டும், நான்கு ஜீவன்கள். நாம் 14—வது வசனத்தைப் பார்ப்போம். சரி, ஐயா. இப்பொழுது நாம் இங்கே பார்ப்போம், அது சரி. இப்பொழுது நாம் இங்கே 12-வது வசனத்தில் துவங்குவோம், இல்லை, நான் நினைக்கிறேன்…“அதற்கு நான்கு ஜீவன்களும் ‘ஆமென்’ என்று சொல்லின.” இல்லை, அதற்கு சற்று பின்னால் உள்ள இடத்தில் உள்ளது, சகோதரன் நெவில் “பின்னும் நான்…சத்தத்தைக் கேட்டேன்…” 680 நாம் அப்படியே ஒரு நிமிடத்தில் அதைப் பார்ப்போம், நான் சற்று முன்னர் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். ஓ, இதோ நமக்கு கிடைத்துவிட்டது, நாம் 6-வது வசனத்தில் துவங்குவோம். 5-வது வசனம்: அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவங்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். 681 நீங்கள் அந்தக் கேள்வியை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் அதற்கு இங்கு ஒரு நிமிடத்தில் பதிலளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை மீண்டும் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுது நான், “ஆட்டுக்குட்டியாவனருக்கு இருந்த ஏழு கண்களின் ஏழு ஆவிகளின்” பேரில் தொடர்ந்து பேச விரும்புகிறேன். ஓ, அது உண்மையாகவே அழகான காரியமாயுள்ளது. (பரவாயில்லை, நாம் இப்பொழுது இந்த சகோதரனுடைய கேள்வியைப் பார்க்க வேண்டும்.) சரி, அதை இப்பொழுது மறந்துவிடாதீர்கள். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும்… 682 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், இங்குள்ள அந்த நான்கு—நான்கு ஜீவன்கள், இப்பொழுது நாம் தொடர்ந்து சற்று மேற்கொண்டு வாசிப்போம்: …சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்,… தேவரீர்…பாத்திரராயிருக்கிறீர்;…புதியபாட்டைப் பாடினர்கள். (தொடர்ந்து அவர்களுடைய…அவர்களுடைய ஆராதனை கர்த்தருக்கே…) 683 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள இந்த நான்கு ஜீவன்களும், நீங்கள் அவைகளை கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு இடத்திலும்…(வேத வாசகர்களாகிய நீங்கள், அந்த மனிதன் இந்த ஒலிப்பதிவினைக் கேடகப் போகின்றார்). அந்த நான்கு ஜீவன்களும், அவைகள் நான்கு முகங்களை உடையவைகளாயிருந்தன: ஒன்று ஒரு மனித முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொன்று ஒரு காளை முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொரு முகம் ஒரு கழுகைப் போன்றிருந்தது, மற்ற முகமோ ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அவைகள் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லவில்லை. அவைகளால் பின்னோக்கிச் செல்ல முடியவில்லை. 684 பண்டைய வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை, அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அதை கற்றபோது, நான் இங்கே இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பேரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அதிகம் பண்டைய—காலத்தவர்களே நினைவில் வைத்திருக்கிறீர்கள். 685 பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் சென்ற ஒவ்வொரு வழியிலும் அவைகள் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன. அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு மனிதனைப் போல சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு சிங்கத்தைப் போல சென்று கொண்டிருந்தன; இந்தவிதமாய்ச் சென்றால், அவைகள் கழுகைப் போல சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் காளையைப் போல சென்று கொண்டிருந்தன. பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, அவைகள் எல்லா நேரத்திலும் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன. 686 இப்பொழுது அந்த நான்கு ஜீவன்கள். இப்பொழுது இதைத் துரிதமாகப் பார்ப்போம், ஏனென்றால் நான் இதன் பேரில் நீண்ட நேரம் தரித்திருக்க விரும்பவில்லை. ஆனால் நான்கு ஜீவன்கள்…வேதாகமத்தில் மிருகம் “வல்லமையைக்” குறிக்கிறது. இந்த ஜீவன்கள் அங்குள்ள ஏரியில் இல்லை எங்கோ சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்ததல்ல, ஆனால் இந்த ஜீவன்கள் தேவனுடைய சிங்காசனத்தில் இருந்தன, அவைகள் தேவனை ஆராதித்துக்கொண்டிருந்தன. அந்த நான்கு ஜீவன்களும் பூமியிலிருந்து எழும்பி வருகிற நான்கு வல்லமைகளை பொருட்படுத்துகின்றன, அந்த நான்கு வல்லமைகளும் நான்கு சுவிசேஷங்களாயிருந்தன; மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்; ஒன்று மற்றொன்றோடு முரண்படுகிறதில்லை. 687 அவைகளில் ஒன்று,…சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல புறப்பட்டுச் செல்கிறபடியால், அது கண்டிப்பானதாய் உள்ளது, அது தைரியமானதாயுள்ளது; சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல தைரியமுள்ளதாயுள்ளது. அது ஒரு சிங்கத்தைப் போல ஒரு ராஜாவாய் உள்ளது. அது மனித முகத்தைப் போல செல்லுமானால், அது ஒரு மனிதனைப் போன்று தந்திரமும், புத்திசாலித்தனமுமாயுள்ளது. அது கழுகைப் போல் செல்லுமானால், அது துரிதமான செட்டைகளோடு மிக உயரத்துக்கு செல்வதாயுள்ளது. அது…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? அது காளையைப் போல செல்லுமானால், அது பணிபுரியும் குதிரையாய் இழுக்க முடிந்ததாயுள்ளது, பணிபுரியும் காளையாய் சுவிசேஷ பாரத்தை இழுக்கிறது. நான்கு ஜீவன்களும் நான்கு வல்லமைகளாய் இருந்தன, அவைகள்; மத்தேயு, மாற்கு லூக்கா மற்றும் யோவான் என்பவைகளாயிருந்தன; இந்த நான்கு சுவிசேஷங்களும் தேவனுடைய பிரசன்னத்தில் வெளியே வட்டமிட்டுள்ளன. அது… 688 நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், அவைகள் முன்னாலும், பின்னாலும் கண்களை உடையவைகளாயிருந்தன. அவைகள்—அவைகள்…அது எங்கெங்கெல்லாம் சென்றதோ, அதனை பிரதிபலித்தது. அவைகள் எங்கெங்கெல்லாம் சென்று கொண்டிருந்தன என்பதை அவைகள் கண்டன. அது வெளியே செல்லுகிற விதமாக அந்த சுவிசேஷங்களின் வல்லமையும் உள்ளது, அது…அது ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பெற்றுள்ளது; அது கழுகின் வேகத்தைப் பெற்றுள்ளது; அது காளையைப் போன்று வல்லமையை, இழுக்கும் வல்லமையை, பாரம் சுமப்பதாயுள்ளது; அது ஒரு சிங்கத்தின் கண்டிப்பையும், தைரியத்தையும் பெற்றுள்ளது. பாருங்கள், அவை நான்கு சுவிசேஷங்களாய் உள்ளன, அவைகளே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு வல்லமைகளாய் உள்ளன. சரி, இப்பொழுது அடுத்தது: 69. இருபத்தி நான்கு முப்பர்கள் யாராயிருக்கிறார்கள்? சரி, நான் நினைக்கிறேன் அந்த…இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்? 689 இப்பொழுது அது எளிமையானது, நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். இருபத்தி நான்கு மூப்பர்களும் சிங்காசனத்திற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது…அது 4-ம் வசனத்தில் கண்டறிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். “புறப்பட்டுச் சென்ற மற்றொரு…” நான்…நாம் பார்ப்போம், நான்…4:10 690 சரி, வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் 10-ம் வசனம். அது சரி. நாம் அதை எடுப்போம். இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கீரிடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். 691 இப்பொழுது இருபத்து நான்கு மூப்பர்கள். ஒரு முப்பன் என்பவன் கண்காணியாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களுமாயிருந்தனர். அவர்கள் ஒரு புறத்தில் பன்னிரண்டு பேர்களும், மறுபுறத்தில் பன்னிரண்டு பேர்களுமாய் உட்கார்ந்துகொண்டிருந்தனர். இருபத்து நான்கு மூப்பர்களாயிருந்தவர்கள், பழைய ஏற்பாட்டு கோத்திரப்பிதாக்கள் ஒருபக்கம் இருந்தனர்; புதிய ஏற்பாட்டு பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்றொரு பக்கத்தில் இருந்தனர். இயேசு, “நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள்” என்று கூறவில்லையா? 692 இப்பொழுது அஸ்திபாரங்கள், பாருங்கள், அங்கே ஒரு மரமும் கூட உள்ளது. அந்த மரம் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். அது மாதந்தோறும் அதனுடைய கனியைத் தரும், அது வருடத்தில் பன்னிரண்டு மாதங்களாய் உள்ளன. அது ஒவ்வொரு வருடமும் பன்னிரண்டு விதமான கனிகளைக் கொடுக்கும். பன்னிரண்டு, “ஆராதனை” என்பதைக் குறிக்கும் எண்ணாயுள்ளதை நீங்கள் பாருங்கள். அங்கே இருந்தது இருபத்து நான்கு, இருபத்தி நான்கு, பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களுமாகும். அவர்கள் சிங்காசனத்தண்டை வீற்றிருக்கிறார்கள். 693 சரி, இப்பொழுது 4-வது வசனம்…இல்லை நான்காவது கேள்வி: 70.ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைச் சுட்டிக்காட்டினது? 694 சிவப்பு நூல், நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது யூதாவாயிருந்தது. அவனுக்கு குமாரர்கள் இருந்தனர், அவனுடைய குமாரர்களில் ஒருவன் ஒரு கானானிய ஸ்திரீயை விவாகம் செய்தான். இந்த கானானிய ஸ்திரீ எந்த பிள்ளையையும் பெற்றெடுக்கவில்லை, அவனுடைய குமாரனோ மரித்துப் போனான். அதன்பின்னர், அப்பொழுதிருந்த பிரமாணப்படி…அடுத்த குமாரன் சகோதரனுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு மரித்தவனுக்காக சந்தானம் உண்டாக்க வேண்டியதாயிருந்தது. மற்ற மனிதன் செய்ய வேண்டியதை செய்ய ஒத்துழைக்காததால் கர்த்தர் அவனைக் கொன்று போட்டார். அதன்பின்னர் அவனுக்கு இன்னும் ஒரு இளைய குமாரன் இருந்தான்; ஆகையால் யூதா, “இந்த குமாரன் பெரியவனாகி அவன் விவாகம்பண்ணும் ஸ்தானத்தை அடையும் வரை நீ காத்திரு” என்றான். 695 அவன் பெரியவனாகி, தன்னுடைய இரண்டு சகோதரரின் முந்தின மனைவியை விவாகம் பண்ணி, அவனுக்கு முன் மரித்துப் போயிருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு சந்தானம் உண்டாக்க வேண்டிய ஒரு ஸ்தானத்தை அடைந்தபோது, யூதா அந்த ஸ்திரீயை (கானானிய ஸ்திரீயை) அந்த குமாரனுக்கு, அந்த பையனுக்குத் தராமல் அப்படியே அவனை விட்டுவிட்டான். ஆகையால் அவன் தவறு செய்து கொண்டிருந்தான் என்பதை அவள் கண்டு, அவள் வெளியே போய் தன்னுடைய முகத்தின்மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டு, ஒரு வேசி அமர்ந்திருப்பது போல ஒரு பொதுவான இடத்தில் அமர்ந்திருந்தாள். 696 யூதா அந்த வழியே வந்தபோது அந்த ஸ்திரீயை ஒரு வேசியென்று எண்ணி, தன்னுடைய மனைவியைப் போல அந்த ஸ்திரீயை அழைத்துச் சென்று, அவளோடு சேர்ந்தான். அப்பொழுது அவள், “நீர் என்னோடு சேருவதற்கு என்ன பேரம் தருவீர்?” என்று கேட்டாள். அவன்…அவள் கேட்டாள்… 697 அவன், “நான் ஒரு—ஒரு வெள்ளாட்டுக் குட்டியைத் தருகிறேன்” என்றான். அப்பொழுது அவள், “நீர் அதை செய்வீர் என்பதற்கு இப்பொழுது எனக்கு அடையாளத்தைத் தாரும்” என்றாள். எனவே அவள் அவனுடைய கைக்கோலையும், முத்திரை மோதிரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டாள். 698 அதன்பின்னர் அவர்கள் ஆட்டுக்குட்டியை கொண்டுவந்தபோது, அவர்களால் அந்த வேசியை கண்டறிய முடியாமற்போயிற்று, ஏனென்றால் அவள் ஒரு வேசியாயிருக்கவில்லை. 699 கொஞ்சங்கழித்து அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்தாள் என்பதை அவள் காண்பித்திருந்தாள். அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்ததை அவள் காண்பித்தபோது, அவர்கள் யூதாவினிடத்தில் வந்து, “உன்னுடைய மருமகள் வேசித்தனம்பண்ணியிருக்கிறாள்” என்றும், “காரணம் அவள் தாயாக வேண்டியவனாயிருக்கிறாள், உம்முடைய இரு பையன்களும் மரித்துவிட்டார்களே” என்றனர். 700 அப்பொழுது அவன், “அவளை வெளியே கூப்பிட்டு, அவளை சுட்டெரித்துப் போடுங்கள்” என்றான். 701 அப்பொழுது அவள் யூதாவினிடத்தில், “இந்த கைக்கோலும், இந்த முத்திரை மோதிரமும் யாருடையதோ, அந்த மனிதனே இதைச் செய்தான்” என்று சொல்லியனுப்பினாள். சரி, அது அவளுடைய மாமனராயிருந்தது. 702 அப்பொழுது அவன், “என்னிலும் அவள் நீதியுள்ளவள்” என்றான். 703 இப்பொழுது, அவள் தன்னுடைய பிள்ளைகளை பிரவசிக்க வேண்டியதை அறிந்தபோது, அவைகள் இரட்டைப் பிள்ளைகளாயிருந்தன. அந்த இரட்டைப் பிள்ளைகள்…பண்டைய யூத வழக்கப்படி, பிறக்க வேண்டிய முதல் குழந்தைக்கு, அந்த முதல் குழந்தையே, முதல் குழந்தை வெளிப்படும்போது, அதுவே சேஷ்ட புத்திரபாகத்தை உடையவதாயிருந்தது. அது அவளுடைய முதல் குழந்தையாயிருந்தது என்பது நினைவிருக்கட்டும். மற்ற பையன்கள் அவளுக்கு இதற்கு முன்னர் இல்லாதிருந்தது. அவள் இதற்கு முன் ஒருபோதும் ஒரு குழந்தையைப் பெற்றிருந்ததில்லை. 704 அவளுடைய முதல் குழந்தை வெளிப்பட்டபோது, அது முதலில் ஒரு கரத்தையே நீட்டியிருந்தது. எனவே மருத்துவச்சியோ அந்த கையில் ஒரு சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், ஏனென்றால் ஒரு சிவப்பு நூல் கன்னி மரியாளின் முதல் குமாரனின் மீட்பைக் குறித்து பேசினது…சிவப்பு நூல் மீட்பைக் குறித்தாயிருக்கிறது. 705 அவன் தன்னுடைய கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்டபோது, மற்றொருவன் முதலில் வெளிப்பட்டான். அவன் அதைச் செய்தபோது, “நீ ஏன் இதைச் செய்தாய்? முந்தின மற்றவனே சேஷ்ட புத்திரபாகத்தை உடையவனாயிருக்கிறான்” என்று கூறினாள். 706 ஆகையால் அதைத்தான் ஆதியாகமம் 38 பொருட்படுத்துகிறது, நீங்கள் பாருங்கள். அந்த முதல் குழந்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரையில் அப்படியே தரித்திருந்தது. அந்த முதலாவது மீட்பின் பிரமாணத்தின் கீழே இருந்தது. 707 …கோவேறு கழுதை குட்டியைக் குறித்து நான் கூறினதை நீங்கள் அறிவீர்கள், நான் அதை குறித்து கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள், அதாவது அதனுடைய கண்கள்…எப்படியெல்லாமோ இருக்க, அதனுடைய காதுகள் நிலைகுலைந்து போய், ஆனால் அதே சமயத்தில் அது ஒரு சேஷ்ட புத்திரபாகத்தோடு பிறந்திருந்தாலும், ஒரு குற்றமற்ற பரிபூரண ஆட்டுக்குட்டியே அதனுடைய ஸ்தானத்தில் மரித்தது. அங்குதான் காரியமே உள்ளது. 708 ஆகையால் அது சேஷ்டபுத்திர பாகத்திற்கானதாயிருந்தது. அந்த முதல் குழந்தை தாயினிடத்திலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் அந்தக் கரத்தைக் கண்டனர். (அது மீண்டும் திரும்ப உள்ளேயும் இழுத்துக்கொள்ளலாம் என்பதையும் அறிந்திருந்தனர்) அவன் அதை உடையவனாயிருந்தான் என்பதை அவன் காண்பிக்கும்படி தன்னுடைய கரத்தை வெளியே நீட்டினபோது, அவனே முதலாவதாயிருந்தான், அப்பொழுது மருத்துவச்சி அவனுடைய கையில் சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், அப்பொழுது அவன் தன்னுடைய கரத்தை திரும்பவும் உள்ளே இழுத்துக் கொண்டான். புரிகிறதா? ஆனால், அவனே முற்றிலும் முதலாவதாயிருந்தான். அது சிவப்பு நூலாயிருந்தது, சிவப்பு நூல்…வேதாகமம் முழுவதுமே மீட்பையே பொருட்படுத்துகிறது; அது முதல் பிள்ளையின் வருகையை முன்னோக்கியவாறு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது. 709 குதிரையின் முதல் குட்டி பிறந்தால், பசுவின் முதல் கன்று பிறந்தால், அது என்னவாயிருந்தாலும், முதலில் பிறந்திருந்த யாவும் (அது பிறந்தவுடன்) மீட்பின் கீழாக, மீட்கப்பட வேண்டியதாயிருந்தது; ஒவ்வொன்றும் மீட்கப்பட வேண்டியதாயிருந்ததே! அல்லேலூயா! ஓ, அது என்னை அப்படியே சிலிர்படையச் செய்கிறது. உங்களுக்கு இது புரிகிறதா? முதலாவது மீட்கப்பட வேண்டியதாயிருந்தது. அது ஒரு பிரமாணமாயிருந்தது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 710 இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவர் முழு உலகையும் மீட்டார்.நிச்சயமாகவே அவர் மீட்டார். பூமியின் மீது சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அவர் மீட்பராய் இருந்தார். அவரே மீட்பராயிருந்தார். அதாவது…எல்லா மீட்பும் அவருக்குள் இருந்தது, வேறு எந்த வழியிலும் உங்களால் ஒருபோதும் வரவே முடியாது, நற்கிரியைகள் மூலமாகவோ, சபையில் சேர்ந்து கொள்ளுதலின் மூலமாகவோ அல்லது அது என்னவாயினும் வேறெந்த வழியில் வரவே முடியாது: நீங்கள் அந்த சிவப்பு நூலின் மூலமாகவே, அந்த மீட்பரின் மூலமாகவே, அந்த இனத்தான் மீட்பரின் மூலமாகவே வர வேண்டும். சரி, இப்பொழுது அடுத்தது. 71. வெகுமதிகள் எங்கே…வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவிருக்கிற வெகுமதிகள் என்னவாயுள்ளன? ஓ, சகோதரன் பாமர், நீங்கள் கடினமாக சில கேள்விகளையே கேட்கிறீர்களே! 711 இப்பொழுது, மீட்பு, இங்கே இந்த நூல்களை, இந்த சிவப்பு நூலை, நாம் அது மீட்பை பொருட்படுத்தினதைப் பார்க்கிறோம். 712 இப்பொழுது அடுத்த கேள்வியாயிருப்பது: வெளிப்படுத்தின விசேஷம் 11-ல் உள்ள வெகுமதிகள் என்ன? 713 ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது…இப்பொழுது அன்றொரு இரவு பதிலளிக்கப்பட்ட ஒரு கேள்விக்கே பதில் கூறப்போகிறோம், அதாவது என்னுடைய நண்பராயிருக்கும் ஒரு பிரசங்கியார் யூதரைக் குறித்து எழுதி, அது எப்படியிருக்கும் என்று கேட்டிருந்த கேள்வியேதான். 714 இப்பொழுது இந்த யூதர்களுக்கு மூன்றரை வருடம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? எழுபதாவது வாரம் வாக்களிக்கப்பட்டிருந்தது. அதில், “மேசியா வந்து அந்த வாரத்தின் மத்தியிலே சங்கரிக்கப்படுவார்” என்று கூறப்பட்டிருந்தது. மூன்றரை வருடங்கள் கிறிஸ்து பிரசங்கித்து, சரியாக மூன்றரை வருடத்தில், கொல்லப்பட்டார், மூன்று வருடங்களும் ஆறு மாதமும் அவர் பிரசங்கித்தார். 715 அதன் பின்னர் பாழாக்குகிற அருவருப்பு உண்டாகிறது, முகமதியரின் பள்ளி வாசலானது பரிசுத்த ஸ்தலத்தில் கட்டப்பட்டது, அது அங்கே நிற்கும் என்று தேவன் கூறினவிதமாகவே இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அது சம்பவித்தது. தீர்க்கதரிசி அதைப் பார்த்தான், அதைக் கண்டான், “அவர்கள்…புறஜாதி யுகம் முடிவடையும் வரையில் அது புறஜாதிகள் அங்கே உடைமையாயிருப்பர்” என்று கூறினான். 716 இப்பொழுது இன்னும் மூன்றரை வருடங்கள் வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் கவனிப்பீர்களேயானால், வெளிப்படுத்தின விசேஷம் 11-ன் படியான இந்த சாட்சிகள் ஆயிரத்திருநூற்றறுபது நாட்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; சரியாக மூன்றரை வருடங்கள். இப்பொழுது…அவர்கள் இரட்டு வஸ்திர முடுத்தியிருந்தனர். இப்பொழுது அவர்களுடைய ஊழியத்தையும், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது, இந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்படுகின்றனர். 717 இப்பொழுது… புறஜாதி சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குப் பிறகு அவர்கள் யூதரிடத்திற்குத் திரும்பினர். விவாகம் செய்து கொண்டபோது ரெபேக்காள் ஈசாக்கோடு ஆபிரகாமினுடைய ஸ்தலத்திற்குள்ளாக கொண்டு செல்லப்பட்டதுபோல, புறஜாதி சபையானது கலியாண விருந்திற்காக பரலோக வீட்டிற்குச் செல்கிறது. ரெபேக்காளும் ஈசாக்கும் ஆபிரகாமுக்கிருந்த முழு உடைமையோடும் வெளியே வந்தனர், அவையாவும் ஈசாக்கைச் சென்றடைந்தது. முற்றிலுமாக! ஈசாக்கு முதலில் விவாகம் செய்துகொள்ளும் வரையில் அது ஈசாக்கினண்டை வர முடியவில்லை. ஓ அல்லேலூயா! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 718 கிறிஸ்து…தேவன் அந்த பரிபூரணத்தில் வாசம் செய்கிறார், அழிவுள்ள சரீரமானது முற்றிலுமாக என்றென்றைக்கும் நித்தியத்தினூடாக நிலைத்திருக்கும். ஆட்டுக்குட்டியானவரும் மணவாட்டியும் பரலோகத்தில் விவாகம் செய்துகொள்ள, அவளோ முழு சொந்தத்தில் வெளியே நடந்து வருகிறாள். முற்றிலுமாக! ஈசாக்கும் ரெபேக்காவும் முழு உடைமையில் புறப்பட்டு வந்தனர். 719 இந்த விழா பரலோகத்தில் நடந்து கொண்டிருக்கையில், மணவாட்டி, புறஜாதி மணவாட்டி பிரபுவை (தேவனுடைய குமாரனை) மகிமையில் விவாகம் செய்து கொள்கிறாள்; அவர்கள் விவாகம் செய்து கொண்டு, அங்கே மூன்றரை வருடங்கள் நிகழ்கிற…மோசேயும், எலியாவும்… 720 மோசே ஒரு போதும் மறைந்துவிடாமல்…இல்லை, அவனுடைய சரீரம் தூக்கிச் செல்லப்பட்டது. தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர், அவன் சரீரத்தில் அழிந்து போய்விடவில்லை, அவன் கிறிஸ்துவின் ஒரு பரிபூரண மாதிரியாயிருந்தான். அவன் மரித்தபோது, தூதர்கள் அவனைத் தூக்கிச் சென்றனர், அவன் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான் என்று பிசாசு கூட அறிந்திருக்கவில்லை. அவன் பிராதான தூதனாகிய மிகாவேலிடத்தில் அவனுடைய அடக்கத்தைக் குறித்து தர்க்கித்துப் பேச முயன்றான். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. தேவன் அவனை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு சென்றார். 721 எலியா, ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி, அங்கே நடந்து சென்று கொண்டிருந்தபோது, யோர்தானண்டை நடந்து சென்று தன்னுடைய சால்வையை எடுத்து, தண்ணீரை அடித்தபோது, அந்தத் தண்ணீர் வலது, இடது பக்கமாகப் பிரிந்தது. அவன் மலையின்மேல் ஏறிச் சென்றான். எலிசா கூறினான்…எலியா, “நீ எதற்காக என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். 722 அதற்கு அவன், “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்க வேண்டும்” என்றான். 723 அப்பொழுது எலியா, “நீ ஒரு அரிதான காரியத்தைக் கேட்டிருக்கிறாய், ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் நீ என்னைக் கண்டால் உனக்குக் கிடைக்கும்” என்றான். அவன் எலியாவை கவனித்துக் கொண்டேயிருந்தான். 724 கொஞ்சங்கழித்து பரலோகத்திலிருந்து ஒரு அக்கினிரதமும், அக்கியமயமான தூதர்களும், அக்கினிக் குதிரைகளும் இறங்கி வந்தது, எலியா அதில் ஏறி மகிமைக்குள்ளாகச் சென்றான். அவன் மரணத்தை ஒரு போதும் ருசிபார்க்கவில்லை, அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மரிக்க வேண்டியதாயுள்ளதே! 725 வெளிப்படுத்தின விசேஷம் 11-ன் படியான இந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், மோசேயும் எலியாவும் செய்த அதேக் காரியத்தை அவர்கள் செய்கிறார்கள். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அந்த எலியாவும், மோசேயும் இன்னமும் உயிரோடிருக்கிறார்கள் என்று எனக்கு பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக! 726 ஏன்? மறுரூப மலைக்கு முன்பே…மறுரூபமலையிலே இயேசு கல்வாரிக்கு செல்லும் முன்னே, அங்கே மோசேயும், எலியாவும் அங்கே நின்று கொண்டு அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தனர். நிச்சயமாகவே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், அவர்கள் மரித்துப்போகவில்லை. அவர்கள் ஒருபோதும் மரித்துப் போயிருக்கவில்லை; அவர்கள் சாவுக்கேதுவானவர்கள், அவர்கள் மரிக்க வேண்டும். ஆகையால் அவர்கள் ஒரு மகிமையடைந்த நிலையில் அந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். 727 ஆகையால் அவர்கள் திரும்பி வந்து சரியாக மூன்றரை வருடங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழே பிரசங்கிக்கும்போது, புறஜாதிகளிடத்திலிருந்து ஆசீர்வாதங்கள் எடுக்கப்பட்டிருக்கும், (சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்); குளிர்ந்துபோன சம்பிரதாயமான சபையோ கம்யூனிஸ்டுகளினாலும், ரோம அரசாங்கத்தாலும் நாய்களைப் போல வேட்டையாடப்படும், அவர்கள் வேட்டையாடப்படும்போது கொல்லப்படுவர். அப்பொழுது அவர்கள் கொல்லப்படுகின்றனர்; இந்தத் தீர்க்கதரிசிகள் மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பின்னர், அவர்கள் மகா நகரத்தின்…விசாலமான வீதியிலே கொல்லப்பட்டனர், அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அது ஞானர்த்தமாய் சொல்லப்பட்டது, அது முன்னர் எருசலேமாயிருந்தது; பாருங்கள் முன்பு எருசலேம். 728 அவர்கள் மூன்று இராப் பகல் வீதியிலே கிடந்தனர். அதன்பின்னர் மூன்றரை நாளைக்குப் பின்பு ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் எழும்பி நின்றனர். அவர்கள் மற்ற சாவுக்கேதுவானவர்களைப் போலவே மரிக்க வேண்டியதாயிருந்தது, அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் இந்த இரண்டு பிரசங்கிமார்களைக் கொன்றபோது… 729 அவர்கள் தவறானதற்கு எதிராக பிரசங்கித்தனர், அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். யார் அதைச் செய்தது? பார்த்தீர்களா? அவர்கள் வானத்திலிருந்து வாதைகளைக் கொண்டுவந்து,…தங்களுக்கு வேண்டும்போதான எந்த நேரத்திலும்…அவ்வளவு துரிதமாக செய்து பூமியை வாதித்தனர். அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். தங்களுக்கு வேண்டும்வரை மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தனர். அது யாராயிருந்தது? சரியாக மோசேயும், எலியாவுமே. அவர்களே இரண்டு சாட்சிகளாயிருக்கிறார்கள். 730 அவர்கள் சபையை இல்லை உலகத்தை வேதனைப்படுத்தின போது, தங்களுடைய பிரசங்கத்தினால் யூதர்களை திரும்ப ஏற்றுக் கொள்ளச் செய்து, அவர்களை மனந்திரும்பதலுக்குக் கொண்டு வந்து, அவர்களை திரும்ப விசுவாசிக்கும்படிக்கு கொண்டுவந்து…மணவாட்டிக்காக இயேசு வருவதை அவர்கள் காணும்போது, அவர்கள், “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், அது அவரே!” என்று கூறுவர். ஆனால் அவர் அவர்களுக்காக வரவில்லை; அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறார். அவருடைய மணவாட்டி… 731 யோசேப்பு எகிப்திற்குச் சென்றபோது, அவன் தன்னுடைய சகோதர்களை தன்னோடு அழைத்துச் செல்லவில்லை, ஆனால் அவன் அங்கே தன்னுடைய மணவாட்டியை பெற்றுக்கொண்டான். முற்றிலுமாக! ஆனால் அவன் தன்னை தன்னுடைய சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினபோது, அப்போது அங்கே யாருமே இருக்கவில்லை. அது முற்றிலும் உண்மை. அவர் தம்மை இந்த யூதர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அப்பொழுது அங்கே யூதர்களைத் தவிர வேறுயாரும் இருக்கமாட்டார்கள். அங்கே யோசேப்பைக் கொன்றவர்கள் அங்கே நின்றனர்; அப்பொழுது அவனோ, “நான் தான் யோசேப்பு, உங்களுடைய சகோதரன்” என்றார். அவன் அழுதான். 732 அப்பொழுது அவர்களோ, “இப்பொழுது அதற்கான தண்டனை எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் அவனைக் கொன்றுபோட்டோம்” என்றனர். 733 அதேக் காரியம், அந்த யூதர்கள் இப்பொழுது வருகைக்கு சற்று முன்னர் பெரிய இக்கட்டு காலத்தை உடையவர்களாயிருக்க, துன்புறுத்தலோ அவர்களை திரும்பவும் தாய் நாட்டிற்கு ஓடச் செய்யும். அது ஒரு கூட்ட ஆடுகளைத் திரும்ப அப்பாலுள்ள கர்மேல் பர்வதத்திற்கு அவைகளை விரட்டுகிறது போன்றதாயுள்ளது. 734 கர்த்தராகிய இயேசு தம்முடைய மணவாட்டிக்காக வரும்போது, அவர்கள் அவரைப் பார்ப்பார்கள், அப்பொழுது அவர்கள், “இவருக்காக காத்திருந்தோம், அதோ அவர் இருக்கிறாரே!” என்பார்கள். அவர் தம்முடைய ஆரோக்கியமான செட்டைகளோடு எழும்புவார். அது உண்மை. 735 சபை, மீதமுள்ள யூதர்கள், அவர்கள் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக் கொல்லும்போது, அவர்கள் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும் சோதோம், எகிப்து என்ற வீதியில் கிடப்பர், அங்கே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அப்பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை (உலகம் செய்கிறது போல) அனுப்புவார்கள். 736 இப்பொழுது, சகோதரன் பாமர், நீர் இங்கே இருக்கிறீர். முழு உலகத்திலும் ஒரே ஒரு தேசமே ஒரு யுத்தத்திற்குப் பிறகு வெகுமதிகளை எப்போதும் அனுப்பினதாயுள்ளது, அதுவே ரோம சாம்ராஜ்யம் என்பதை நீர் ரோம சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் கண்டறிவீர். 737 அந்தக் காரணத்தினால்தான் அந்திக் கிறிஸ்து ரோமாபுரியிலிருந்து வருகிறான் என்று நான் கூறுகிறேன். மிருகம் ரோமாபுரியிலிருந்து வருகிறது, அது மாஸ்கோவிலிருந்து வரமுடியாது. அது ரோமபுரியிலிருந்தே வருகிறது, அந்த வலுசர்ப்பம் அந்த ஸ்திரீ தன்னுடைய பிள்ளையை பெற்றவுடனே அதைப் பட்சித்துப் போடும்படிக்கு நின்றது. அந்த பிசாசு, அந்தப் பிசாசு எங்கேயிருந்தது? அது யாராயிருந்தது? அகஸ்துராயன் ஆட்களை அனுப்பி, இரண்டு வயத்திற்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்று போட்டான். அந்த வலுசர்ப்பம், சர்ப்பம், மிருகம், “வல்லமையைக்” குறிக்கிறது. அந்த ரோம அதிகாரம் அந்த பிள்ளை கிறிஸ்துவைக் கண்டறிந்து துன்பப்படுத்த முயன்றது. 738 அந்த அதேக் காரியம் தான்! ஒவ்வொரு முறையும் அந்த ரோமர்கள், அந்த பண்டைய அஞ்ஞான ரோமர்கள் ஒரு பெரிய வெற்றியைக் கொண்டாட வழக்கமாக அவர்கள் வெள்ளைக் கற்களையும் மற்ற ஒவ்வொருகாரியத்தையும் ஒருவருக்கொருவர் அந்தவிதமான வெகுமதிகளை ஒரு நினைவாக அனுப்புவார். ஆகையால் அந்த கற்கள்…அது என்னவாயிருந்ததென்றால், ரோம சபையானது அந்த சிறு வெகுமதிகளை அவர்களுக்கிடையே அனுப்பிக் கொண்டதாயிருந்தது. முற்றிலுமாக! சரியாக. அது அவ்வாறு சம்பவிக்க வேண்டியதாயுள்ளது. 739 நான் அங்கே வாடிகன் நகரத்தில் நின்று அதை வேதாகமத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். போப்பாண்டவர் மூன்று கிரீடங்களை அணிந்து கொண்டிருக்கிறார், விக்காரிவ்ஸ் பிலிஐ டெய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிற அந்த எல்லாக் காரியங்களும் முற்றிலும் உண்மையாயிருக்கிறது; ஒரு மதசம்பந்தமான கூட்டமே வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்தையும் ஆளுகை செய்கிறது, அதுதான் செய்கிறது. அங்கு உள்ள அது அவ்வண்ணமாகவே உள்ளது. 740 கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை, (இல்லை ஐயா), அவர்கள் எவரையும் போல நல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் அவர்களுடைய மார்க்கமோ இந்த வேதத்தின் படியில்லாமல் தவறானதாயுள்ளது. இந்த வேதம் சரியானதாயிருந்தால், அவர்கள் தவறாயிருக்கிறார்கள். அவர்கள் கூறுவது…“வேதம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அதாவது சபை என்னக் கூறுகிறது என்பதே முக்கியம்” என்கின்றனர். வேதம் தலைமையான உச்ச அதிகாரத்துடன் பேசுகிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோமே! முற்றிலுமாக, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 741 ஆகையால் நீங்கள் அங்கு பாருங்கள், அப்பொழுது அனுப்பப்பட்டிருந்த அந்த கற்கள், இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கற்களே வெகுமதிகளாக ஒருவருக்கொருவர் அனுப்பினர். அது எதை மாத்திரம் காண்பிக்கப்போவதென்றால்…வேதம் இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், “ஞானமுள்ளவன் இந்த மிருகத்தின் இலக்கத்தைக் கணக்குப்பார்க்கடவன். ஞானமுள்ளவன் இன்ன—இன்னதைச் செய்யக்கடவன். குறிப்பிட்ட வரங்களின் ஆவியையுடையவன் இன்ன—இன்னதைச் செய்யக்கடவன்” என்று உரைத்துள்ளது. சபையானது எவ்வளவு குறைவுள்ளதாயிருக்கிறது என்று நீங்கள் பார்த்தீர்களா? 742 இந்தக் காலையில் ஒரு வாலிபன் என்னிடத்தில் ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும், அந்நிய பாஷைகளில் பேசுவதைக் குறித்தும் கேட்டான். ஒரு வாலிப நபர், மிகவும் உண்மையாய் இருந்தான், இந்நாட்களில் ஒன்றில் அவன் ஒரு ஊழியக்காரனாயிருப்பான் என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது சபையைக் குறித்து நான், “அங்கே அதிக மாம்சப்பிரகாரமானவை உள்ளன. எங்களுக்கு அது வேண்டாம், ஆனால் எங்களுக்கு உண்மையான காரியமே வேண்டும். நாங்கள் அதையே பெற்றுக் கொள்ள வாஞ்சிக்கிறோம்” என்று கூறினேன். 743 நீங்கள் போய் அதை சபையில் போதிக்க முடியாது; நீங்கள் அறிந்த முதல் காரியம், நீங்கள் பெற்றிருப்பதோ, ஒருவன் அந்நிய பாஷையில் பேசுவதைப் பெற்றுள்ளான், ஒருவன் ஒரு சங்கீதம் பாடுகிறான், அப்பொழுது அந்த காரியத்தில் உங்களுக்கு சண்டை உண்டாகிறது. ஆனால் தேவன் ஒரு வரத்தை முதன்மையான நிலையில் அறிந்திருக்கும்போது, அது தன்னை வெளிப்படுத்தும். அது உண்மை பாருங்கள், அதுதான் தேவனுடைய வரங்கள், அந்தவிதமாகத்தான் ஜெயங்கொள்வதற்காக அவர் சபைக்கு அனுப்புகிறார். 744 இப்பொழுது, அந்திகிறிஸ்து ஆதரவாகவும் எதிராகவும் இருப்பது போன்று ஒரு காரியத்தை உடையவனாயிருக்கிறான். அது அந்த காரியத்தை தாறுமாறாக்கப்பட்ட வழியில் செய்வதையே உடையதாயிருக்கிறது. அந்த ரோம சாம்ராஜ்யத்தில் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை, மாம்சபிரகாரமான வெகுமதிகளை அனுப்பிக் கொள்கின்றன. தேவன் ஜெயங்கொள்பவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை அனுப்புகிறார்; ரோமாபுரியில் மாம்சபிரகாரமான வெகுமதிகளையே ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்கின்றனர். 745 பரிசுத்த ஆவி ஒரு ஆவியாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், உன்னதத்திலிருந்து வருகிற ஒரு அபிஷேகத்தினால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். 746 கத்தோலிக்க சபையோ, “பூசை நேரத்தில் வழங்கப்படும் ஒரு பரிசுத்த அப்பமே கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது; அதாவது நீங்கள் இந்த கோஷர் அப்பத்தை உட்கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியாயுள்ளது, பரிசுத்த ஆவியாய், பரிசுத்த திருப்பலியாயுள்ளது” என்று போதிக்கிறது. புரிகிறதா? 747 அது ஒரு அப்பத்துண்டு என்றே நாம் நம்புகிறோம், அது கிறிஸ்துவின் சரீரம் என்று நாம் விசுவாசிப்பதில்லை, (நாம் அதை இன்னும் ஒரு சில நிமிடங்களில் எடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்) அது கிறிஸ்துவின் சரீரத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் அதுவல்ல… 748 அதுவே கத்தோலிக்கத்துக்கும், பிராட்டெஸ்டன்டு உபதேசத்துக்கும் இடையே உள்ள வித்தியாசமாயுள்ளது. புரிகிறதா? கத்தோலிக்க சபையோ, “சரீரமாய்…அப்பமே உண்மையான சரீரமாயுள்ளது. சபையானது இதை மறுரூபப்படுத்தும்படியான வல்லமையைப் பெற்றுள்ளது” என்று கூறுகிறது. ஒரு கத்தோலிக்கன் ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, தன்னுடைய தலையைத் தாழ்த்தி சிலுவை போட்டுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? ஏனென்றால் அந்த ஆலயத்தின் உள்ளே அங்கே அந்த சிறு வாசஸ்தலத்தின் கீழே அந்த சிறு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அங்கே உள்ளே ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருக்க, அங்கே உள்ளே கோஷர் அப்பம் கீழே வைக்கப்பட்டிருக்கும். “அதுவே கிறிஸ்துவின் சரீரம் என்கின்றனர். நீங்கள் அதை உட்கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய முதல் இராபோஜனம் மற்றும் உங்களுடைய அறிக்கைகள் போன்றவற்றின் பேரில் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே முற்றிலுமாய் புசிக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே புசித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்கின்றனர். 749 அது கிறிஸ்துவின் சரீரத்தையே சுட்டிக் காண்பிக்கிறது என்று நாம் கூறுகிறோம், பாருங்கள், அதாவது அது ஒரு துண்டு அப்பமேயல்லாமல் இந்த உலகில் வேறொன்றுமில்லை. அது அப்பமாயில்லாமலிருந்தாலும் கூட கவலைப்பட வேண்டியதில்லை, அது மற்ற வேறெந்த காரியமாயிருந்தாலும், அது அதையே சுட்டிக்காட்டினதாயிருந்தது, சரியாக. அவர்கள்… 750 இந்த ஜனங்கள் கூறுவதைப் போல, “நான் ஒரு குளத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட விரும்பவில்லை. நான் நதியில் ஞானஸ்நானம்பண்ணப்பட விரும்புகிறேன்” என்கின்றனர். 751 நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்படுதலைப் பொருத்த வரையில் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அது ஒரு குளத்தில் இருந்தால்,…ஏன்? பிலிப்பு…காந்தாகே என்பவளின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, ஒரு குளத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்தான். பிலிப்பு மந்திரிக்கு குளத்திலே ஞானஸ்நானங்கொடுத்தபோது, பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை இருநூறு மைல் தூரம் காணப்படாதபடிக்கு அவனை அவ்வளவு தூரத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவன் ஆவியில் எடுத்துக்கொள்ளப்பட்டான், இரு நூறு மைல்தூரம் செல்லுமளவிற்கு பரலோகத்திலிருந்து ஒரு—ஒரு இரதத்தை அவனுக்கு அளித்தார். ஆமென். அற்புதம்! இப்பொழுது: ஆயிரவருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பர்? அவர்கள் எந்த விதமான ஒரு சரீரத்தைப் பெற்றுக்கொள்வார்கள்? நான் இன்னும் ஒரு நொடியில் அதற்கு திரும்ப வருவேன். [சகோதரன் பிரான்ஹாம் இதற்கு 74-ம் கேள்வியின் துவக்கத்தில் 820 பாராவில் பதிலளிக்கிறார்-ஆசி.] அவர்கள் இயேசுவோடு இருப்பார்கள். 752 சரி, ஏழாவது கேள்வி: 72. நாம் தூதர்களை எப்படி நியாயந்தீர்ப்போம்? 753 அது கண்டறியப்பட்டுள்ளது…நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்? தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பதினாலேயாம். தூதர்கள் ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள்; நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். நாம் தூதர்களை நியாயந்தீர்ப்போம் என்று வேதம் கூறியுள்ளது. அது உண்மை. இப்பொழுது, இப்பொழுது நீங்கள்… 8-வது கேள்வி: 73. கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் தூதர்கள் நிமித்தமாக முக்காடிட வேண்டும் என்று ஏன் கூறப்பட்டுள்ளது? 754 இப்பொழுது யாராவது ஒருவர் எனக்காக I கொரிந்தியர், 11-ம் அதிகாரத்தை எடுங்கள், நீங்கள் அதைக் கண்டறியும்படியாய்…நாம் அங்கே பார்ப்போம். I கொரிந்தியர் 11-வது அதிகாரத்தில், பவுல் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறதை நாம் கண்டறிகிறோம். நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதற்கு வரவுள்ளேன், அப்பொழுது நாம் அதை உடனே வாசித்து, நாம்—நாம் அதற்கு கீழேயே பதிலைப் பெற்றுக்கொள்வோம். 755 இங்குள்ள இந்த மற்ற வசனத்தின் பேரில் நான் ஒரு காரியத்தைக் கூற வேண்டும், அதாவது நாம் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டியவிதமாகவே கர்த்தர் அதை நமக்குத் தருகிறார் என்று நான் நம்புகிறேன். யாராவது அதை எடுத்திருந்தால்,…அது 11-ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன், ஆம் சரி. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் அதை புரிந்து கொள்ளும்படியாக உண்மையாகவே இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான் இதை வாசித்தப்பிறகு, நீங்கள் பாருங்கள், அதன் பேரில் வியாக்கியனிக்கும் வரை உங்களுடைய சிந்தையை எங்கும் சிதறவிடாதீர்கள். உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்: நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். (பவுல், “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்றான்.) சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 756 அது எப்படி உள்ளது என்று புரிகிறதா? தேவன், கிறிஸ்து, மனிதன், ஸ்திரீ. இப்பொழுது: ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த புருஷனும் கிறிஸ்துவை கனவீனப்படுத்துகிறான். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்… 757 இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில் புரிந்துகொண்டு, ஸ்திரீக்கு தலைமுடியே அவளுடைய முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிப்போம்: …அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. (அவள் தன்னுடைய முடியை கத்தரிக்கப்போவதாயிருந்தால், அப்பொழுது அதை சிரைத்துப் போடக்கடவள் என்பதையே அது பொருட்படுத்துகிறது.) ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால், தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்; (சவரம் செய்தல் என்பது சிரைத்துப் போடுதலையே பொருட்படுத்துகிறது, பாருங்கள்)…தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கடவள். 758 இப்பொழுது நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டிருக்கிற கேள்விக்கு நேராக வந்து கொண்டிருக்கிறோம். புரிகிறதா? சரி, வேதாகமத்தின்படி ஒரு—ஒரு பெண்மணி தன்னுடைய தலைமுடியை கத்தரிப்பது தவறாயுள்ளது. இப்பொழுது நீங்கள் இங்கே கவனியுங்கள், மனைவி தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்தால், கணவன் அவளை தள்ளிவிடலாம் என்று வேதம் சட்டப்பூர்வமாக கூறவில்லையா என்று பாருங்கள், இது சரியா அல்லது இல்லையா என்று பாருங்கள். ஒரு மனிதன்…புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; (அதாவது நீண்ட தலைமுடியை உடையவராயிருத்தல்), ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். (நீங்கள் எப்போதாவது அதைக் குறித்து சிந்தித்ததுண்டா?) 759 இப்பொழுது நான் இங்கே நிறுத்த விரும்புகிறேன், ஏனென்றால் உண்மையாகவே இதை நன்கு ஆழமாய்ப் பதிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், குட்டையான தலைமுடியையுடைய இலட்சக்கணக்கான அழகான கிறிஸ்தவ ஸ்திரீகளை நான் பார்த்திருக்கிறேன். (அவர்களை இப்பொழுதும் அறிவேன், அவர்களில் அநேகர் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்). நான் அதை உங்கள் மீது பழியாக சுமத்தலாம், நீங்கள் அந்தவிதமாக போதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நான் கூறுகிறேன். புரிகிறதா? அதுதான் இது. உங்களுடைய பிரசங்கியார் இதை உங்களிடம் ஒருபோதும் கூறவேயில்லை. ஆனால் கூடாரத்தைச் சுற்றி எந்த ஸ்திரீயாவது அந்தவிதமாக இருந்தால், அப்பொழுது அவர்கள் குற்றவாளிகளாயிருக்கிறார்கள். பாருங்கள், ஏனென்றால் நாம் அதைக் குறித்து நிச்சயமாகவே கூறுகிறோம். 760 இப்பொழுது, இப்பொழுது இதைக் கவனியுங்கள்: …புருஷனானவன்… (7-வது வசனம்)… புருஷனானவன்… 761 இப்பொழுது, இங்கே பேசிக்கொண்டிருக்கிறது யார்? இப்பொழுது, ஒரு சமயம் ஒரு பெண்மணி, “ஓ, பவுல் ஸ்திரீகளை—வெறுக்கும் வயோதிகனாயிருந்தான்” என்று கூறினாள். 762 இப்பொழுது நாம் அந்தக் காரியத்தில் இருக்கையில், நாம் இங்கே கலாத்தியர் 1:8-க்குத் திருப்பி, பவுல் இதைக் குறித்து கலாத்தியர் 1:8-ல் என்னக் கூறுகிறான் என்று பார்ப்போமாக. பவுல் இங்கே கலாத்தியர் 1:8-ல் கூறினதை நீங்கள் கண்டறியலாம். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 763 இப்பொழுது என்னை குற்றஞ்சாட்டாதீர்கள், நீங்கள் அவனைக் குற்றஞ்சாட்டுங்கள், பாருங்கள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்தீரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். 764 இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். 765 இப்பொழுது, நான் இதை இப்பொழுது உண்மையாகவே அன்புடனும், இனிமையுடனும் பொருட்படுத்திக் கூறுகிறேன், நான் இதைக் கூறுவிதமாகவே நீங்கள் இதை புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்கா…ஒரு சர்வதேச பிரயாணியாயிருக்கிறபடியால் இதைக் கூறுகிறேன், உலகத்தில் உள்ள எந்த தேசத்தைக் காட்டிலும் அமெரிக்கா தன்னுடைய ஸ்திரீகளுக்கு மிக இழிவான தரமிழந்த சில ஒழுங்கு முறை விதகளையேக் கொண்டுள்ளது. அமெரிக்கா தங்களுடைய ஸ்திரீகளை செய்ய அனுமதிக்கும் விதத்தோடு ஒப்பிட்டால் பாரீஸூம், பிரான்ஸும் மிக உயரிய வானளாவிய சட்டத்திட்டங்களை உடையதாயிருக்கக் கூடும். அது ஒரு அவமானமாயிற்றே! 766 அமெரிக்காவின் தேவன் ஸ்திரீ என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்களா? என்னால் அதை உங்களுக்கு இந்த வேதாகமத்தின் மூலம் நிரூபிக்க முடியும்? அது உண்மை. கத்தோலிக்கச் சபையானது தங்களுடைய கன்னி மரியாளின் உபதேசத்தை உள்ளேக் கொண்டு வரும்படியாக அது அந்தவிதமாக வரவேண்டியதாயுள்ளது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துள்ளீர்களா? 767 இப்பொழுது, ஒரு ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், இல்லை…ஒரு புருஷன் ஒரு ஸ்திரீக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், ஆனால் ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டாள், அப்படியானால் நீங்கள் எப்படி ஒரு ஸ்திரீயைத் தொழுதுகொள்ள முடியும்? புரிகிறதா? இப்பொழுது அது என்ன செய்ததென்றால், அது பாரீஸில் துவங்கி, நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டில் களமிறங்கியுள்ளது. இப்பொழுது பாரீஸ் தங்களுடைய மாதிரிகளையும், தங்களுடைய நாகரீகங்களையும் மற்றக் காரியங்களையும் பெற்றுக் கொள்ள ஹாலிவுட்டிற்கு வரவேண்டியதாயுள்ளது. அது நம்முடைய அமெரிக்க ஸ்திரீகளை இழிவுபடுத்துகிறதாயுள்ளது. 768 அது என்னவாயுள்ளது? நம்முடைய தேசமானது ஆண்களை பணியிலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் இங்கே ஸ்திரீகளை அமர்த்தியுள்ளபடியால், அவ்வளவு இழிவான நிலைக்கு வந்துவிட்டது, ஏறத்தாழ தொண்ணூறு சதவிகிதம் விபசாரிகளாயிருக்கின்றனர். பணியை விட்டுச் சென்றுவிட்ட மனிதரைக் குறித்துப் பேசுகிறோம், நிச்சயமாக, அதற்குக் காரணம் அவர்கள் அங்கே அவர்களுடைய இடங்களில் ஸ்திரீகளை நியமித்துவிட்டனர். அவர்கள் வீதிகளில் சாமாதான அதிகாரிகளாக நியமிக்கும் அளவிற்கு அவர்கள் அவ்வளவு இழிவான நிலையினை அடைந்துவிட்டனர். அது எந்த ஒரு தேசத்திற்கும் அவமானமாயுள்ளதே! ஆம் ஐயா. நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? 769 “சகோதரன் பிரான்ஹாம், நீர் அதைக் குறித்து என்ன செய்கிறீர்? நான் அதற்கு மரியாதை அளிக்க வேண்டும், நான் ஒரு அமெரிக்க குடிமகன், பெரிய முதலாளி என்ன செய்யும்படி கூறுகிறாரோ நான் அதை செய்கிறேன். நான்…ஒரு—ஒரு குடும்பம் தன்னுடைய மரியாதையை எப்போதாவது இழக்குமேயானால் (பிள்ளைகள் பெற்றொருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால்), அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். ஒரு—ஒரு சபையானது அதனுடைய மேய்ப்பருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், ஏன் அந்த சபையே ஒன்றுமில்லாமல் போய்விடும். ஒரு தேசமானது எப்போதாவது உச்ச நீதிமன்றத்திற்கும், அதனுடைய தீர்மானத்திற்கும் மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், அந்த தேசம் சின்னாபின்னமாகிவிடும். அது முற்றிலும் உண்மை. நாம் அந்தக் காரியங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் பெரிய முதலாளியாயிருக்கிறார்கள், பாருங்கள். ஆனால் அது துவக்கத்திலேயே சரியாயிருக்கவில்லை. முற்றிலுமாக! 770 ஒரு மனிதன்…வேதத்தில், ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில், தேவன் மனிதனையும் ஸ்திரீயையும் சிருஷ்டித்தபோது, மனுஷனையும், ஸ்திரீயையும் உண்டாக்கினபோது, தேவன் ஏவாளிடத்தில், “உன்னுடைய புருஷன் உன்னை ஆண்டுகொள்வான், உன்னை ஆளுகை செய்பவனாயிருப்பான்” என்று கூறினதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதை அமெரிக்காவில் பேசிப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று பாருங்களேன்! பையனே, அதுவல்ல இது, ஸ்திரீ புருஷனை ஆளுகிறாள்; அவர்கள் அதைச் செய்ய வேண்டும், பொது இடங்களில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. 771 என்னுடைய அறையில் டஜன் கணக்கில் சந்திக்க அங்கே வருகிற ஒழுக்கமான ஸ்திரீகளைக் குறித்து என்னால் கூற முடியும்…எல்லா ஸ்திரீகளுமே எந்த ஒரு நேரத்திலும் வேலை செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை; அவர்களுடைய கணவன் சுகவீனமாயிருக்கலாம் அல்லது ஏதோ ஒரு காரியமாயிருக்கலாம், அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பணிபுரியத்தான் வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறில்லையென்றால், அவர்கள் அதைச் செய்யக்கூடாது. அப்பொழுது அவர்களுடைய இடம் வீட்டில் தங்களுடைய சிறிய கோட்டையில் தரித்திருப்பதேயாகும், அங்கேதான் அவர்கள் சரியாக இருக்க வேண்டும். 772 நம்முடைய அமெரிக்க ஸ்திரீகள் போய் விரும்பினவற்றை செய்யும்படியான சிலாக்கியம் பெற்றுள்ளனர். எல்லா மிருகங்களிலும் கூட, அந்தக் காரியம் மேற்கொள்ளும்போது, அது சம்பவிக்கிறது, அது அதனுடைய முழு வார்த்தையுமே இழிவான நிலைக்கு கொண்டு வருகிறது. 773 ஆப்பிரிக்காவில் ஒரு சிறு பறவை உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையான பறவையாகும். 774 இப்பொழுது, வழக்கமாக, ஆண், பெண் இரண்டிலும் பெண்தான் அசிங்கமானதாயிருந்து வருகிறது. ஆண் தான் எப்பொழுதுமே மிகவும் அழகானதாயிருந்து வருகிறது, ஆண் மான், ஆண் காட்டுமான், நெடுவால் பகட்டு வண்ண சேவல், சேவல்கள் எப்பொழுதுமே மிகவும் அழகாயுள்ளன. ஏனென்றால் பெண் பறவையோ வீட்டில் உள்ள பறவையாகும். அது கூட்டில் அமர்ந்து தன்னுடைய குஞ்சுகளை வளர்க்கிறது. அது பருந்து, பாம்பு, ஓநாய் இன்னும் என்னவெல்லாமோ, பாருங்கள், தன்னுடைய குஞ்சுகளை மறைத்துக் கொண்டு பராமரித்து வளர்க்கிறது. 775 ஆனால் அங்கே அந்த வர்க்கத்தில்…இல்லை பாலியலில் உள்ள அந்த—அந்த ஸ்திரீ இல்லை பெண் அழகில் பிரபலமாகும்போது, அது எப்பொழுதுமே ஒரு இழிவான மாதிரியாகவே உள்ளது. ஆப்பிரிக்காவில், நீங்கள் ஒரு பறவையை எடுத்துக் கொண்டால்…அங்கே ஒரு சிறிய பறவை உண்டு, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கண்டத்தில் உள்ள அந்த பெண் பறவை ஆண் பறவையைக் காட்டிலும் அழகாயுள்ளது. அது…அதுவே—அந்த பறவை எப்போதுமே ஒரு விபச்சாரியாக இருந்து வருகிறது. அது சுற்றித் திரிந்து ஒரு ஆண் துணையைக் கண்டறிந்து, பின்னர் ஓடிப் போய் முட்டைகளையிட்டுவிட்டு, பின்னர் அது மற்றொரு துணையோடு சேருகிறது, அது தன் துணையை முட்டைகள் மீது அடைகாக்க வைத்துவிட்டு, அது போய் மற்றொரு துணையைத் தேடுகிறது. அது முற்றிலும் உண்மை. புரிகிறதா? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 776 இப்பொழுது இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள நம்முடைய ஸ்திரீகளை நோக்கிப் பாருங்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர் கென்டக்கியிலிருந்து வந்த ஒரு வாலிபன் இங்கே கென்டக்கியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் எண்ணூறு ஸ்திரீகள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறினான். மேலும் அவன், “அவர்களில் நானூறு பேர் முற்றிலும் தெரு விபச்சாரிகளாய், திருமணமான ஸ்திரீகளாய் பிள்ளைகளோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். ஒரு நபர் தன்னுடைய மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, ஒரு குழுவினரோடு அவள் வேலை செய்தபோதே அவளை கொன்று போடவிருந்தான். மற்றொருவன் ஒரு மனிதனைச் சுடச் சென்றான். மற்றொருவவனோ வெட்டிக் கொண்டும் சண்டையிட்டுக்கொண்டுமிருந்தான். அவ்வாறு செய்யக்கூடாது. அது சரியல்ல. 777 ஸ்திரீயை, அவளுக்குச் சொந்தமான சமையலறையில் வையுங்கள், அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நீங்கள் அவளை அங்கே பொது இடத்தில் பணிபுரிய வைக்கும்போது, அவள் ஒழிந்து போய்விடுகிறாள். முற்றிலும்…நான் அதை கூறவில்லை. 778 அமெரிக்க ஸ்திரீகள் தங்களுடைய மூக்குகளை மேலே உயத்தினவாறு அடக்கமின்றி சிரித்து, “அதனால் ஒன்றுமில்லையே” என்று கூறுகிறார்கள். மேலும், “நீர் எனக்குக் காண்பியும்” என்கின்றனர். நிச்சயமாகவே, நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. எனவே நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். 779 இங்கே…முன்பெல்லாம், நீண்ட காலத்திற்கு முன், ஒரு மெத்தோடிஸ்டு சபையில் ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடையை வெட்டிக் கொண்டால், அவளை சபையைவிட்டு புறம்பாக்கிவிட்டிருந்தனர். நிச்சயமாகவே, அவர்கள் அதைச் செய்தனர். ஆம், உண்மையாகவே, நசரேயன்கள், யாத்ரீக பரிசுத்தர், பெந்தேகோஸ்துக்கள், அவர்கள் எல்லோருமே வழக்கமாக அதைச் செய்வர். என்ன சம்பவித்தது? 780 ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பிரசங்க பீடத்திற்குப் பின்னே சில பெண்மைத் தன்மைக் கொண்டவர்களைப் பெற்றுள்ளீர்கள். அது முற்றிலும் உண்மையே. சிலர் தங்களுடைய ஆகாரச் சீட்டைக் குறித்துப் பயப்படுகின்றனர்…நீங்கள் அவர்களை வெளியேற்றிவிடுவீர்களோ என்றும், சபையிலிருந்து அவர்களை ஓடச் செய்வீர்களோ என்றும் பயப்படுகின்றனர். அவர்கள் உறுதியாய் நிற்பதற்கு மிகுந்த தைரியத்தை பெற்றிருக்கவில்லை, அது புண்படுத்தினாலும் அல்லது அது புண்படுத்தவில்லையென்றாலும், தேவனுடைய வார்த்தையின் பேரில் உறுதியாக நிற்க வேண்டும். அது முற்றிலும் சரியே. 781 புருஷனே ஆளுகை செய்பவனாயிருக்கிறான் என்பதை இங்கே கவனியுங்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்யலாம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்பவரல்ல. நீங்கள்…முற்றிலுமாக…இப்பொழுது நீங்கள் ஒரு அடிமை அல்ல; ஆனால் நீங்கள் ஒரு துணையாயிருக்கிறீர்கள். ஆதாம்…புருஷன் தன் மனைவியின் மேல் ஆளுகை செய்பவனாயிருக்கிறான், அவன் தன்னுடைய மனைவிக்காக மட்டுமே பொறுப்புள்ளவனாயிருக்கிறான். தேவன் புருஷனை அவனுடைய மனைவிக்காக பதில் கூறச் செய்கிறார். இப்பொழுது, தேவன் இப்பொழுது அதைக் கூறுகிறாரா என்று வாசித்துப் பாருங்கள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை… 782 தேவன் ஒரு ஸ்திரீயல்ல, தேவன் ஒரு மனிதனாயிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கன்னி மரியாள் மற்றும் அவை யாவையும், பரிந்து பேச…இல்லை பரிந்துரைத்தல், அதுபோன்ற ஒவ்வொரு காரியத்தையும் உண்டாக்கினபோது, கன்னி மரியாளிடத்தில் ஜெபிப்பதை உருவாக்கினபோது, அது எனக்கு எதை நினைவூட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தியானாள் என்ற பெரிய தேவதையை நினைவூட்டுகிறது, பவுல் அதைக் கடிந்து ஒழித்துக் கட்டினான். அது உண்மை. அவன், “காரணம், தேவன் பெண்ணல்லவே!” என்றான். 783 ஒரு கற்பாறை நிலத்தில் விழுந்தபோது, தேவதையே தன்னுடைய சாயலை கீழே வீசியெறிந்தாள் என்று அவர்கள் கூறினர், அந்தக் காரணத்தினால் கொரிந்துவிலே இருந்த ஸ்திரீகள் அங்கே…அந்த தியானாளை ஆராதித்தனர், அவர்கள் பிரசங்கிமார்களாக விரும்பினர். 784 அவர்கள், “ஏன்? நாங்களும் பிரசங்கிக்கலாம் என்று ஆவியானவர் கூறினார்” என்றனர். 785 அப்பொழுது அவன், “என்ன? தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரியென்றாவது, ஆவியைப் பெற்றவென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்: சபையிலே ஒரு ஸ்திரீ பேசாமல் அமைதியாய் அடக்கமாயிருக்கக்கடவள், உபதேசம்பண்ணவோ அல்லது அதிகாரஞ் செலுத்தவோ நான் உத்தரவு கொடுக்கிறதில்லை” என்றான். அது சரியே! அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? தேவன் அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு கூட்ட பிரசங்கிமார்களை பதில் கூறச் செய்யப் போகிறார். 786 கவனியுங்கள்! நீங்கள், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அதற்கு கற்பிக்கப்பட்டேன்” என்று கூறலாம். இப்பொழுது நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்களே! அது உண்மை. நீங்களோ அல்லது வேறுயாராவது ஒரு விழுங்கு மருந்தினை எடுத்துக்கொள்ளத் துவங்கினால், அப்பொழுது யரோ ஒருவர் அது ரசாயணமான விஷம் என்று உங்களிடத்தில் கூறியும், நீங்கள்—நீங்கள் போய் எப்படியோ அதை உட்கொண்டால், அப்பொழுது அதற்குபிறகு அது உங்களுடைய சொந்த தவறாயுள்ளது. புரிகிறதா? 787 இப்பொழுது இதற்கு செவி கொடுங்கள்: புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். 788 உங்களில் எவரேனும் அதை வாசிக்கிறீர்களா? கொரிந்தியர் முதலாம் நிரூபம் 11-ம் அதிகாரம், 10-வது வசனம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், “அதிகாரம்” (ஏன்?) “தூதர்களினிமித்தமாக” I கொரிந்தியர், காரணம் தூதன் மனிதனாயிருக்கிறான், செய்தியாளனயிருக்கிறான். பாருங்கள், அது ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறிய எழுத்தில் உள்ளது. பரலோக தூதர்களைக் குறித்து எங்கே குறிப்பிடப்பட்டுள்ளதோ, அங்கு அது ஆங்கிலத்தில் அந்த தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் உள்ளது. அது எங்கே ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறியதாய் குறிப்பிடப்பட்டுள்ளதோ அது தூதர்களாக மனிதர்களைக் குறிப்பதாகும். ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது (குட்டைத் தலைமுடியோடு இருப்பது) இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். (அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்) 789 இப்பொழுது கவனியுங்கள்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது…சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? 790 “அது எதைச் சார்ந்ததாயிருந்தது?” என்று கூறுவீர்களா? தலைமுடியை. பவுல் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? முடியை, தலைமுடியையே!…ஸ்தீரீ நீளமான தலைமுடியை வளர்த்திருக்க வேண்டும். இப்பொழுது 14-வது வசனம்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்குக் கனவீனமாயிருக்கிறதென்று…சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? 791 உங்களுக்கு இது புரிகிறதா? ஒரு புருஷன் தலைமுடியை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறது, ஆனால் ஒரு ஸ்திரீ…அது ஒரு ஸ்தீரியின் ஸ்தானமாயுள்ளது. தேவன் ஒரு மனிதனை ஒரு ஸ்திரீயிலிருந்து வித்தியாசமாக உண்டாக்கினார், பால் வேறுபாடு மற்றும் தோற்றம் இன்னும் ஒவ்வொரு காரியத்திலுமே வித்தியாசமாய் உண்டாக்கினார். அவள்…ஒரு…ஆடையை அணியக் கூடாது. வேதமோ, “ஒரு ஸ்திரீ தளர்காற் சட்டைகளை அல்லது ஒரு புருஷனின் உடையையோ தரித்தால், அது தேவனுக்கு முன்பாக அருவருப்பானதாயும், அசுத்தமானதாயும், இழிவான காட்சியாயுமிருக்கும்” என்று உரைத்துள்ளது. தேவன் அதற்கான தண்டனையை அவள் பெறும்படிச் செய்வார். நீங்கள் யாருக்கு செவிகொடுக்கப் போகிறீர்கள்? ஆனால் இது வேதமாயுள்ளதே! 792 நீங்களோ சுற்றும் முற்றும் ஓடி, “ஏன்? அது அருமையானது…என்று நான் கருதுகிறேன், பாருங்கள், ஸ்திரீகள் தளர்காற்சட்டைகளை அணிவது” என்று கூறலாம். ஆனால் தேவன் அவர்களை வித்தியாசமாக உண்டாக்கினார், எனவே அவர்கள் வித்தியாசமாக உடை உடுத்த வேண்டும் என்று விரும்புகிறார். 793 வேதம், “ஓரு ஸ்திரீ ஒரு புருஷனின் உடையைத் தரிப்பது ஒரு அருவருப்பாயுள்ளது” என்று உரைத்துள்ளது. அருவருப்பு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது, “தேவனுடைய பார்வையில் இழிவான ஒரு காரியமாய் உள்ளது” என்பதாகும். மகத்தான யேகோவா உங்கள் மீது அசுத்தமாயிருக்கிற காரியத்தை நோக்கிப் பார்க்கிறார்…வேதம் கூறியுள்ளது… 794 நீங்கள் கூறுகிறதோ…இப்பொழுது பெண்மணிகளாகிய உங்களில் சிலர் உங்களுடைய வாலிபப் பருவ பெண்பிளைகளாக பதினெட்டு, பன்னிரெண்டு, இருபது வயதுடையவர்களை அந்தவிதமாக அவள் உடை உடுத்திக் கொண்டு சுற்றித் திரிய அவர்களை அனுமதிக்கிறீர்கள். 795 தாய்மார்களாகிய நீங்களும் கூட! புரிகிறதா? நீங்கள் அந்த தளர் காற் சட்டைகள் மற்றவைகளை அணிந்து வெளியே வீதிக்கு செல்லும்போது, அவர்கள் இப்பொழுதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிற அந்த ஆடைகளை அணியும்போது, அது நீங்கள் இல்லாத ஏதோ ஒன்றாக் நீங்கள் காணப்படும்படிச் செய்கிறது. புரிகிறதா? நீங்கள் அங்கே வெளியே வீதியில் எல்லோரும் பாலியல் கவர்ச்சியாய் உங்களைக் காணும்படி செல்லுகிறீர்கள், நீங்கள் உங்களுடைய கணவனுக்கு முன்பாக ஒவ்வொரு காரியத்திலும் அவ்வளவு குற்றமற்றவரய், சுத்தமாயிருக்கலாம், ஆனால் நீங்கள் வெளியே வீதிக்குப் போய், அந்தவிதமான நீங்கள் உங்களை கவர்ச்சியாக காண்பிக்கும் காரணத்தால் ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தால், அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், அந்தவிதமாக உங்களை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனோடும் விபச்சாரஞ் செய்ததற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே பதில் கூறப் போகிறீர்கள். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. 796 வேதம், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று உரைத்துள்ளது. எனவே நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள்… 797 நீங்கள் நியாயத்தீர்ப்பில் வந்து, “கர்த்தாவே, நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர்; நான் ஒரு போதும் விபச்சாரஞ் செய்யவேயில்லை, நான் என்னுடைய கணவனுக்கு உண்மையாக வாழ்ந்து வந்தேன்” என்று கூறலாம். 798 ஆனால் இங்கு ஒரு மனிதன் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், மற்றொருவர், மற்றொருவர் பதினைந்து, இருபது, முப்பது, அங்கே நாற்பது பேர் நின்று “விபச்சாரக்குற்றத்தைக்” கூறுவர். ஏன்? யாரோ ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தார். 799 “ஆயினும், எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறலாம். நீங்கள் ஏன் உங்களை அந்தவிதமாக காண்பிக்கிறீர்கள்? தேவன் அந்தவிதமான ஆடைகளை நீங்கள் உடுத்தக் கூடாது என்று உங்களிடம் கூறினபோதும், அதைச் செய்வது அருவருப்பாயிருந்தது, யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியைக் காணப் போகிறீர்கள் அல்லது அது என்ன… 800 யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியில் நடிக்கும் பெண்ணுடைய கணவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் கண்டறிந்தீர்களா? நீங்கள் எல்லோரும் அதை இங்கே செய்த்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்? நாங்கள் வாமிங்கில் உள்ள காஸ்பர் என்ற இடத்தில் இருந்தபோது, அது வெளியானது. அவனுடைய பெயர் என்ன? அந்த நபர்…அந்த நாம் சூசியை நேசிக்கிறோம், இல்லை என்ன—அது என்னவாயிருந்தது?…ஓ, நீங்கள் எல்லோரும் புதன்கிழமை இரவு வீட்டிலேயே தரித்திருந்து அதைப் பார்த்துவிட்டு, ஜெபக் கூட்டத்திற்கு வர தவறிவிடுகிறீர்கள். அது இப்பொழுது என்னவாயுள்ளது? நாம்…நேசிக்கிறோம் என்ற நிகழ்ச்சி, அதனுடைய பெயர் என்ன? [ஒரு சகோதரி, “நான் லூசியை நேசிக்கிறேன்” என்று கூறுகிறார்—ஆசி.] நான் லூசியை நேசிக்கிறேன், அவளுடைய கணவன்…நவேடா என்ற இடத்தில் உள்ள் ரெநோவில் நான்கு வருடங்களாக ஒரு கறுப்பு நிற பெண்ணோடு வாழ்ந்ததாக தெரியவந்துவிட்டது…சுவிசேஷத்தை போய் கேட்பதற்குப் பதிலாக அந்தவிதமாக வீட்டிலே தரித்திருந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறீர்கள். அந்த ஸ்திரீ அதை அறிக்கை செய்தாள். ஓ, இரக்கம்! கிறிஸ்துவுக்கு புறம்பே யாதொரு சுத்தமும் கிடையாதே! 801 சகோதரரே, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக! நான்—நான் உங்களுக்குச் சொல்லுவேன்—நீங்கள், சிலர்…நீங்களோ, “ஓ, என்னே! சில வர்கங்களைப் பாருங்கள்” என்று கூறலாம். நாம் சில மிக மோசமான அழுகிய பொருட்களை உண்டு வாழும் அழகான பருந்துகளையும் பெற்றுள்ளோம். நீங்கள் ஒரு பறவையை அதனுடைய சிறகுகளைக் கொண்டு நிதானிக்க முடியாது, பாருங்கள். ஆகையால் அதை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஓ, என்னே! 802 இப்பொழுது கவனியுங்கள்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது (அதுதான் அந்த 14-வது வசன்ம்) அவனுக்குக் கனவீனமாயிருக்கிறதென்றும்…சுபவாமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? (அது ஒரு ஸ்திரீயைச் சார்ந்ததாயிருக்கிறது.) ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும்… 803 இப்பொழுது அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான்? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் சபையில் அணிந்து கொள்கிற ஒரு தொப்பியையா? உண்மையில் அது இல்லையே! ஒரு கைக் குட்டையினால் உங்களுடைய தலையின் உச்சியை சற்று மூடிக்கொள்ளுதலையா? அவன் உங்களுடைய தலைமுடியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறானே! 804 இப்பொழுது! ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தன்னுடைய மகிமையைத் துண்டித்துக் கொள்ளுகிறாளே, அவள் ஜெபிக்க பீடத்தண்டைச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாருங்கள், இங்கே என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால், “ஒரு ஸ்திரீ ஜெபம்பண்ணப்போகும்போது தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமான காரியமாயிருக்கிறதல்லவா?” இங்கே, “அவள் தன்னுடைய தலைமுடியை கத்தரித்துக்கொண்டால்,” அப்பொழுது “அவள் சிரைத்துப் போடக்கடவள்” என்று கூறுகிறது. “அவள் சிரைத்துப் போடப்படுவதாயிருந்தால்,” அப்பொழுது, “அது ஒரு அவமானமாயுள்ளது, அதைச் செய்வது ஒரு ஸ்திரீக்கு ஒரு வெட்கக் கேடாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, நான்—நான் பவுலினுடைய நிரூபத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோருமே, அதாவது அது உங்களைப் பொறுத்தது, பாருங்கள். ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 805 அவளுக்கு ஒரு தொப்பி கொடுக்கப்படும் என்று அது கூறியுள்ளதா? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் அல்லது பிராட்டஸ்டெண்டுகளாகிய நீங்கள் சபைக்குச் சென்று ஒரு தொப்பியை அணிந்து கொள்ள விரும்புகிறீர்கள், மேலும், “நான் சபைக்குச் செல்லுகிறபடியால், ஒரு தொப்பியை அணிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறீர்கள். இல்லை, நீங்கள் உங்களுடைய தலைமுடியை வளரவிட வேண்டும். அதுதான் வித்தியாசமே. புரிகிறதா? …தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. (முடியினால் மூடப்படாமல் அவள் சபைக்கு வந்து, பீடத்தண்டை ஜெபிக்கச் செல்வது ஒரு அவமானமாகும்.) ஆகிலும் ஒருவன்…(அந்த வார்த்தையை வாக்குவாதம்…என்று உச்சரிக்கக்கூடாது என்று நான் நினைக்கவில்லை…)…வாக்குவாதஞ்செய்ய—வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால் (வாக்குவாதம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்), எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன், 806 இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து வாதிட விரும்பினால், நீங்கள் அதனோடு வாதிடுங்கள். சரி. நீங்கள் அதைக் குறித்து வாக்குவாதஞ் செய்ய வேண்டுமென்றால், “ஓ, அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர்கள் வாக்குவாதம் செய்யட்டும். ஏன்? அதனால் ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். நான்…அது தலைமுடி என்ன என்பதாயிருக்கவில்லை, எப்படியோ அது இருதயம் என்னவாயுள்ளது என்பதாயுள்ளது.” அது உண்மையே; இருதயம் சரியாயிருக்குமானால், தலைமுடி சரியாயிருக்கும் (உ—ஊ). 807 நீங்கள் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால், செய்யுங்கள், பவுல், “எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்” என்றான். மேலும், “நீங்கள் காயீனின் பக்கம் சார்ந்தவராயிருக்க விரும்பினால், போய் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றான். ஆனால் இதைத்தான் பவுல் கூறிக் கொண்டிருந்தான். 808 ஓ, நான் சிரிக்க வேண்டுமென்பதற்காகக் கூறவில்லை, ஏனென்றால் இது ஒரு சிரிப்பதற்கான காரியம் அல்ல. ஆனால் நண்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியங்களை செய்யும்படிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற வழியைக் காண்பதே ஒரு அவமானமாயுள்ளது. நான்… 809 கவனியுங்கள்! என்னுடைய அருமை சகோதரிகளே, உங்களைத்தான், நான் உங்களுடைய மிகச் சிறந்த முறையில், உங்களுடைய சிறந்த முறையில் உங்களைக் காண விரும்புகிறேன், அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய கணவன் வரும்போது, அவர் உங்களுடைய இனிய இருதயமாயிருந்து வருகிறது போலவே நீங்களும் உங்களால் முடிந்தளவு ஒவ்வொரு காரியத்திலும் இனிமையாயும், புது மலர்ச்சியாயும் இருக்க வேண்டும். நீங்கள் அவரை அந்த நாளில் பீடத்தண்டையிலே உங்களுடைய கணவராயிருக்கும்படி முத்தமிட்டதுபோன்றே ஒரு இனிமையான முத்தத்தோடு நீங்கள் அவரை இப்பொழுது வாசலண்டை சந்திக்க வேண்டும். அது உண்மை. மிகச் சிறந்த முறையில் காணப்படுவதற்காக, மிகச் சிறந்த முறையில் இருப்பதற்காக நான் உங்களை குற்றப்படுத்துகிறதில்லை. நீங்கள் அந்தவிதமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் விரும்புவதை தேவன் அறிவார். 810 இங்கே அண்மையில், நான் ஜேக் சூளரிடத்தில் பேசிக்கொண்டிந்தேன். ஜேக் சூளரைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மெத்தோடிஸ்டுகள் பெற்றுள்ள மிகவும் புகழ்வாய்ந்த பிரசங்கியார். அவர், “ஒரு ஸ்திரீ அவரிடத்தில் வந்து கூறினதை கூறினார்…அதாவது தலைமுடி முழுவதும் அழுக்காயும், மெல்லும் சவ்வு மிட்டாயை மென்றுகொண்டே, பாதியளவே ஆடையணிந்தவளாய் வந்து, உங்களுக்குத் தெரியுமா, என்னுடைய கணவர் என்னோடு இனி ஒருபோதும் சகிப்புத் தன்மையோடு இருக்க விரும்பவில்லை” என்று கூறினானாம். 811 அதற்கு அவரோ, “நான் அவரைக் குற்றப்படுத்தமாட்டேன்” என்றாராம். 812 அது உண்மை. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், நீங்கள் சரியான விதமாயிருக்க வேண்டும். உங்களுடைய புத்துணர்ச்சியையும், அழகையும் நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டிலிருந்து எடுத்துக் கொள்ளாமல், தேவனுக்கு முன்பாக வேதத்திலிருந்து அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்மணியாயிருங்கள், ஒரு பெண்மணியைப் போல நடந்துகொள்ளுங்கள், ஒரு பெண்மணியைப் போல உடை உடுத்திக் கொள்ளுங்கள், சுத்தமாயிருங்கள். ஒரு பெண்மணியைப்போல நடந்துகொள்ளுங்கள், அந்த…அணிந்து கொள்ளாதீர்கள்… 813 தன்னுடைய மனைவி அந்தவிதமான அற்பமான காரியங்களை அணிந்து மனிதருக்கு முன்பாக வெளியே செல்ல அனுமதிக்கும் எந்த மனிதனும், அந்த பழைய காரியங்களை…அதுபோன்ற காரியங்களை அணிந்து கொண்டு வெளியே வந்து புல்வெட்ட முற்றத்திற்கு சென்றாலும்…திருவாளரே, சகோதரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான்—நான் இழிவாகக் கூற வேண்டும் என்று கருதிக் கூறவில்லை, நான்…அது என்னுடைய இருதயத்தில் உள்ளது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால்…என்னுடைய மனைவி அதைச் செய்ய நான் அனுமதிக்கும் முன்பே நான் பெரும் மாற்றத்தை உடையவனாயிருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள், என்னால் முடிந்தளவு நான் அந்தக் குன்றின் மேல் முதலாளியாயிருக்கிறேன். என்னால் இருக்க முடியாமற் போகும்போது, நான் அங்கிருந்து வெளியேறிவிடப் போகிறேன். அது உண்மை. 814 ஓ, சகோதரனே, ஸ்திரீ அதைச் செய்வது ஒரு வெட்கக்கேடாயும், ஒரு அவமானமாயும் உள்ளது. சகோதரியே நான்—நான் இழிவுபடுத்திக் கூறவில்லை…நான்—நான் உங்களுக்கு அவமதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கவில்லை, இங்கே வருகிற ஜனங்களில், எங்களுடைய சபையில் இங்கே அப்படிப்பட்ட அங்கத்தினர்கள் இல்லை என்றே…நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தேவனுடைய வீடாய் உள்ளது, எனவே அந்தக் காரியங்களை ஜனங்கள் அணிந்து கொள்ளக் கூடாது என்றே முற்றிலுமாய் நாம் கூறுகிறோம். அதாவது அது…நீங்கள் நியாயத்தீர்ப்பின் நாளிலே அதற்காக பதில் கூறப்போகிறீர்கள். இப்பொழுது இங்கே கவனியுங்கள். உங்களுடைய தலைமுடியை வளரவிடுங்கள், பாருங்கள், ஒரு பெண்மணியாயிருங்கள். 815 இப்பொழுது: உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே. முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்;…(அது இப்பொழுது இராபோஜன பந்தியண்டைக்குச் செல்கிறது) 816 இப்பொழுது அதற்கு செவி கொடுங்கள். அந்தக் காரணத்தினால்தான் தூதர்கள்… 817 இப்பொழுது, சகோதரன் பாமர், நான் இங்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கிற அதேக் காரியத்தையே நீர் அங்கே பிரசங்கிக்கிறீர் என்று இந்த ஒலி நாடாவில் நான் உங்களுக்கு கூறவில்லையா. ஆனால் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரு பிரசங்கியாயிருக்கிறபடியால், சகோதரே, அது சத்தியம் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். சரி. 818 ஆகையால் இங்கே தூதர்கள் என்று உள்ளது “மனிதனைக்” குறிக்கிறது. நீங்கள் அதை கவனிப்பீர்களேயானால், சகோதரன் பாமர் அவர்களே, அது ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளில், “தூதர்கள்” என்று உள்ளது. வேதம் தொடர்ந்து கூறும்போது…அவன் புருஷனையும், ஸ்திரீயையும் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறான், பாருங்கள், அதுதான் பொருளாய் உள்ளது. 819 அந்த விதமாகவே ஜனங்கள் வேதாகமத்தில் மிகவும் குழப்பமடைந்து, அவர்கள், “நல்லது, தேவன் இங்கே ஒரு காரியத்தைக் கூறுகிறார், ஒன்று…” என்கிறார்கள். இல்லை, நீங்கள்—நீங்கள் பாடப் பொருளைவிட்டு அகன்று செல்லுகிறீர்கள். அதேப் பாடப் பொருளின் பேரில் தரித்திருங்கள், அவ்வளவுதான். அவன் புருஷனையும், ஸ்திரீயையுங் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். 820 நாம் முடிப்பதற்கு முன்பு, இப்பொழுது நான் இன்னுமொரு காரியத்தைத் தொட விரும்புகிறேன், அதற்கு எனக்கு ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள்தான் தேவைப்படும். 74. ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கேயிருப்பர்? அவர்கள் எந்தவிதமான ஒரு சரீரத்தை உடையவராயிருப்பர்? 821 அது மிக இனிமையான கேள்வியென்றே நான் கருதுகிறேன், நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது நாம் அதற்க்குள்ளாக நேராக நோக்கிப் பார்ப்போமாக. 822 ஆதியிலே, தேவன்…நாம் அப்படியே ஒரு சில நிமிடங்கள் நம்முடைய எபிரெய போதனைக்கு திரும்பிச் செல்வோம். தேவன் இந்த மகத்தான, ஏழு நிறங்களைக் கொண்ட பெரிய ஊற்றாயிருந்தார். எத்தனைபேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? புரிகிறதா? தேவன் ஏழு ஆவிகளை உடையவராயிருக்கிறார் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? முற்றிலுமாக, ஏழு ஆவிகளே. ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கண்களிருந்தன, இப்பொழுது அவையாவும் ஒன்றாக சேருகின்றன. புரிகிறதா? இப்பொழுது அது தேவனாயிருந்தது. 823 இப்பொழுது அவர் (லோகாஸ்) தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அது இந்த ஒரு பெரிய ஊற்றிலிருந்து வந்த தேவன் ஒரு சரீரத்திற்குள், ஒரு—ஒரு மனித ரூபத்திற்குள் வந்தார். அது லோகாஸானது, நாம் அதை ஆவிக்குரிய சரீரம் என்றழைக்கிறோம். 824 இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரிய சரீரத்தை எடுத்து, நீங்கள் அதை நோக்கிப் பார்க்கும்போது, அது ஒரு மனிதனாயிருக்கிறது. இப்பொழுது அதாவது நாம்…இப்பொழுது, நாம் அங்குதான் ஆதியில் இருந்தோம். இப்பொழுது, நீங்கள் இப்பொழுது இதை புரிந்து கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் அந்தவிதமாகத்தான் ஆதியில் அங்கே இருந்தீர்கள். மனிதன் உண்டாக்கப்பட்டபோது,…தேவன் மனிதனை தம்முடைய சாயலில் உண்டாக்கினபோது, அவர் அவனை ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்கினார். அவர் அவனை மாம்ச சரீரத்தில்…மாத்திரம் வைத்தார்…தேவனை மனிதனை தன்னுடைய சாயலில், அவருக்கு ஒப்பான சாயலில் உண்டாக்கினபோது, அவர்கள்…ஆதியாகமம் 2-ல்,…இல்லை ஆதியாகமம் 1 : 28-ல் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன், “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” தேவன் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அது உண்மை, “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” 825 அதன்பின்னர் தேவன் மனிதனை சற்று கீழான ஒரு மிருக ஜீவியத்தில் அவனை வைத்தார், அதுவே இந்த சரீரமாய் உள்ளது, அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய், அதைத்தொட்டுப் பார்க்கும்படியாய் மிருகங்களைப் போலாக்கினார். ஆவிக்குரிய சரீரமோ தொட்டுப்பார்க்கிறதில்லை, அது பார்க்கிறதில்லை, ருசிக்கிறதில்லை, முகருகிறதில்லை, கேட்கிறதில்லை; ஆனால் நாம் இந்த புலன்களை உடையவர்களாயிருக்கிறோம். ஆகையால் மனிதன் தொட்டுப் பாக்கும்படியாக, உணரும்படியாக அங்கே வைத்தார். 826 அவன் ஏதேன் தோட்டத்தினூடாக நடந்து சென்றபோது, முதலில் ஒரு ஆவிக்குரிய சரீரத்திலிருந்தபடியால் (இங்கே பரிசுத்த ஆவியைப் போலிருந்து இங்கே நடந்து கொண்டிருந்தான்), அந்த சரீரம் மிருக ஜீவனை வழி நடத்தினது. அது ஒவ்வொரு காரியத்தையும் கட்டுப்படுத்தினது, ஆனால் அதனால் நிலத்தைப் பண்படுத்த முடியவில்லை, பாருங்கள். ஆகையால் அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய் தேவன் அவனை மாம்ச சரீரத்தில் வைத்தார். அவன் நிலத்தைப் பண்படுத்தும்படிக்கும், திராட்சை தோட்டங்களை பண்படுத்தும்படிக்கும் அவனுக்கு அவனுடைய ஐம்புலன்களைக் கொடுத்தார். அதன்பின்பும் மனிதன் தனிமையாக இன்னமும் காணப்பட்டான். ஓ, இது ஒரு அழகான காட்சியாயுள்ளது. 827 பாருங்கள், அவன் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட போது, அவன் இரண்டு பேராய் சேர்ந்தே சிருஷ்டிக்கப்பட்டான். அவன், மனிதன் ஆணும் பெண்ணுமாகவே உண்டாக்கப்பட்டிருந்தான். அவன் அவ்வாறு இருந்தான் என்று வேதம் உரைத்துள்ளது. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். “அவர் அவ்வாறே அவனை சிருஷ்டித்தார்.” இப்பொழுது கவனியுங்கள், மனிதன் ஆவிக்குரிய சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டபோது, மாம்ச சரீரத்தில் வைக்கப்பட்டான், அப்பொழுது அவன்—அவன் அங்கே அவ்வாறு சேர்ந்திருக்கவில்லை; அவனுடைய ஒரு பாகம் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரமாகவே இருந்தது, ஆகையால் அது சரியாகக் காணப்படவில்லை. 828 காளை, பசு என்று ஆணும் பெண்ணுமாக அங்கே சென்றன. அங்கே குதிரை அவ்வாறு சென்றது, அங்கே காளை சென்றது, ஒவ்வொன்றும் ஜோடு ஜோடாகச் சென்றன. ஆனால் ஆதாம், அவன்…அது…பாருங்கள், அங்கே ஒரு காரியம் குறைவாயிருந்தது. அந்த மிகுந்த ஏக்கமோ அவனுக்காக ஒரு துணை காத்துக் கொண்டிருந்தது என்பதையே காண்பித்தது. உங்களுக்கு அது புரிகிறதா? நாம் பெற்றுள்ள சிந்தனைகள் இங்கே மரிக்க வேண்டியதாயுள்ளன, அதாவது நாம் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு குழப்பமடைந்திருக்கிறோம், நாம் மரணமில்லாத ஒரு ஜீவனுக்காக ஏங்குகிறோம், அது நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது. புரிகிறதா? 829 ஆதாம் தனிமையாயிருந்தான். தேவன், அவர்கள் வேறுபிரிக்கப்பட முடியாது என்பதை காண்பிப்பதற்கு…இப்பொழுது இன்னும் ஒரு விநாடியில் நான் இந்த அதேக் காரியத்திற்கு திரும்பி வரப் போகிறேன். 830 பாருங்கள், அவர் போய் மண்னை எடுத்து ஒருபோதும் ஏவாளை உண்டு பண்ணவில்லை, ஆனால் அவர் மூல மண்ணிலிருந்து, ஆதாமிலிருந்து எடுத்து உண்டுபண்ணினார். அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்த ஒரு விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஒரு துணையை உண்டுபண்ணினார், அதுவே ஏவாளாயிருந்தது, அவள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டு, மனிதனின் ஒரு பாகமாயிருந்தாள். அவள் சிருஷ்டிப்பில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் ஆதியில் அவனுடைய பாகமாயிருந்தாள். அவள் இந்த சிருஷ்டிப்பில் இங்கே அவனுடைய பாகமாயிருந்தான். அவளை மற்றொரு சிருஷ்டிப்பில் பிரிக்க முடியாது, அவள் அதே சிருஷ்டிப்பில் சிருஷ்டிக்கப்பட வேண்டியவளாயிருந்தாள். 831 சரியாக அந்தவிதமாகவே கிறிஸ்துவும் தேவனும் ஒரே நபராக இருக்க வேண்டியதாயிருந்தது, அது வித்தியாசமான எந்தக் காரியமுமாயிருக்க முடியாது. அவர் ஒரு நல்ல மனிதனாக அல்லது ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், அவர் ஒரு மீட்பராய் இருந்திருக்க முடியாது; அவர் தாமே சிருஷ்டிகராய் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இப்பொழுதும் இருக்கிறார், நீங்கள் பாருங்கள், அந்தவிதமாகவே அவர் அப்பொழுதும் இருந்தார். 832 இப்பொழுது ஒரு மனிதன் இங்கே கிழே இறங்கி வந்தார், அவர்—அவர் அற்புதமானவராயிருந்தார்; தேவன் அதை நேசித்தார், அவர், “அது அழகாயுள்ளது, அவர்கள் பூமியின்மேல் இருக்கட்டும், அங்கே என்றென்றுமாய் ஜீவிக்கட்டும். அவ்வளவுதான்; ஏனென்றால்—ஏனென்றால் நித்தியத்தில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கட்டும். அது அப்படியே வளரட்டும், ஒவ்வொரு தாவரமும் அதைப் போன்றே ஒவ்வொன்றையும் பிறப்பிக்கட்டும். மனிதன் வாழட்டும், மிருகங்களும் மற்றுமுள்ள ஒவ்வொன்றும் என்றென்றுமாய் வாழட்டும். அவ்வளவுதான்” என்றார். புரிகிறதா? 833 அதன்பின்னர் பாவம் பிரவேசித்தது. நான் இந்த விவரத்தைக் கூற விரும்புகிறேன். இந்த…அநேக ஜனங்கள் இந்த ஒரு வேதவாக்கியத்தின் பேரில் அப்பேர்பட்ட ஒரு பயங்கரமான தவறைச் செய்கிறார்கள். அது 23-ம் சங்கீதத்தில் உள்ளது. அவர்கள் அதை இந்தவிதமாக, “நான் மரண நிழலின் இருளான பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்று வாசிக்கிறார்கள். இப்பொழுது, அப்படிப்பட்ட ஒரு காரியமும் இல்லை. வேதம் அதை, “இருளின் நிழலான பள்ளத்தாக்கு…மரண நிழல்களின் இருளான பள்ளத்தாக்கு” என்று கூறவில்லை. 834 அது, “நான் மரண நிழலின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்றேக் கூறுகிறது. இப்பொழுது ஒரு நிழல் இருப்பதற்கு முன்பு, அந்த நிழலை உண்டுபண்ண வெளிச்சம் இருக்கவேண்டும். பாருங்கள், தாவீது ஒரு தீர்க்கதரியாய், அபிஷேகத்தின் கீழிருந்த படியால், அவன் ஒரு தவறும் செய்யவில்லை, அவன் அப்படியே சத்தியத்தையேக் கூறினான்: “நான்…” இருளின் பள்ளத்தாக்கினூடாக நடந்தாலும் என்றல்ல, ஆனால், “மரண நிழலின் பள்ளத்தாக்கினூடாக” என்றான். 835 அப்படியானால் நீங்கள் ஒரு நிழலை உண்டு பண்ண ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வெளிச்சத்தை உடையவராயிருக்க வேண்டும். அந்த விதமாகத்தான் அது இங்கே உள்ளது. நாம் இயற்கையாகவும் இயற்கைக்கு மேம்பட்டவர்களுமாயிருக்கிறோம். இந்த சரீரம் ஒரு ஸ்திரீயினால் பிறப்பிக்கப்பட்டு, வேறெதனூடாகவுமல்ல, மரணத்திற்கு கீழ்பட்டிருக்கிறது;…தேவனாலல்ல, நீங்கள் ஆதாம், ஏவாளிலிருந்து வந்த ஒரு இனப்பெருக்கமாயிருக்கிறீர்கள். கறுப்பாயிருந்தாலும், வெள்ளையாயிருந்தாலும் அல்லது நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் ஆதாம் ஏவாளின் கர்ப்பப்பிறப்பிலிருந்து வந்த ஒரு உற்பத்தியாயிருக்கிறீர்கள். அதுவே, “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களால் உலகத்திற்கு வந்த” உங்களுடைய சரீரங்களை உண்டாக்குகிறது. நீங்கள் உங்களுடைய ஜீவியத்தின் துவக்கத்திலேயே எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலிருந்தும் கூட ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறீர்கள். 836 இப்பொழுது, காரணம் சுபாவத்தினால் உங்களிடத்தில் வந்துள்ள ஆவியினால், பாலியல் உடல் உறவிலிருந்து தோன்றின சுபாவத்தினால், புருஷனாலும், ஸ்திரீயானாலும் உண்டான வாஞ்சையினால் ஒரு பூமிக்குரிய குழந்தை உருவாகிறது. அந்தக் குழந்தையை தனியே விட்டுவிட்டு, சரியானதை அவனுக்கு போதிக்கவில்லையென்றால், அப்பொழுது அவன் தவறாக சென்று விடுவான். அவனுக்கு சரியானதையும், தவறானதையும் போதிக்கவில்லையென்றாலும், அவன் தவறானதையே தெரிந்து கொள்வான். காரணம் அது அப்படிப்பட்டதைச் செய்யும்படியான அவனுடைய சுபாவமாய் உள்ளது. 837 அந்த அளவு கூட உயரமாயிராத ஒரு சிறு குழந்தையானது மிகுந்த எரிச்சல் கொள்வதைக் கவனித்துப் பாருங்கள்; அது அப்படியே…அது—அவன் தன்னுடைய கரங்களை முறுக்கிக் கொண்டு, முகம் சிவந்து போய், தன்னுடைய மூச்சை இழுத்துப் பிடித்துக் கத்துகிறது. நிச்சயமாகவே. அது என்ன? அது அவனுடைய சுபாவமாயுள்ளது. அவன் அதை தன்னுடைய அப்பா அல்லது தன்னுடைய அம்மா, யாரோ ஒருவரிடத்திலிருந்தேப் பெற்றுள்ளான். அவள் ஒரு இரம்ப ஒலியைப் போல சண்டையிடும்படி அதிக கோபமுடையவளாயிருந்திருப்பாள் அல்லது அவனுடைய தந்தை அவ்வாறு இருந்திருப்பான். அவர்கள் அவ்வாறு இருக்கவில்லையென்றால், அவனுடைய தாத்தாவோ அல்லது பாட்டியோ அவ்வாறு இருந்திருப்பார். பாருங்கள், அது கர்ப்பப்பிறப்பாயுள்ளது. 838 ஆகையால் அதுவே…இதை உண்டாக்குகிறது…நீங்கள் உலகத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுபாவத்தினால் உண்டானீர்கள். உங்களுடைய முழு உடலமைப்புமே கருமையாய், மாசுபடிந்ததாய், ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு, சபிக்கப்பட்டு நரகத்திற்கு போகிறதாயிருக்கிறது. அது உண்மையே! 839 ஆனால் நீங்கள் மீண்டும் பிறக்கும்போது, அப்பொழுது தேவனுடைய வெளிச்சம் அந்த ஆத்துமாவிற்குள் பிரகாசிக்கிறது (அல்லேலூயா) அதன்பின் அது ஒரு இருளான பள்ளத்தாக்காய் ஒரு போதும் இருப்பதில்லை, ஆனால் அது அதற்குள் ஒரு நிழலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்காயுள்ளது. நீங்கள் இங்கே மாம்சத்தினால் திரையிடப்பட்டிருக்கலாம், நம்முடைய முகத்தின் மேல் சில காரியங்களால் திரையிடப்பட்டிருக்கலாம், ஆனால் அங்கே போதுமான வெளிச்சம் உள்ளது. என்றோ ஒரு நாள் அந்த வெளிச்சமும், இருளும் பிரிய வேண்டுமே! வெளிச்சம் பிரகாசிக்கையில், இருள் விலகியோடுகிறது. நாம் கிறிஸ்துவோடு அந்த சரீரத்தில் இருக்கும்படி செல்லும் போது, அந்தகாரமும், மரணமும் மறைந்து விட நாமோ அந்த பரிபூரண வெளிச்சத்திற்குள்ளாக பிரகாசிக்கிறோம். தேவனுக்கே மகிமை! நாம் அங்கு இருக்கும்போது, ஒருபோதும் சுகவீனமாயிருக்காது, அதனோடு எந்த இருளும் ஒருபோதும் கலக்கப்படாது. 840 இப்பொழுதோ நாம் சுகவீனத்தையும், சந்தோஷத்தையும் உடையவர்களாயிருக்கிறோம், ஆரோக்கியத்தையும், பெலனையும் உடையவர்களாயிருக்கிறோம். நாம் அடுத்தடுத்து வரும் இன்ப துன்பங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், சந்தோஷத்தையும், துக்கம் போன்றவற்றையும் உடையவர்களாயிருக்கிறோம். இது வெறுமென ஒரு நிழலாய் உள்ளது. அங்கே வெளிச்சம் உண்டு என்பதை அறிந்து கொள்ளும்படியான போதுமான வெளிச்சத்தை நாம் பெற்றுள்ளோம். நாம் இன்னமும் மாம்ச சரீரத்தில் இருக்கிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் விடியப்போகிறது. அப்பொழுது மரண தூதன் படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்திருக்க, அப்பொழுது மருத்துவரோ எல்லாம் முடிந்து விட்டது என்று கூறும்போது, இயற்கைக்கு மேம்பட்டது வரும்போது இந்த இயற்கையானது விலகிச் செல்ல, ஒளியானது ஒளியண்டை பிரகாசிக்க, இருளோ இருளுக்கே திரும்பிச் செல்லுகிறது. அப்பொழுது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அப்பொழுது இந்த அழிவு அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அதாவது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக்கொள்ளும்போது, நாம் ஒரு காலத்தின் சிருஷ்டியிலிருந்து ஒரு நித்திய சிருஷ்டியாக மாறுகிறோம். நீங்கள் முற்றிலும் அந்தகாரத்தைக் கொண்டு அங்கே வெளியே செல்ல முடியாது, நீங்கள் அந்தகாரத்தில் ஒளியைப் பெற்றிருக்க வேண்டும். அங்குதான் காரியமே உள்ளது. அந்தவிதமான சரீரத்தையே நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். 841 நாம் என்ன செய்கிறோம்? என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரனே, என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரியே, உலகத்தோற்றத்திற்கு முன்பே, தேவன் உங்களை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தபோது, இல்லை மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தபோது, மனுஷனுடைய மகிமைக்காக மனுஷ சாயலில் ஸ்திரீயை சிருஷ்டித்தார், அவர் உங்களை ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் உண்டுபண்ணினார். அப்படியே தம்மைப் போலவே, அவர், “உண்டாக்குவோமா” என்று அவர் உண்டுபண்ணியிருந்த சிருஷ்டிகளிடத்தில், அதாவது, “நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்குவோமாக” என்றார். அதே சமயத்தில் தேவன் ஒருபோதும் அப்பொழுது மாம்சமாகமலிருந்தார், அவர் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். 842 மோசே அவரைக் கண்டான். மோசே, “கர்த்தாவே, நாம் உம்மைக் காணட்டும்” என்று கதறினான். 843 அப்பொழுது அவர், “போய் அந்தக் கன்மலையின் வெடிப்பில் மறைந்துகொள்” என்றார். மோசே போய் அந்த வெடிப்பில் நின்றான்; அப்பொழுது தேவன் கடந்து சென்றபோது, மின்னலும், இடிமுழக்கமும்…தேவன் கடந்து சென்றபோது, அவர் இதைப் போன்று தன்னுடைய முதுகைத் திருப்பியிருந்தார். அப்பொழுது மோசே, “அது ஒரு மனிதனின் பின்பக்கமாயிருந்தது” என்றான். அல்லேலூயா! 844 அது யாராயிருந்தது? அது இறங்கி வந்த மெல்கிதேசேக்காய், சாலேமின் ராஜாவாய், தகப்பனும், தாயுமில்லாதவராய், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவராயிருந்தார். அது அவரே! அவரே இறங்கி வந்தார். அந்த ஒருவரே ஆபிரகாமினிடத்தில் பேசினார்; அதாவது தம்மை அந்தவிதமான ஒரு மாம்ச சரீரத்தில் அடக்கிக்கொண்டு, “வ்வூயு” என்று ஊதி, அதற்குள் அடியெடுத்து வைத்து இறங்கி வந்து, கன்றினைப் புசித்து, பசுவின் பாலைப் பருகி, வெண்ணையையும், சில அப்பங்களையும் புசித்தார். இரண்டு தூதர்களோடும் வந்தார். 845 அவர்கள் அங்கிருந்து நடந்து சென்றபோது, அந்த எல்லா காரியமும் “வ்வூயூ” என்று மறைந்து போய்விட்டன. 846 நான் அதைக் குறித்து ஒருபோதும் நினைத்ததேயில்லை. இங்கே அண்மையில் ஒரு துப்பாக்கியில் தோட்டாக்களை நிறைத்துக் கொண்டிருந்தேன், நான் .22 என்ற ஒரு துப்பாக்கியை வைத்துள்ளேன். அது ஒரு .220 என்ற ஸ்விப்ட் துப்பாக்கியாகும். துப்பாக்கியை உபயோகப்படுத்தும் இங்குள்ள சகோதரர்கள் அதை அறிவர். அந்த சிறிய தோட்டாவானது, அது ஒரு நாற்பத்தியெட்டு கிரெயின் அளவு கொண்ட இந்த அளவு நீளமுள்ள தோட்டா, அதாவது வழக்கமான .22 தோட்டாவாகும். அது 30-க்கு 06 என்ற அளவில் வல்லமையாய் வெடிக்கக் கூடியதாய் கிட்டத்தட்ட நிரப்பிவைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நான்…அந்த நிறுவனம் ஏறக்குறைய ஒரு விநாடிக்கு ஏறக்குறைய நாலாயிரத்து நானூறு அடி தூரம் பாய்ந்து சுடக்கூடிய அளவுள்ள தோட்டாவை மாத்திரமே நிரப்புகிறது. சரி, நீங்கள் போதிய…அதாவது ஒரு விநாடிக்கு ஐயாயிரம் அடி சுடக்கூடிய அளவிற்கு நீங்களாகவே தோட்டாவை நிரப்பலாம். மற்றபடி நீங்கள் சுட்டால்…அன்றொரு நாள் நாங்கள் இருநூறு கெஜ தூரத்தில் சுட்டுக் கொண்டிருந்தபோது, அந்த தோட்டா புழுதியில் பட்டு, அந்த துப்பாக்கி வெடித்த எதிரொலி எழும்பும் முன்னே அது புழுதியாய் பறந்து கொண்டிருந்தது. அந்தவிதமாக அவ்வளவு வேகமானதாயுள்ளது. 847 ஆகையால் நீங்கள் ஒரு பல் குத்தியை எடுத்து, (உங்களுக்குத் தெரியும், தட்டையான பாகமான ஒரு பல்குத்தி) அதில் உங்களுடைய வெடி மருந்தினை அந்த அளவு முனையில் வைத்து, கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து சிறு தோட்டாக்களை அங்கே உங்களுடைய துப்பாக்கியில் நிறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு நின்று உங்கள் கையில் உள்ள தோட்டாவை ஒரு விநாடியில் வெடிக்கச் செய்யலாம். உங்களிடத்திலிருந்து இருநூறு அடி தூரத்தில் தரையில் அமர்ந்திருக்கும் பன்றியை அங்கிருந்து சுட்டால், அந்தப் பன்றியோ ஒரு போதும் அசையாமல் இருக்கும். காரணம் அந்தத் தோட்டா, பன்றியை சென்றடைவதற்கு முன்னரே வெடித்து அதனுடைய மூல நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுவாகிவிடுகிறது. இங்கே ஒரு தோட்டாவில் செப்பும் ஈயமும் ஒன்று சேர்ந்து கலந்துள்ளது, அது ஒரு விநாடியில் நீங்கள் அதை ஒருபோதும் கண்டறியாத பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுக்களாக மாறிவிடுகின்றன. அந்த வாயுக்கள் மீண்டும் திரும்ப செப்புவாக உருவாகி, ஈயமாக அந்தவிதமாக உருவாகி வரக் கூடும். அந்த வாயுக்கள் அவ்வாறு உருவாக வேண்டியதாயுள்ளன. 848 இப்பொழுது அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அந்தவிதமாகவே நாம் இங்கே இருக்கிறோம், நாம் ஒரு உயரிய வர்க்கத்திலிருந்து வந்துள்ளோம். ஆதியிலே நாம் தேவனுடைய சாயலில் இருந்தோம். திரையும், அந்தகாரமும் அதை இப்பொழுது நாம் அறியாதபடி தடுக்கின்றன. ஆனால் இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் அவர், “உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர்களோடு இருந்தார்” என்று கூறினார். புரிகிறதா? நாம் அவரோடிருந்தோமே! உங்களால் இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் நீங்கள் ஆதியில் இருந்தீர்கள். “இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்கு ஏற்கெனவே ஒன்று காத்துக்கொண்டிருக்கிறதே!” அல்லேலூயா! அப்பொழுது நாம் ஒருகாலத்தில் ஜீவித்து வந்த இந்த ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக பிரவேசிக்கிறோம், எனவே நாம் புசிக்கவும், கரங்களைக் குலுக்கவும் முடியும். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “எதுவரைக்கும், ஆண்டவரே?” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டனர். 849 தேவனண்டை செல்லுகிற ஏழு படிகள் உள்ளன, அவை ஏழு ஆவிகளாக இறங்கி வருகின்றன. சரி, நீங்கள் தேவனுடைய பலிபீடத்தின் கீழே செல்லும்போது, அவைகள், “எதுவரைக்கும் ஆண்டவரே? நாங்கள் இங்கிருந்து திரும்பி போக முடியுமா?” என்று சத்தமிட்டு கொண்டிருந்தன. 850 அதற்கு தேவன், “அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சகாலம் இளைப்பாற வேண்டும்” என்றார். பார்த்தீர்களா? 851 அதன்பின்னரே ஆத்துமாக்கள் திரும்பி வருகின்றன, எல்லா அந்தகரமும், மரணமும், சுகவீனமும், கருமையான துயரங்கள் மங்கிப்போகும்போது, அவர்கள் மீண்டும் புருஷரும், ஸ்திரீகளுமாகி என்றென்றுமாய் ஜீவிப்பார்; அப்பொழுது அங்கு நிழலே இராது, அது முற்றிலும் சூரிய வெளிச்சமாயிருக்குமே! 852 கவனியுங்கள். அதுதான் இங்குள்ளது. அது எவ்வளவு அந்தகாரமாக வேண்டுமானாலும் ஆகட்டும்; சூரிய வெளிச்சம் அந்தகாரத்தின் மீது படும்படுபோது அது மிகுந்த அந்தகாரமாயிருக்க முடியாது. இருளும் ஒளியும் ஒன்று சேர்ந்து வாசஞ் செய்ய முடியாது. ஏனென்றால்…எது அதிக சக்தி வாய்ந்தது? ஒளியே. ஒளியானது பிரகாசிக்கும்போது, இருளானது விலகியோடுகிறது. ஆமென். நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நீங்கள் அதை அறிந்திருப்பதால் சந்தோஷமாயிருக்கவில்லையா? எங்குமே ஒரு நிழலே இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இப்பொழுது நம்முடைய இருதயங்களில் உள்ள இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியானது ஏதோக் காரியத்தை திரும்பவும் சாட்சி பகருகிறது: தேவ குமாரனை, தேவனுடைய வல்லமையைக் குறித்து சாட்சி பகருகிறது. 853 நாம் இங்கே நடக்கிறோம், பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கி வந்து ஒரு கூட்டத்திற்குள்ளாகச் சென்று, “நீ திருமதி இன்னார்—இன்னார், அதாவது நீ ஒரு குறிப்பிட்டக் காரியத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்தாய். நீ இதனோடு நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கிறாய், ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது ‘உன்னுடைய காலூன்றி எழும்பி நில், நீ குணமடைந்துவிட்டார்’” என்று கூறுவதைக் கவனியுங்கள். ஒரு முடமானவரும், குருடனும் தங்களுடைய காலூன்றி எழும்புகிறார்கள். ஒரு மனிதனின் மேல் கருத்த நிழல் காணப்பட, புற்று நோயினால் தின்றுவிடப்பட்ட அவன் ஜீவனை அடைந்து, மீண்டும் புதிய ஆரோக்கியத்தை பெறுகிறான். 854 சந்தேகமேயில்லை, இயேசு, “நான் செய்கிற இந்தக் கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். அவர், “பிதாவனவர் எனக்குக் காண்பிக்கும் வரை நான் ஒன்றையும் செய்கிறதில்லை” என்றார். 855 அது என்னவாயுள்ளது? அதுவே நம்மை மீட்கும்படியாக இந்த இருளுக்குள்ளாக வந்து கலந்து கொண்டிருக்கிற ஒளியாய் உள்ளது. நீங்கள் பாருங்கள், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 856 இப்பொழுது, என்றோ ஒரு நாள் அங்கே திரும்பிச் செல்லப் போகிறோம், அப்பொழுது அந்த ஆவிக்குரிய சரீரமானது ஆதியில் இருந்தது போன்றே மீண்டும் அழிவில்லாத மாம்சமாயிருக்கிறது, அதன்பின்னர் இயேசு வருகிறார், தேவனும்…கிறிஸ்துவும் ஒருவராயிருப்பவர். கிறிஸ்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எல்லா ஜனங்களும் மானிடராயிருப்பர். கிறிஸ்து, கர்த்தராகிய இயேசு தாவீதின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எந்த ஒரு மனிதனும் ஒரு போதும் மரிப்பதில்லை. நாம் ஒருபோதும் மரிப்பதில்லை, நாம் ஒருபோதும் சுகவீனமடையமாட்டோம், அங்கே ஒருபோதும் துயரமே இருப்பதில்லை, நாம் ஆயிரவருடங்கள் ஜீவிப்போம். 857 இந்த பூமியின் மேல் ஆயிர வருட அரசாட்சி முடிவுறும்போது, அப்பொழுதே பிசாசு வருகிறான், அதன்பின்னரே இரண்டாம் உயிர்த்தெழுதல், அநீதிமான்களின் உயிர்த்தெழுதல் உண்டாகிறது. அவர்கள் கடற்கரை மணலைப் போல ஒரு பெரிய சேனையாய் கூடுவர். அவர்கள் பரிசுத்தவான்களின் பாளையத்தை வளைந்து கொள்ள வருவார்கள், அவர்கள் அவ்வாறு வளைந்து கொள்ளும்போது, தேவன் வானத்திலிருந்து அக்கினியையும், கந்தகத்தையும் பொழியப்பண்ணி அவர்களை அழித்துப்போடுகிறார். 858 யோவான், “பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய் பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நரகத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்: அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” என்றான். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 859 அவன், “மனைவி…ஆட்டுக்குட்டியும் மணவாட்டியும் அங்கே என்றென்றுமாயிருப்பர்” என்றான். புதிய பூமியோ கோடிக்கணக்கான மைல்கள் சதுரமாயிருக்கும். ஓ, என்னே, நகரம், வேதாகம அளவுகளின்படி நகரம் பதினைந்தாயிரம் மைல்கள் சதுரமாயிருக்கும். அது பதினைந்தாயிரம் மைல்கள் நீளமும், பதினைந்தாயிரம் மைல்கள் அகலமும், பதினைந்தாயிரம் மைல்கள் உயரமுமாயிருக்கும். அதுவே அந்த நகரத்தைக் குறித்து வேதம் அளிக்கிற சரியான விவரமாயிருக்கிறது. அங்கே சமுத்திரம் இல்லாதிருப்பதில் வியப்பொன்றுமில்லையே, அதற்கு அங்கே இடமே இல்லாதிருந்தது. 860 ஓ, அது அப்பேர்ப்பட்ட அழகாயிருக்கும்! அங்கே, அங்கே தேவனுடைய சிங்காசனத்தண்டையிலே ஒரு ஊற்று உண்டு, அது சிங்காசனத்திற்கு முன்பாக பாய்ந்தோடுகிறது. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியின்…இருகரைகளிலும் ஜீவ விருட்சங்களிருந்தன. பன்னிரண்டுவிதமான கனிகளைத் தரும் இந்த விருட்சமானது ஒவ்வொரு மாதமும் அதனுடைய கனிகளைக் கொடுக்கும். 861 அங்கே இருப்பத்து நான்கு மூப்பர்கள் இருக்கின்றனர். அங்கே மணவாட்டியும் இருக்கிறாள். அங்கே நாற்பத்தி நாலாயிரம் ஆலய அண்ணகர்களும் இருக்கின்றனர். ஓ, சகோதரனே, நாம் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். காரியங்களோ நமக்காக முன்னதாகவே வைக்கப்பட்டுள்ளன். நான்கு…இருபத்தி நான்கு மூப்பர்கள் உள்ளனர். இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் அண்ணகர்கள் உள்ளனர். மணவாட்டியோ கிறிஸ்துவோடு அமர்ந்திருக்கிறாள். என்னே, நீங்கள் பேசி…என்னுடைய பரமவீடு, இனிமையான பரம வீடு! ஆமென். 862 அங்கே போகும் சிலாக்கியம் எனக்கு உண்டு என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், அங்கே போகும் சிலாக்கியம் உங்களுக்கும் உண்டு. அப்படியிருக்க நீங்கள் ஏன் இந்த அந்தகாரத்தில் நடக்கவும், எந்த வெளிச்சத்தையும் காணாமல் மரித்து, குழப்பத்திற்குள்ளாக சென்று ஒன்றுமில்லாமல் போக மனதாயிருக்கிறீர்கள்? ஏனென்றால் வெளிச்சம் தன்னுடைய உயரிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்போது, அங்கே அந்தகாரத்திற்கு இடமே இல்லை. வெளிச்சமானது வரும்போது, அந்தகாரம் எங்கே என்று போய் கண்டறியுங்கள். எல்லாக் காரியங்களும் தேவனிடத்தில் திருப்பப்படுகின்றபோதும் அப்படித்தான் உள்ளது. இருளுக்கு ஒரு துவக்கம் உண்டாயிருந்தது, இருளுக்கு ஒரு முடிவும் உண்டு. வெளிச்சத்திற்கோ ஒருபோதும் ஒரு துவக்கமே இல்லாதிருந்தது, அதற்கு ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. தேவனுக்கு ஒருபோதும் ஒரு துவக்கமும் இல்லாதிருந்தது, ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. ஆகையால் என்றோ ஒரு நாள் முழு ஒழுக்கக் கேடான உலகமானது அதனுடைய எல்லா பாவத்தோடும், அதனுடைய அழகோடும், அதனுடைய எல்லா அற்புதமான காரியங்கள் மற்றும் உணர்ச்சிகளோடும், அதனுடைய எல்லா கவர்ச்சி என்ற அழைக்கப்படுகிற ஒவ்வொரு காரியத்தோடும் ஒன்றுமில்லாமல் மங்கிப் போய்விடும், அது இனி ஒரு போதும் இல்லாமலே போய்விடும். அது இனி ஒருபோதும் இராது, அதைக் குறித்த சிந்தனையும் ஒருபோதும் இல்லாமற்போய்விடுமே! “அது இனி ஒருபோதும் நினைவு கூறப்படுவதற்குள்ளாகவும் கூட தோன்றாது” என்றே கூறப்பட்டுள்ளது. 863 ஆனால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் அவரோடிருப்பர். நாம் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை உடையவர்களாயிருப்போம்; அவரோடு ஜீவிப்போம், அவரோடு புசிப்போம், அவரோடு அமருவோம், அவரோடு என்றென்றுமாய், யுகயுகமாக வாசம் பண்ணுவோம்; நித்திய காலங்களோ உலகத்தோடு முடிவேயில்லாமல் உருண்டோடும். 864 இன்றிரவு உங்களுக்கு ஒரு தருணம் உண்டு. அந்த இடத்தைச் சந்திக்க நீங்கள் ஆயத்தப்படவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும், நீங்கள் எவ்வளவுதான் ஒரு நல்ல அங்கத்தினராயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் நடக்கிற அந்த அந்தகாரத்தில் கிறிஸ்து உங்களுக்கு புதிய ஜீவனை அளிக்கும்வரை நீங்கள் இழக்கப்பட்டவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். பக்தி, கவனியுங்கள், நண்பர்களே, சமயம் அறிவுப் பூர்வமானதாயுள்ளது. புரிகிறதா? காயீனின் பிள்ளைகள் எல்லோருமே எப்பொழுதுமே ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்து வந்தனர். இயேசு வந்தபோது அந்த யூதர்கள் ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்தனர், ஆனால் அவர்கள் இரட்சிப்பைப் புறக்கணித்தனர். 865 நீங்கள் இன்றிரவு மிகுந்த பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். நீங்கள் பிரஸ்பிடேரியனாய், மெத்தோடிஸ்டாய், பெந்தேகோஸ்தேக்காரராய், நசரேயனாய், யாத்திரீகப் பரிசுத்தராயிருக்கலாம். நீங்கள் நேர்மையான மார்க்கத்தை உடையவராயிருப்பதால், உங்களுடைய சபைக்குச் சென்று, சாட்சி பகரலாம். நீங்கள் பாடலாம், ஆரவாரமிடலாம், கர்த்தரை ஸ்தோத்தரிக்கலாம், நீங்கள் சபைக்கு உங்களுடைய தசமபாகங்களைக் கொண்டு வரலாம், நீங்கள் உங்களுடைய அண்டைவீட்டாரை சரியாக நடத்தலாம். அதற்கு உங்களுடைய நித்திய பயண இலக்கோடு எந்த ஒரு சம்மந்தமுமில்லை. காயீன் அந்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் செய்தான். முற்றிலுமாக. 866 வேதம், “கோதுமையும் களைகளும் ஒன்று சேர்ந்து வளர்ந்தன” என்று கூறியுள்ளது. அந்த கோதுமை மழைக்காக கடும் வேட்கையுற்றுக் கொண்டிருந்தபோது, களைகளும் கூட வேட்கையுற்றுக் கொண்டிருந்தன. மழை வந்தபோது கோதுமையைப் போலவே களைகளும் மழையைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைந்தன. “ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” இப்பொழுது நீங்கள் உங்களுடைய கனிகளை சோசித்துப் பார்க்கையில், நாம் ஜெபம் செய்வோமாக. 867 இப்பொழுது, பிதாவாகிய தேவனே, இன்றிரவு இங்கே சில கடினமான கேள்விகள் இருந்து வந்தன. நான் சரியாக பதிலளிக்காமலிருந்திருக்கலாம், ஆனால் என்னுடைய அறிவுக்கெட்டினவரையில் மிகச் சிறந்த முறையில் பதில் அளித்துள்ளேன். நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். தேவனே, நீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது ஒருகால் இன்னும் இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு நான் சரியாக பதில் அளித்திருக்கவில்லையென்றால், அப்பொழுது நீர் ஜனங்களுடைய இருதயத்தில் பேசும், அவைகள் எங்கே இருக்க வேண்டும் என்பதை நீர் அவர்களுக்கு தெரியப்படுத்தும். நீரே என்னிடம் கூறினீர் என்பதை நான் உணருகிறேன். ஆனால் நான் தவறாயிருந்தால், அப்பொழுது நீர் என்னை மன்னிப்பீராக. 868 தேவனே, இந்த ஒவ்வொன்றையும் அவர்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அவர்கள் அவைகளை ஆழ்ந்து சிந்தித்து, “ஆம், அங்கே உள்ள சபையில் இந்தக் காரியங்கள் உள்ளன. அதைத்தான் வேதம் கூறியுள்ளது” என்று இந்தவிதமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். 869 கர்த்தாவே, பெண்மணிகளுக்கு நான் எந்தக் காரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குற்றமாகக் கருதிக் கூறவில்லை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் தேவனே, நான்—நான் என்னுடைய சகோதரிகளை நேசிக்கிறேன், பிதாவே, நீர் அதை அறிவீர். நான் அவர்களைக் குறித்து எப்படி நினைக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆனால் நான் நின்று தவறான ஒரு காரியத்தை அவர்களிடம் கூறினால், நான் அவர்களுக்கு ஒரு—ஒரு வஞ்சனாக இருப்பேன். நான் என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு வஞ்சகனாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; நான் அவர்களுக்கு சத்தியத்தை கூறவே விரும்புகிறேன். பிதாவே, நான் அதை சரியாக உம்முடைய வார்த்தையிலிருந்து எடுக்கிறேன். 870 இப்பொழுது நான் என்னுடைய சகோதரர்களை கண்டனம் செய்கிறதில்லை, ஆனால் கர்த்தாவே, அவர்கள் இந்தக் காரியங்களை அனுமதிக்கும்போது, அவர்கள் தவறாயிருந்து வருகிறார்கள் என்றே நான் கூறுகிறேன். பெண்மணியோ அந்த வித்தியாசத்தை அறிந்திருந்திருந்தும், போய் அதைச் செய்திருந்தால், அப்பொழுது அது அவளைப் பொறுத்ததாயுள்ளது, அப்பொழுது போதகர் குற்றவாளியல்ல. 871 அப்பா, பிதாவே அந்தக் காரியங்கள் உம்முடைய வார்த்தையாயிருக்கின்றன, அவர்களும் உம்மிடத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது நீர் ஜனங்களுடைய இருதயத்தில் பேசும், நான் அவர்கள் எல்லோரையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீர் என்ன செய்துள்ளீர் என்பதை நான் காண்பேன், பிதாவே; உமக்குத் தெரியும், ஒவ்வொரு இருதயத்திலும் பேசும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். நம்முடைய தலைகள் வணங்கிருப்பதோடு; 872 யாராவது தங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு முற்றிலும் ஜெயங்கொள்பவனாகவும், கடைசி நாளில் கலியாணா வஸ்திரம் தரித்து, கிறிஸ்துவோடிருக்கும்படியாகவும் என்னை நினைவு கூரும்” என்று கூறுவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “எனக்காக ஜெபிப்பீரா?” என்று கூறுவீர்களா? 873 ஒவ்வொருவரும் உங்களுடைய தலையை இப்பொழுது தொடர்ந்து வணங்கியவாறே அப்படியே இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது அருமையாயுள்ளது. அங்குள்ள உங்களை, என்னுடைய சகோதரிகளை; என்னுடைய சகோதரர்களையும் கூட, உங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ள உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமாயுள்ளது. 874 இப்பொழுது, பிதாவே, நீர் அவர்களுடைய கரங்களைக் காண்கிறீர். (நீங்கள் சில நேரத்தில், “பரவாயில்லை, வெறுமென அதைப் போல ஒரு சிறு ஜெபந்தானே?” என்று நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.) தேவனே, நேற்று அந்தத் தாய், “மூளையில் வேகமாகப் பரவக்கூடிய அந்த நோயினால் பாதிக்கப்பட்டு, மூன்று வாரம் மட்டுமே உயிர்வாழ்வதாயிருந்து, அந்தப் பையன் மரித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய வீட்டில் ஏறெடுக்கப்பட்ட ஒரு சிறு ஜெபம் இப்பொழுது காரியங்களையே மாற்றிவிட்டது” என்று கூறினதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். 875 நான் எசேக்கியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், அவன் தன் முகத்தை சுவர்புறமாகத் திருப்பிக்கொண்டு, “கர்த்தாவே, நீர் என்னிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் விண்ணப்பண்ணுகிறேன், என்னை எண்ணிப் பாரும், ஏனென்றால் நாம் உமக்கு முன்பாக ஒரு உத்தம இருதயத்தோடு நடந்துள்ளேனே” என்று கதறினான். அது மரணத்திலிருந்து ஜீவனைக்கு மாற்றினது. 876 தேவ குமாரனிடத்திலிருந்து, “லாசருவே வெளியே வா” என்ற ஒரு கூக்குரலினால் ஒரு மரித்த மனிதன் வெளிவந்தான். 877 ஓ தேவனே, நீர், “சொல்லுங்கள், கேளுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, நீங்கள் கூறினது நிறைவேறும் என்றும், நீங்கள் கூறினதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்” என்றும் கூறினீர். 878 இப்பொழுது பிதாவே, தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரும், அவர்கள் தங்களுடைய கரங்களை எதற்காக உயர்த்தினார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. தேவனே, நீர் எங்களுடைய சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதாவது அவர்கள்…அவர்கள் தங்களை சரியாக நடத்திக் கொள்வார்களாக, அதாவது சாத்தான் தொலைக்காட்சி மற்றும் உண்மையான கதை என்ற பத்திரிக்கைகளினூடாக உறுதியற்ற நிலையில் இருக்கும்படி அவர்களை கையாண்டு வந்திருக்கிறான். தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகள் மூலமாக எப்படியாய் அசிங்கமாகவும், தொலைக்காட்சி போன்றவற்றின் பேரில் கொச்சையான காரியங்களைக் கொண்டு கையாண்டு வந்துள்ளான், அது…அவர்கள் உமக்கு கோடிக்கணக்கான ஆத்துமாக்களை ஆயத்தம் செய்யும் ஒரு கருவியாயிருப்பார்களாக, ஆனால் எப்படியாய் அவைகள் தணிக்கை செய்யப்படாமல், இந்த எல்லா அசிங்கமான காரியங்களை வெளியிடுகிறார்கள்…ஓ எவ்வளவு ஏளனத்துக்குரியதாயுள்ளது! பிசாசின் ஆவியானது உள்ளே வந்து எங்களுடைய சகோதரிகளை சுற்றிக்கொள்ள, அவர்களை தங்களை நாகரீகப்படுத்திக்கொள்ள முயன்று அந்தவிதமான ஆடைகளை உடைத்திகொள்கிறார்கள் என்பதை அறிந்துள்ளோம். 879 …கர்த்தாவே, எங்களுடைய சகோதரர்களும் கூட, அதாவது அவர்கள் புகைப்பிடித்து, மது அருந்தி, அதைப்போன்றதை தொடர்ந்து செய்து இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று தங்களை எப்படியாய் கருதிக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் “விசுவாசிப்பதாக” கூறிக்கொள்கிறதையும்…நாங்கள் கண்டறிகிறோம். அவர்கள், “பிசாசும் கூட விசுவாசிக்கிறான்” என்பதை அறிந்து கொள்வார்களாக. அவன் இரட்சிக்கப்படவில்லை, “அவன் விசுவாசித்து, நடுங்குகிறான்.” 880 இப்பொழுது பிதாவே, நீர் எங்கள் எல்லோரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டும் என்றும், எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். சிலர் தங்களுடைய கரங்களை உயர்த்தாமலிருந்திருக்கலாம், ஓ தேவனே, இரக்கமாயிரும். ஒருகால் அவர்களுக்கு இருக்கிற அடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தலாம். 881 கர்த்தாவே, நாங்கள் இராபோஜனம் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தப்பிதங்களையும், எங்களுடைய ஜீவியத்தின் பழங்குறைபாடுகளையும் எங்களுக்கு மன்னியும். நாங்கள் உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமாக, ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 882 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை இந்த விதமாக காக்க வைத்ததற்காக நான் வருந்துகிறேன். இராபோஜனத்திற்கு முன்பாக எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காக வருவீர்களா என்றும், ஜெபிக்கப்பட விரும்புகிறீர்களா என்றும் நான் எதிர்பார்க்கிறேன், எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காயிருந்தால், நாங்கள் அதை இந்த நேரத்தில் செய்ய மகிழ்ச்சியடைகிறோம். 883 சரி, சகோதரனே, நீங்கள் அவளை இங்கே மேலே கொண்டு வாருங்கள், அது அருமையாயிருக்கும். அப்படியே ஒரு விநாடி காத்திருங்கள், அதன்பின்னர் நாம் கலைந்து செல்லப் போகிறோம். ஆகையால் நாம் கலைந்து செல்லும்போது, அப்பொழுது இராபோஜனத்திற்காக தரித்திருக்க விரும்புகிறவர்கள் தரித்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நாம் வியாதியஸ்தருக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். வேதம் என்ன கூறியுள்ளது? 884 அந்த சகோதரனால் எழுந்திருக்க முடியவிலையென்றால்…பரவாயில்லை, அவர் அங்கேயே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் அவரிடத்திற்கு வருவோம். பரவாயில்லை, அவர் அங்கேயே அப்படியே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் வந்து அவருக்காக ஜெபிப்போம். அதனால் பரவாயில்லை. சரி, ஐயா, அவர் அப்படியே அங்கேயே அமர்ந்திருக்கட்டும். அவர் இங்கு வந்து நிற்பது கடினமாயுள்ளபடியால், நாங்கள் அவரண்டை வர மகிழ்ச்சியடைவோம். 885 இப்பொழுது என்னுடைய அருமையான நண்பனே, நான் இந்த ஒரு சிறு குறிப்பினைக் கூற விரும்புகிறேன். பாருங்கள், கர்த்தர் இதை அநேக முறை திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கிறார் என்பதை நான்—நான் அறிவேன். புரிகிறதா? நான் ஒரு பெரிய பிரசங்கியல்ல, எனக்கு கல்வியறிவு முதலியன இல்லை. நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நான் ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கப்பட்டேன், அது வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் இந்த வரத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் கூட, நான் அங்கே வழக்கமாக மருத்துவமனைக்குச் சென்று ஜெபிப்பேன்; அப்பொழுது மருத்துவச்சிகளோ அவர்களிடத்தில், “இப்பொழுது நீங்கள் குணமடையப் போகிறீர்கள்” என்று கூறுவது எனக்கு நினைவிருக்கிறது. புரிகிறதா? அதாவது ஏதோ ஒரு காரியம், அதாவது தேவன் ஜனங்களுக்கான என்னுடைய ஜெபங்களைக் கனப்படுத்தும்படி மிகவும் கிருபையுள்ளவராயிருந்து வருகிறார். 886 இன்றிரவு அது உலகளாவிய அளவில் எங்கும் பரவி அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம் அவர்களால் ஜெபிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் இங்கே வாருங்கள், நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்திற்கு பதில் கூறும்படியான ஒரு கடிதத்தை கொடுக்க நான் விரும்புகிறேன் என்று கூறினால் அப்பொழுது அது ஒரு உலகளாவிய ஒளிபரப்பாயிருக்கும். அப்பொழுது அது அவ்வாறு தெரிவிக்கப்பட்டால், ஒரு கால் நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் ஜனங்கள் அந்த அழைப்பிற்கு பதிலளிப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். புரிகிறதா? 887 அந்த ஜனங்கள், அல்லது அவர்களில் சிலர் ஏற்கெனவே மரித்துப் போயிருக்கலாம், மருத்துவரால் கைவிடப்பட்டு, சவ அடக்கம் செய்பவரால் அடக்கம்பண்ணப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் விபத்துகளில் கொல்லப்பட்டிருக்கலாம்: அவர்களில் சிலர் ஒரு இயற்கையான மரணம் அடைந்திருக்கலாம். அவர்களில் சிலர் குருடாய், நொண்டி நடப்பவராய், முடமானவராய், கைக்கால் திருகு நிலையில் உள்ளவராய், மன நோயினால் பாதிக்கப்பட்டு…மருத்துவமனையில் இருந்து கொண்டு, நாம் அவர்களுக்காக ஜெபிக்க மருத்துவமனையில் இருந்தோம் என்பதைக் கூட அறியாதிருக்கலாம். அவர்களை உள்ளேக் கொண்டு வந்து, அவர்களை சுகத்தோடு கொண்டு செல்லட்டும். அவர்கள் தங்களுடைய வழியில் போராடி, தங்களை சின்னாபின்னமாக்கிக்கொண்டு, தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதைக் கூட அறியாதிருக்கிறார்கள். ஐந்தே நிமிடங்களில் அவர்கள் இயல்பு நிலைக்குள்ளாகி, இனிமையாய், அன்பான ஜனங்களாய், தங்களுடைய எஞ்சியுள்ள நாட்களில் தெளிந்த புத்தியோடிருப்பார்கள். புரிகிறதா? 888 அது…அது என்னவாயுள்ளது? அது சகோதரன் பிரான்ஹாம் அல்ல. அது இயேசு கிறிஸ்துவாய் உள்ளது, அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி என்னை அனுப்பினார். இப்பொழுது அதுதான் இங்கு உள்ளது. அது ஜெபர்ஸன்வில் அதிக வெற்றிகரமாயிருந்து வரவில்லை, ஏனென்றால், அதற்குக் காரணம் இங்கு உள்ளது. இப்பொழுது எனக்கு இந்தப் பட்டிணத்தில் இங்கே என்னுடைய மிக நெருங்கிய, மிகச் சிறந்த நண்பர்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தப் பட்டிணம் தாமே, இந்தப் பட்டிணத்தின் மாநிலத்தையே, நான் இதை விரும்புகிறதில்லை. நான் இந்த நிலைமையை விரும்புகிறதில்லை, ஒரு போதும் விரும்பினதில்லை; நான் ஒரு சிறு பையனாயிருந்தபோது, என்னுடைய சரித்திர புத்தகங்களை அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான், “என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுவேன்” என்று கூறிக்கொண்டேன். புரிகிறதா? 889 நான் ஜெபர்ஸன்வில்லை விரும்புகிறதில்லை, இது ஒரு சதுப்பு நிலமாயுள்ளது, இது இங்கே கீழே உள்ளது. இது உண்மையாகவே சதுப்பு நிலமாகவே உள்ளது, இது மிக மோசமாகவும் உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், இங்கிருந்து மேலே ஸ்பிக்கர்ட் நப்ஸ் அல்லது எங்காவது உச்சியில் ஏறிச் சென்று, அங்கிருந்து நியூ ஆல்பனியையும், ஜெபர்ஸன்வில்லையும் கீழ் நோக்கிப் பாருங்கள். இங்கே பாருங்கள், மருத்துவர்களும் கூட, “இந்தப் பள்ளத்தாக்கின் நிலைமையின் காரணமாக இங்குள்ள ஜனங்கள் இரத்த சோகையுள்ளவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். 890 இங்கே உள்ள ஒரு பெண்மணி திருமதி.மார்கன் புற்று நோயிலிருந்து குணமாக்கப்பட்டாள், அவள் தன்னுடைய நாயை இங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள், ஏனென்றால் அதற்கு சொறிபிடித்துவிட்டது என்று எண்ணிக் கொண்டாள். அது என்னவாயிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது கோல்கேட் என்ற இடத்தில் களைச் செடிகள் வளர்ந்து காணப்படும் இடத்தினூடாக அந்த நாய் சென்றிருந்தது. இது மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாகவே உள்ளது. 891 இராணுவத்தில் இருந்த ஒரு நபர் இங்கு சென்றார்…அவருக்கு காச நோயிருந்தது. அவர் இங்கே பிளாரிடாவிற்கு வந்தபோது, அவருடைய கண்கள் உண்மையாகவே கருமையாகிவிட்டன, அவர் மருத்துவரிடம் சென்றார், அப்பொழுது அவர், “மருத்துவரே…” என்றார். 892 அப்பொழுது மருத்துவரோ, “இப்பொழுது நீங்கள் ஒரு சண்டையிட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் சண்டையிட்டிருக்கவில்லையா?” என்று கேட்டார். 893 அதற்கு அவர், “இல்லை ஐயா, நான் சண்டையிட்டிருக்கவில்லை” என்றார். 894 அது யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவருடைய பெயர் ஹெர்பை என்பதாகும். இப்பொழுது என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும்…அது—அது நியூ ஆல்பனியில் உள்ள ஐக்கிய தேசிய வங்கியில் அவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவராயிருக்கிறார். அங்குபோய், “ஹெர்பை” என்று கூறுகிற ஒருவரைப் பார்த்து, அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள். 895 அவர் கூறினார்…அவர் சென்றார், அவர், “மருத்துவரே” என்று அழைத்து, அவர், “எனக்கு எலும்பு உட்புழை பாதிப்பு உள்ளது” என்றார். 896 அப்பொழுது மருத்துவர் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு “அது உண்மை” என்றார். அவர், “நீங்கள் ஒரு சண்டையிலிருந்து வருகிறீர்கள் என்றே நான் எண்ணிக்கொண்டேன்” என்றேன். மேலும் அவர், “நீர் எங்கே வசிக்கிறீர்?” என்று கேட்டார். 897 அதற்கு இவரோ, “நீர் அந்த இடத்தை அறியாதிருக்கலாம்” என்று கூறி, “நான் கென்டக்கியில் உள்ள லூய்வில்லின் இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனி என்று அழைக்கப்படும் ஒரு சிறு பட்டிணத்தில் வசிக்கிறேன்” என்றார். 898 அப்பொழுது அவர், “நீர் இந்த எலும்பு உட்புழை பாதிப்பை இங்கே மியாமியிலிருந்து வருகிற உப்புத்தண்ணீரிலிருந்து பெற்றுக் கொள்கிறேன் என்று என்னிடம் பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்டார். மேலும் மருத்துவர், “நீங்கள் இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் வாழ்ந்துவிட்டால் அல்லது இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனியில் வாழ்ந்துவிட்டால், அப்பொழுது நீங்கள் இந்த உலகில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவம் உங்களை அனுப்பும் எந்த இடத்திலும் வாழலாம்” என்றார். அப்படித்தான். புரிகிறதா? 899 அது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் சதுப்பு நில நச்சுக்காற்று வீசும் இடத்திற்கு அடுத்தபடியாக அது உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாக இது உள்ளது என்பதை நான் அறிவேன். புரிகிறதா? எனக்கு—எனக்கு—எனக்கு—எனக்கு இங்கே நண்பர்கள் உண்டு. 900 இங்கே பாருங்கள், என்னால் இந்தவிதமாக போய் அவர்களை அழைக்க முடியும். என்னுடைய நண்பர் மருத்துவர் சாம் அடேயர் அவர்களைப் பாருங்கள். சரி, அங்கே மைக் ஈகன் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஓ, என்னே! எத்தனை பேரை என்னால் பெயர் சொல்லி கூற முடியும். உண்மையாகவே ஆயிரக்கணக்கான நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், நான் சிநேகம் வைத்துள்ள என்னுடைய பழைய சிநேகிதர்கள்…எத்தனை புதிய நண்பர்களை நான் கண்டறிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் அது ஒரு பழைய நண்பரின் ஸ்தானத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாது. நீங்கள் அதை அறிவீர்கள். 901 என்னுடைய வயோதிகத் தாயார் அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறார், அவர்கள் இந்த பூமியில் அநேக நாட்கள் இருக்கப் போவதில்லை, அவர்கள் இப்பொழுது தன்னுடைய அறுபது வயதினை கடந்தவராயிருக்கிறார்கள். என்னுடைய மனைவினுடைய தாயார், எழுபது வயது, எழுபத்தி ஒன்று ஆகப் போகிறது; அவரும் அங்கு எங்கோ இன்றிரவு பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர்களும் பூமியிலிருந்து போகத்தான் வேண்டும். என்னுடைய தந்தையை இங்கே அடக்கம் செய்துள்ளேன்; மனைவியை இங்கே வால்நட் ரிட்ஜ் என்ற இடத்தில் அடக்கம் செய்தேன்; என்னுடைய குழந்தை அங்கே வைக்கப்பட்டுள்ளது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 902 நானும்—நானும்—நானும் விரும்பவில்லை…நானும்—நானும்—நானும்—நானும் இங்கே தரித்திருக்க விரும்பவில்லை, அதாவது சீக்கிரத்தில் நான் போய்விட வேண்டியதாயிருக்கப்போகிறது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள். காரணம் அது என்னிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, நான் இதை என் பிரசங்கபீடத்தின் மேலுள்ள வேதாகமத்தின் முன்னே தொடர்ந்து கூறிவருகிறேன். 903 நான் என்னுடைய மனைவியினிடத்தில் கூறினபோது, அதாவது அவர்கள் இந்த சபைக்கு நான் திரும்பி வந்தபோது போதகர் இல்லத்தைக் கட்ட எங்களுக்கு பணத்தைக் கொடுத்த போது…இந்த சபைக்கே அந்த போதகர் இல்லத்தை சொந்தமாக கொடுத்துவிட்டேன்; அது அவ்வாறில்லையா என்று இங்கே போய் கண்டறியுங்கள். பாருங்கள், நான் அதை எனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டேன். 904 இப்பொழுது, நான் அங்கே கட்டப் போவதாயிருந்தபோது, மேடா, “நான் என்னுடைய தாயினிமித்தமாக இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றாள். 905 அப்பொழுது நான், “தேனே, நாம் நிச்சயம் அதைச் செய்யும்போது, நாம் அதைக் குறித்து வருத்தமடைவோம். புரிகிறதா? அது கிரியை செய்யாது. தேவனோ, ‘வேறு பிரித்துக் கொள்’ என்று கூறிவிட்டார், எனவே நான் அதைச் செய்ய வேண்டும்” என்றேன். 906 அதற்கு அவளோ, “என்னுடைய தாயாயாயிற்றே!” என்று கூறினாள். 907 அப்பொழுது நான், “என்னுடைய தாயையும் கூட. ‘ஆனால் தன்னுடைய சொந்தத்தை மறந்து என்னைப் பின்பற்றாதவன் என்னுடையவன் என்று அழைக்கப்பட பாத்திரன் அல்ல’ என்றாரே. அது உண்மையாயிற்றே” என்றேன். 908 என்றோ ஒரு நாள் சீக்கிரத்தில் நான் இங்கிருந்து போகவேண்டியிருப்பதை நான் உணருகிறேன், அதாவது இதைவிட்டுப் போகப் போகிறேன். ஆனால் இங்கே இந்தவிதமாக இருந்தால் கூட்டங்கள் இங்கே சரிவர நடைபெறாது. அது வேறெங்கும் நடப்பது போன்று இங்கு நடைபெறாது, கூட்டங்களில் கலந்து கொண்டுவந்துள்ள எந்த நபருமே அது உண்மை என்பதை அறிவர், ஏனென்றால் இது இங்கே நான் பிறந்த என்னுடைய சொந்த பட்டிணமாய் உள்ளது. அதுதான் இது. 909 இயேசுவானவர் வந்த போதும், இதேக் காரியத்தைக் கூறினார். 910 அவர்கள், “யார் இந்த நபர்? அதாவது அவர் இங்குள்ள தச்சனுடைய பையன் அல்லவா? அவர் எந்த பள்ளிக்குச் சென்றார்? அவர் இதை எங்கே கற்றுக் கொண்டார்? இப்பொழுது நீங்கள் செய்கிறதை…நான் பார்க்கட்டும்…நீ அற்புதங்களை இங்கே செய்தாய் என்று நீ கூறினாயே, நீ அதேக் காரியத்தை இங்கே செய்ய நான் காணட்டும். நீ கப்பர்நாகூமில் என்ன செய்தாயோ, அதை நீ இங்கு செய்ய நான் காணட்டும்” என்றனர். 911 இயேசு கூறினார்…அவர் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். அவர் திரும்பி, “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் உள்ள தன் ஜனங்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அது சரிதானே? 912 நாம் அறிவோம்…பாருங்கள்…பின்னி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், சாங்கி, மூடியை எடுத்துக் கொள்ளுங்கள்; ஜான் வெஸ்லியை எடுத்துக் கொள்ளுங்கள், பாருங்கள், அவர் தன்னுடைய தேசத்தை விட்டு செல்லும்வரை அவரால் ஒன்றுமே அதைக் குறித்து செய்ய முடியாதிருந்தது. மூடி அவர்களை நோக்கிப் பாருங்கள். மூடி பாஸ்டனில் ஒரு செருப்புத் தைப்பவராய் இருந்தபோது, அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அவர் புகழ் வாய்ந்தவறாவதற்கு முன்னரே அவர் சிக்காகோவிற்கு வந்து விட்டார். புரிகிறதா? அவர் தன்னுடைய சொந்த பட்டிணத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது. நீங்கள் எப்பொழுதுமே அதைச் செய்ய வேண்டும். 913 ஆனால் இப்பொழுது, இங்கே, நீங்கள் வில்லியம் பிரான்ஹாம் என்பதை மறந்துவிட்டால், வில்லியம் பிரான்ஹாம் இதனோடு எந்தக் காரியத்தையாவது செய்யமுடியும் என்பதை நீங்கள் மறந்துவிட்டால் தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பார், (புரிகிறதா) ஒருவர் மாத்திரமே உங்களுக்காக நின்று ஜெபிக்க முடியும். அது நீங்கள் செய்யும்படி கேட்டுக் கொண்டதை ஏற்கனவே செய்துவிட்ட இயேசு கிறிஸ்துவாகும். நீங்கள் அதை அப்படியே விசுவாசித்தால் நலமாயிருக்கும். புரிகிறதா? நான் செய்வதற்கு எந்தக் காரியமும் இல்லை…அதற்கு என்னோடு எந்த சம்மந்தமும் கிடையாது, சாட்சி மாத்திரமே பகருகிறேன். ஆனால் இங்கே உங்களோடு வளர்ந்து வந்தது போலவே, எனக்கு உள்ள ஒவ்வொரு களைப்பையும், நான் செய்கிற ஒவ்வொரு தவறையும்…நீங்கள் அறிந்துள்ளீர்கள். தேவன் இந்தப் பட்டிணத்தில் என்ன செய்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள், 914 இந்தப் பட்டிணம் நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு பெரிய கிரயத்தை ஒரு நாளில் செலுத்தும், ஏனென்றால் இங்கே (அது உண்மை), சரியாக இங்கே கோடிக்கணக்கான விசேஷித்த அற்புதங்கள் நடந்து வந்துள்ளன. அடையாளங்களும், அற்புதங்களும், இங்கே கீழே தூதனின் பிரசன்னமாகுதல், மற்றும் செய்த்தித்தாளில் வெளியான ஒவ்வொரு காரியமும், இன்னமும் ஜனங்கள்…அறியாதிருக்கின்றனர், அது ஏன்? 915 இப்பொழுது என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து போகப் போகிறேன். நானோ, “என்னுடைய முடிவு என்னவாயிருக்கும்? இது முற்று பெற்றுவிட்டதா? இதைக் குறித்து என்ன? எனக்கு நாற்பத்தியெட்டு வயதாகிறது. இது ஏறக்குறைய முடிவுற்றுவிட்டதா?” என்று வியப்புற்றுக்கொண்டிருக்கிறேன். நான் இதைக் குறித்து வியப்புறுகிறேன். அது… 916 பாருங்கள், அங்குள்ள அந்த புகைப்படத்தை ஏன் உலகம் தெளிவாக உணரவில்லை? ஏன் அதைத் துரிதமாக புரிந்து கொள்ள வில்லை? அவர்கள் ஏன் இந்த மற்றக் காரியங்களைப் புரிந்து கொள்கிறதில்லை? ஏன் அவர்கள் இந்த தீர்க்கதரிசனங்களையும் மற்றக் காரியங்களையும் புரிந்து கொள்கிறதில்லை? உங்களுக்குத் தெரியும், அவர்களால் அதை இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஒரு நாள் நான் இந்த உலகைவிட்டுச் செல்லப் போகிறேன், நான் செல்லும்போது, அப்பொழுது அவர்கள் அதை அடையாளங் கண்டு கொள்வார்கள். நான் போய்விட்டப் பிறகு உங்களில் சில வாலிப ஜனங்கள் அதை தெளிவாக உணருவார்கள். புரிகிறதா? ஆனால் அது இப்பொழுது புரிந்து கொள்ளப்பட தேவன் அனுமதிக்கமாட்டார். என்னவென்பதைப் பாருங்கள்…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] 917 ஒரு சிறு பெண்ணுடைய காப்பு. எவரேனும் அதைப் பெற்றுக்கொள்ளலாம். சகோதரன் சாத்மன் அவர்கள் கடந்த முறை இங்கே இருந்தபோது, அவர் ஒரு வேதாகமத்தை விட்டுச் சென்று விட்டதாகக் கூறினார் என்று நான் நினைக்கிறேன். எவரேனும் ஒரு வேதாகமத்தை தவறிப்போயிருந்த ஒரு—ஒரு வேதாகமத்தை இங்கே கண்டீர்களா? நீங்கள் அதைக் கண்டெடுத்திருந்தால், அது கனடாவிலிருந்து வந்துள்ள சகோதரன் பிரட் சாத்மன் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 918 கர்த்தாவே, இரக்கமாயிரும், இசையானது இனிமையாக இசைக்கப்படுகையில், சகோதரன் நெவில் எண்ணெயைப் பூசுகையில், நான் இயேசுவின் நாமத்தில் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கப் போகிறேன். கர்த்தாவே அவர்களுடைய சுகமளித்தலை அருளும். ஆமென். 919 இப்பொழுது ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். சரி. கர்த்தாவே, இந்த சிறு பிள்ளைக்காக அதனுடைய தாத்தா இங்கே நிற்கிறார். அந்தப் பிள்ளை பால் குடிக்க முடியாதபடி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீர் எல்லா வல்லமையையும் உடையவராயிருக்கிறீர், இந்த சிறுபிள்ளைத் தானே அதற்கான விசுவாசத்தை உடையதாயிருக்க முடியாது. ஆகையால் கர்த்தாவே, நான் அதற்காக விசுவாசத்தை உடையவனாய், அந்த பெற்றோரோடும், தாத்தாப் பாட்டியோடும் சேர்ந்து, அந்தக் குழந்தை பாலைப்பருகி, தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்க வேண்டும் என்று நாங்கள் இயேசுவின் நாமத்தில் கூறுகிறோம். ஆமென். அது அந்த விதமாகவே இருக்கும். ஓ, தேவனே, அவள் தன்னுடைய தகப்பனுக்காக ஜெபிக்கிறாள். நீர் அவளுடைய தகப்பனைக் குணப்படுத்தி, அவருக்கு தேவைப்படுகிறதை அவருக்குத் தரும்படி கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவளோடு ஜெபிக்கிறேன். ஆமென். 920 இப்பொழுது அது எளிமையாயிருக்கவில்லையா? ஜனங்கள் ஜெபிக்கிறார்கள், ஆனால் அதனால்தான் ஜனங்கள்…அவர்கள் ஒரு பெரிய காரியத்திற்காக எதிர்பார்த்து, அவர்கள் அதை சிக்கலாக்குகிறார்கள். தேவனோ அதை எளிமையாக்குகிறார். நீங்கள் அதை சிக்கலாக்கிவிட்டு, அதை தவறவிட்டுவிடுகிறீர்கள். புரிகிறதா? அப்படியே…அது தேவன் கூறினது போன்றே எளிமையாயிருக்கட்டும், தேவன் கூறினது போன்று, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று இருக்கட்டும். 921 கர்த்தாவே, நாங்கள் இந்த ஸ்திரீயின் மேல் கரங்களை வைத்து, இங்கே நின்று கொண்டிருக்கிற எங்களுடைய இந்த சகோதரி குணமடைவாளாக என்று நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டுக் கொள்கிறோம். ஆமென். 922 பிதாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வேதாகம நினைவு கூருதலின்படியும், கர்த்தருடைய போதனையின்படியும் எங்களுடைய சகோதரியின் மேல் கரங்களை வைக்கையில் அவள் குணமடைவாளாக. பிதாவே, நாங்கள் எங்களுடைய சகோதரியின் சுகமளித்தலுக்காக கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம், நாங்கள் உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, என்னுடைய சிந்தையில் ஒரு சந்தேகமும் இல்லாதிருக்கிறபடியால் நீர் அவளை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் அவள்…?…ஆமென். 923 பிதாவே, நாங்கள் எங்களுடைய சகோதரி மீது கரங்களை வைத்து, நீர் அவளைக் குணப்படுத்தி, அவளை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் எங்கள் சகோதரன் மீது கரங்களை வைத்து, நீர் அவரை தேவனுடைய மகிமைக்காக முழுவதும் சொஸ்தமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் சகோதரிக்கு எண்ணெய்யைப் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, அவளுடைய சுகமளித்தலுக்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் எங்களுடைய சகோதரன் மீது கரங்களை வைத்து, நாங்கள் அவருக்கு எண்ணெய்ப் பூசுகையில், நீர் அவரை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, இங்கே அவருடைய அன்பான மனைவி…?…அவளுக்கு எண்ணெய் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, அதை இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். 924 தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் குட்டி எடித்துக்கு எண்ணெய் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, நீர் அவளுடைய வேண்டுகோளை அருள வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். பிதாவே அவளுடைய தாயாருக்கும் கூட நாங்கள் எண்ணெய் பூசி, அவள்மேல் கரங்களை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக் கொள்கிறோம், அவள் முழுமையாய் சுகமடைவாளாக. 925 பிதாவே, நாங்கள் இந்த குடும்பத்தின் இந்த விலையேறப்பெற்ற சிறு சம்பத்திற்கு, சிறு இருதயத் துடிப்பிற்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எண்ணெய்யைப் பூசுகிறோம், ஒரு நாளில் அவரிடத்தில் சமர்ப்பிப்போம், நீர் அவளைக் குணப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்… 926 ஓ, தேவனே, நீர் எங்களுடைய சகோதரியின் வேண்டுகோளை அறிந்திருக்கிறீர், அவளுடைய தீரமான விசுவாசத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது அவள் கேட்டுள்ள அந்தக் காரியங்கள் தாமே…?…அவள் சிறுமியாயிருந்தபோது அவள் விளையாடினாள், தேவனே சத்துரு அந்த ஸ்திரீயை விடுவிப்பானாக, அவள் சுகமாய் வீட்டிற்கு வருவாளாக. நாங்கள் அந்த மனிதனுக்காகவும் கூட ஜெபிக்கிறோம், அதற்காகவே அவள் வேண்டிக் கொண்டாள், நீங்கள் என் நாமத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன் என்று நீர் வாக்களித்திருக்கிறீர். நீர் இந்த வேண்டுகோளை இயேசுவின் நாமத்தில் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 927 கர்த்தாவே, என் சகோதரனுடைய நெற்றியில் உள்ள இந்த நரம்பு மரித்துக்கொண்டிருக்கிறபடியால், நாங்கள் அது ஜீவனைப் பெறுவதற்காக வேண்டிக் கொள்கிறோம், நாங்கள் அவர் மேல் கரங்களை வைக்கையில், அந்த நரம்பு குணமடைய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக் கொள்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் எண்ணெய்யை எங்களூடைய சகோதரியின் மீது பூசினப் பிறகு, அவள் மீது கரங்களை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 928 பரலோகப் பிதாவே, நீர் கொண்டுவந்துள்ள அநேக மகத்தான வெற்றிகளுக்காக எங்களுடைய சகோதரி நின்றிருக்கிறபடியால், அவள் உம்முடைய ஊழியக்காரர்களில் ஒருவருக்காக, ஒரு ஊழியக்காரருக்காக மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருக்கிறாள்; அவர் எதனூடாக செல்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறபடியால், எங்களுடைய இருதயத்தின் பரிவிரக்கம் அவருக்காகச் செல்கிறது. தேவனே, அவருக்காக இங்கு நின்று கொண்டிருப்பதற்காக எங்களுடைய சகோதரியை நீர் அபிஷேகிக்க வேண்டும் என்றும், அவருடைய சுகமளித்தலுக்காக அவரையும் அபிஷேகிக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். நான் கிறிஸ்துவினுடைய நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்…?…கர்த்தர் அறிந்திருக்கிறார்…?… 929 நல்லது. நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அது உண்மையாகவே கர்த்தருடைய அபிஷேகமாயுள்ளது. தேவனாகிய கர்த்தாவே, இந்த ஸ்திரீ அநேக ஆண்டுகளாக போராடி வந்த ஒரு பிசாசினிடத்திலிருந்து விடுவிக்கப்படும்படியாக அவள் கதறியப் பிறகு, அவள் பீடத்தண்டை கிடந்து எப்படி செய்ய வேண்டும் என்று அவள் அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் அவள் செய்திருந்த பிறகு, ஒரு நாள் அங்கிருந்த வீட்டண்டை அவள் வந்த போது, ஆவியானவர் இறங்கி வந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினார். அதற்கு கர்த்தர் உரைக்கிறதாவது தேவைப்பட்டது. இப்பொழுது அவள் தன்னுடைய சகோதரியினுடைய குழந்தை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பதற்காகவும், ஒரு வயது ஏற்கெனவே பூர்த்தியாகியும் நடக்க முடியாமல் இருப்பதற்காகவும் வந்திருக்கிறாள். கர்த்தாவே, நீர் அவளுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயும், சகோதரியோ வித்தியாசமாயுங்கூட காணப்படுகிறாள். நீங்கள் இப்பொழுது மரிப்பதிலிருந்து ஒரு நீண்ட பாதையில் இருக்கிறீர்கள், நீங்கள் அவ்வாறில்லையா? பிதாவாகிய தேவனே, நாங்கள் எங்களுடைய சகோதரிக்கு எண்ணெய் பூசி, அவள் மேல் கரங்களை வைத்து, நீர் கூறியுள்ள, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்ற இந்த காரியத்தை வேண்டிக்கொள்கையில், நீர் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் விசுவாசிகளாயிருக்கும்படியாக அறிக்கை செய்கிறோம், ஆகையால் நீர் இயேசுவின் நாமத்தில் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்…?… 930 பிதாவாகிய தேவனே, இந்த சிறு ஸ்திரீ தன் இருதயத்தை ஊற்றியிருக்கிறபடியால், நீர் அவளுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், நீர் அவளிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்றும், அவள் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை அவளுக்கு அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ, பிதாவாகிய தேவனே, அவளுடைய குடும்பதிற்காகவும், அவளுடைய பிள்ளைகளுக்காகவும், விசேஷமாக அவளுடைய பையனுக்காகவும் நீர் இந்தக் காரியங்களை அருள வேண்டும் என்று தேவனே என் முழு இருதயத்தோடு இப்பொழுது நான் ஜெபிக்கிறேன்…?…நான் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். பிதாவாகிய தேவனே, நாங்கள் இந்த ஸ்திரீக்கு எண்ணெய் பூசி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவளுக்காக ஜெபிக்கையில், நீர் அவளை குணப்படுத்தி, தேவனுடைய மகிமைக்காக அவளை முழுவதும் சொஸ்தப்படுத்தும். 931 உங்களுடைய பெயர் வெஸ்ட் என்பது தானே, அப்படித்தானே! பிதாவே, நாங்கள் இந்த பெண்மணிக்காக ஜெபிக்கிறோம். அவள் தன்னுடைய தகப்பனாருக்காக வேண்டிக் கொள்கிறாள். இப்பொழுது, கர்த்தாவே நீர் அந்த தகப்பனுடைய இருதயத்தில் பேசி, அவளுடைய தந்தையை அவளுக்குத் தந்தருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அவள், அவருடைய சொந்தப் பிள்ளை, அவருடைய கற்பப்பிறப்போ அவர் இப்பொழுது இருக்கிறதுபோல உலகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. பிதாவே, நீர் அவருக்கு இரக்கமாயிருக்க வேண்டும் என்று கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். 932 என் மகனே, தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ கேட்டுக் கொண்டுள்ள காரியத்தை உனக்குத் தந்தருள்வாராக. அன்புள்ள தேவனே, நாங்கள் இரக்கத்திற்காகவும், அவளுக்காகவும் ஜெபிக்கிறோம், நாங்கள் அவளுக்கு எண்ணெய் பூசுகையில்…?…நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.